Thursday 25 April 2013

நிழல் மனிதர்கள்.....!

                                                      

                        இந்த உலகம் பொய், இங்குள்ள வாழ்க்கை பொய். 
                        பணம் பொய், பதவிகள் பொய்.
                        பட்டங்கள் பொய்,  சட்டங்கள் பொய்,
அழகு பொய், அசிங்கம் பொய்,
சுகம் பொய், துக்கம் பொய்.
 மன்னவனும்,மாநபியும் போதித்த மறுமை மட்டுமே மெய்.
அங்குள்ள சுகம் மெய், துக்கம் மெய்.
துன்பங்கள் மெய், இன்பங்கள் மெய்.
சொர்க்கம் மெய், நரகம் மெய்.
நல்லவர்களுக்கான பட்டங்கள் மெய், 
தீயவர்களுக்கான தண்டனைகள் மெய். 
இவை அனைத்தும் நம்மிடம் இருக்க வேண்டிய இறைநம்பிக்கை.


மறுமையின் கடுமையை உணர்த்தும் இறை செய்திகள்;
                                                                                           يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه 
 وخرجا من حديث أبي هريرة عن النبي صلى الله عليه وسلم ، قال : يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهمفي الأرض سبعين                    ذراعا ، ويلجمهم حتى يبلغ آذانهم ولفظه للبخاري    ..  

அதி பயங்கரமான மறுமையில் சில மனிதர்கள் மட்டும் இறையருள் பெற்று அவனது அர்ஷுக்கு கீழ் நிழல் பெரும் பாக்கியம் பெறுவார்கள். 

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : " سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ، إمام عادل وشاب نشأ في عبادة الله ، ورجل قلبه معلق بالمساجد ، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله . ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ، ورجل ذكر الله خالياً ففاضت عيناه " متفق عليه

நமது நமது ஜும்ஆ பேருரையின் நோக்கமும் நிழல் பெரும் மனிதர்களை மையமாகக் கொண்டே உருவாக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களை வரிசைப் படுத்துவோம்.


  1.  மான்புணர்ந்து நோன்பிருந்தவர்கள் மறுமையின் நிழல் மனிதர்கள்!      
மறுமையில் அர்ஷின் நிழலுக்கு கீழ் ஒரு விரிப்பு விரிக்கப் பட்டிருக்கும், அதில் சில மனிதர்கள் அமர்ந்து சாப்பிட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்க்கும் மனிதர்களில் சிலர் நாங்கள் பசியிலும்,பயத்திலும் இருக்க இவர்கள் மட்டும் உல்லாசமாக சாப்பிட்டுக் கொண்டிருக் கிறார்களே இவர்கள் யாரென்று கேட்பார்கள்? இவர்கள்தான் உலகில் வாழும்போது காலை முதல் மாலை வரை அல்லாஹ்விற்காக தங்களின் ஆசைகளையும்,உணர்வுகளையும் கட்டுப்படுத்தி நோன்பு நோற்றவர்கள் என்று பதில் சொல்லப்படும்.  ‌خطبات منور


2. நீதி வழுவா  மன்னர்கள் தீர்ப்பு நாளின்  நிழல் மனிதர்கள்:                                                                                                                                                                  إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها   
      (4:58) وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصير

இன்றைய அரசியல் வட்டாரங்களில் அழிந்துபோன பல நல்ல விஷயங்களில் நீதியும் ஒன்று. செல்வமும், செல்வாக்குமுள்ளவர்கள் வெற்றி பெறுவதும், ஏழைகள் தோற்பதும் நீதிமன்றங்களில் வாடிக்கையாகி விட்டது. கெஞ்சி, கூத்தாடி இந்த ஒருதடவை எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று காலில் விழாத குறையாய் ஓட்டு வாங்குபவர்கள், நாற்காலி கிடைத்ததும் ஒட்டாளிகளை ஓட்டாண்டிகளாக்கி விட்டு நான்குகால் பாய்ச்சலில் ஓடி ஒளிந்து விடுகிறார்கள். தன் குடும்பம்,தன வட்டம்,தன்னலம் என்ற குறுகிய மனப்பான்மையிலேயே பிறர்நலம் பற்றிய அக்கறையில்லாமல் இன்றைய தலைவர்கள் மாறிவிட்டார்கள்.    

ஆட்சிக்கு ஓர் அபூபக்கர் (ரலி):
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு தனது வியாபார பொருட்களை எடுத்துக் கொண்டு கடைவீதிக்குப் புறப்பட்ட அபூபக்கரை உமர்(ரலி) நிறுத்திக் கூறினார்கள். நீங்கள் இப்பொழுது முஸ்லிம்களின் தலைவர், நீங்கள் பொறுப்பிலிருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பைத்துல்மாலிலிருந்து குறிப்பிட்ட தொகையை சம்பளமாக நிர்ணயிக்கலாம் என்றுகூறி அபூபக்கரை பைத்துல்மால் பொறுப்புதாரி அபூஉபைதா (ரலி) அவர்களிடம் அழைத்துச் சென்றாகள்.
அங்கு அவர்களுக்கு  சம்பளம் நிர்ணயிக்கப் பட்டது. இவர்களது சம்பளத்திலிருந்து அபூபக்கரின் மனைவி சிறிது தொகையை சேமித்து வைத்தபோது அதையும் அன்னாரிடமிருந்து வாங்கி பைத்துல்மாலில் சேர்த்து விட்டார்கள். மேலும் தன சம்பளத்தை குறைக்குமாறும் கேட்டுக் கொண்டார்கள்.  இஸ்லாமிய ஜனாதிபதியின் நிலை பார்த்தீர்களா!  

இன்றைய பாரதப் பிரதமரின் சம்பளம் என்ன தெரியுமா?!

*salary:          Rs,      50,000
*sumotuary:    Rs,       3000
*D.A:              Rs       62,000
*constituency: Rs       20,000
நமது பிரதமரின் மாதச் சம்பளம்:  1,35,000
ஆண்டு வருமானம்                        16, 20000
சட்டமன்ற உறுப்பினர்களின்  தொகுதிப் படி உட்பட மாதச் சம்பளம்: 55,000
இந்த போதாத சம்பளத்தை வைத்துக் கொண்டு நீதமாக நடக்க முடியுமா? மானங்கெட்ட தலைவர்களுக்கு இந்த சம்பம் போத வில்லையாம்!    

இவ்வளவு போதாதென்று லஞ்சம், ஊழல்,மோசடி வேறு. ஒரு கவிஞன் கூறினான், 
          வீட்டில் ஊழல், காட்டில் ஊழல்,
          பீரங்கியில் ஊழல்,ராணுவத்தில் ஊழல், 
         வீரப்பன்னிலும் ஊழல், வங்கியிலும் ஊழல், 
         சாகலாம் என்றால் சவப் பெட்டியிலும் ஊழல்.
இந்த ஊழல் பெருச்சாளிகளிடம் எப்படி நீதம் இருக்கும்?!

உண்மைக்கு ஓர் உமர் (ரலி):
அபூபக்கரின் மறைவிக்குப் பிறகு உலகமே வியக்குமளவிற்கு ஆட்சி புரிந்தவர்கள் உமர் ரலி. இவர்களது ஆட்சியில்தான் அனாதைகள், ஆதரவற்றோர், முதியோர்கள், விதவைகள், வறுமையில் வாடியவர்களுக்கெல்லாம் அரசு உதவித் திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டது. உமரின் ஆட்சியில் தான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் எல்லைகள் விரிய ஆரம்பித்தன.ஆங்கிலேய ஆட்சிமுறைகள் அனைத்தும் உமரைப் பார்த்து காப்பியடிக்கப் பட்டவை தானே!
உமர் ரலியின் வாழ்வில் ஒருநாள், யுத்தப் பொருட்கள் பங்கீடு செய்யப்பட்டன. அதில் யுத்தத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் தலா ஒரு போர்வை கிடைத்தது. ஒருநாள் உமர் ரலி அவர்கள் ஜும்ஆ தொழ வைப்பதற்காக பள்ளிக்கு வந்தார்கள், அவர்களது மேனியில் இரண்டு போர்வை இருந்து. இதைப் பார்த்த சஹாபிகளில் ஒருவர், உமரே! நில்லும், எல்லோருக்கும் தலா ஒரு போர்வைதானே  கிடைத்தது, உங்களுக்கு மட்டும் எப்படி இரண்டு போர்வை கிடைத்தது? இதற்கு நீங்கள் பதில் சொல்ல வில்லையானால் உங்கள் பின்னால் இன்று நாங்கள் தொழப் போவதில்லை என்றார். 
இதைக் கேட்டதும் உமர் ரலிக்கு கோபம் கொப்பளிக்க வில்லை, பழிவாங்கும் எண்ணம் துளிகூட இல்லை,கண்ணியக் குறைவை ஏற்படுத்தும் பெண்ணியச் சிந்தனை  இல்லை.
அமைதியாய் இதற்கு என்மகன் பதில் சொல்வார் என்றார்கள். உடனே அப்துல்லா ஹிப்னு உமர் (ரலி) கூறினார்கள்.அன்பரே!நானும் அந்த யுத்தத்தில் கலந்து கொண்டேன்,என்பங்கிற்கும் ஒரு போர்வைக் கிடைத்தது.   
அதை என் தந்தைக்கு கொடுத்து விட்டேன் என்றார். அதன் பிறகுதான் தொழுகை நடத்தப் பட்டது.                                                                           ‌خطبات منور 
பசியால் ஒரு நாய் இறந்தால்கூட அதற்கும் இந்த உமர் நாளை பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்றார்கள். நீதம் தவறாத உமர் ரலி அவர்கள்.
இது போன்ற நீதவான்களுக்கு மாநபியின் மணிமொழி :  
      ان المقستين عند الله عند الله منابرمن نور الذين يعدلون في حكمهم واهليهم وما ولو رواه مسلم
     
நிழல் மனிதர்களில் மூன்றாமவர் இன்ஷா அல்லாஹ்  வரும்வாரம்.
                                      

Thursday 18 April 2013

இறைசக்தியே நிறைசக்தி ! (அல்லாஹ்வே போதுமானவன்!)

உலகம் சோதனைக் களம்,இஸ்லாத்தின் பார்வையில் சிறைச்சாலை.இங்கு இன்பமும் , துன்பமும் மாறிமாறி வரும்.துன்பத்தின் போது மனிதனையோ,பிரசக்திகளின் மீதோ ஏன்  மலக்குகளின் மீதோ கூட நம்பிக்கை வைக்கக்கூடாது.இறை சக்தியின் மீது மட்டுமே நம்பிக்கை வைக்கவேண்டும்.இறைசக்தி என்பது மனித சக்திகளோடு ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரு அபார சக்தி.

டைட்டானிக் கப்பலை அறிமுகப்படுத்தும் போது இந்தக் கப்பல் நீரில் மூழ்காது,உடையாது என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அறிமுகத்தில்கூட அவ்வளவு பிரபல்யமாகத கப்பல் இரண்டுதுண்டாக உடைந்து நீருக்கு அடியில் மூழ்கிய பிறகுதான் அவ்வளவு பிரபல்யமானது. மனித சக்தியை நீரின் சக்தி மூழ்கடித்துவிட்டது. அதற்காக நீரின் சக்தியை இறை சக்தியோடு ஒப்பிட முடியுமா? 

 {فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحاً صَرْصَراً} [فصلت:16].
 { كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ } 
இந்த ஆயத்துகள் காற்றின் சக்தியை தெளிவு படுத்துகிறது. நமக்கு முன் வாழ்ந்த பலசாலி சமூகத்தை எப்படி புரட்டிப் போட்டது! ஏன் "தானே" புயல் அமெரிக்காவை எப்படி துவம்சம் செய்தது. அதற்காக காற்றின் சக்தியை இறை சக்தியோடு  ஒப்பிடமுடியுமா?

காஷ்மீரில் நடந்த பூகம்பம் முதல் குஜராத் தொட்டு இந்தோனிஷியா வரை நடந்த பூகம்பங்கள், மண்ணின் சக்திக்கு முன்னால் மனித சக்தி வெறும் மண் என்பதை நிரூபித்ததே! அதற்காக மண்ணின் சக்தியை இறைசக்தியோடு ஒப்பிட முடியுமா?

ரஷ்யாவில் ஒரு இடத்தில் பெரும் ஜுவாலையொடு பல ஆண்டுகளாக ஒரு நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. அந்த நெருப்பை அணைத்தால் பல கோடி ரூபாய் தருவதாக ரஷ்யா அறிவிப்பு செய்திருக்கிறது. யாரும் அணைக்க முன்வரவில்லை.அதற்காக நெருப்பின் சக்தியை இறை சக்தியோடு ஒப்பிட முடியுமா? 

இந்த எல்லா சக்திகளைவிடவும் இறைசக்தி உயர்ந்தது. இறை சக்தி என்பது மனித சிந்தனைக்கு அப்பாற்ப்பட்டது. என்பதை எல்லோரும் விளங்க வேண்டும்.
எனவே என்துன்பங்களை முழுவதுமாக துடைத்து இன்பவெள்ளத்தில் என்னை புரளவைக்கும் ஒரே சக்தி, என்னிறைவனின் சக்தி என்ற எண்ணமும் உறுதியும் வேண்டும். இந்த எண்ணமும் உறுதியும்தான் நமக்கு வெற்றியை ஈட்டுத் தரும்.

"அலி(ரலி)யின் ஆட்சிகாலம். எதிரிகள் சூழ்ந்திருந்த நேரம். மக்களில் சிலர் அலிக்கு பாதுகாப்பாக வந்து நின்றபொழுது அலியவர்கள் கேட்டார்கள்; நீங்கள் தரும் பாதுகாப்பு வானத்தின் ஆபத்துக்கா? பூமியின் ஆபத்துக்கா? என் இறைவன் முடிவு செய்து விட்டால் எந்த ஆபத்தையும் யாரும் தடுக்க முடியாது. எனவே எனக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்."

"நிஹாவந்த் என்ற யுத்தத்திற்கு அலி (ரலி) புறப்படும்போது சில ஜோசியக்காரர்கள் வந்து அலியிடம் கூறினார்கள், நட்சத்திரம் ஒன்று திசைமாறி இருக்கிறது, எனவே யுத்தத்திற்கு செல்லவேண்டாம் என்று தடுத்தபொழுது எனக்கு இதன்மீது நம்பிக்கையில்லை; என் இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து செல்கிறேன் என்று புறப்பட்டு சென்று பெரும் வெற்றியோடு திரும்பின்னார்கள்."

عن أبي العباس عبد الله بن عباس رضي الله عنهما قال : كنت خلف النبي صلى الله عليه وسلم يوما ، فقال : ( يا غلام ، إني أُعلمك كلمات : احفظ الله يحفظك ، احفظ الله تجده تجاهك ، إذا سأَلت فاسأَل الله ، وإذا استعنت فاستعن بالله ، واعلم أن الأُمة لو     اجتمعت على أَن ينفعـوك بشيء ، لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ، وإن اجتمعوا على أن يضروك بشيء ، لم يضروك إلا             بشيء قد كتبه الله عليك، رفعت الأقلام وجفت الصحف ) رواه الترمذي وقال : حديث حسن صحيح .
இந்த ஹதீஸுக்கு இலக்கணமாய் சஹாபாக்கள் விளங்கினார்கள் என்பதற்கு அலி (ரலி) அவர்கள் மிகச்சரியான சான்றாய் அமைந்தார்கள்.

மாநபி (ஸல்) அவர்கள், பத்ரு யுத்தத்தில் இறைவனின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார்கள். இறைவன் கூறுவான், நீங்கள் அவர்களை கொல்லவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். ( فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى)

எனவே எந்த சூழலிலும் இறைசக்தியின் மீது முழுவதுமாக நம்பிக்கை கொண்டு வெற்றிபெறும் توفيق ஐ  அல்லாஹ் தருவானாக!



Thursday 11 April 2013

மாசகற்றும் மார்க்கக் கல்வி!


மனித வாழ்க்கை ஒரு அமானிதம் மனித வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்ட நமது பிள்ளைகள் மிகப் பெரும் அமானிதம். அந்த அமானிதங்களை மிகச்சரியாக பெற்றோர்கள் வார்த்தெடுக்க வேண்டும்.பாசத்தைப் பொழிகிற பெற்றோர்கள் அவர்களது மார்க்க அறிவில் அதிக
கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில்
   
அல்லாமா இக்பால் கூறுவார்கள்;  மனிதன் பறக்கக் கற்றுக் கொண்டான்; மனிதன் நீந்தக் கற்றுக் கொண்டான்; மனிதன் மனிதனாக வாழக் கற்றுக் கொள்ளவில்லை; ஆம்! மனிதனை மனிதனாக வாழக் கற்றுக் கொடுப்பதே மார்க்கக் கல்விதான்.  மார்க்கல்வி ஒன்றுதான்  மனிதனுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும்.ஒழுக்கம்தான் மரியாதையையும்,பாதுகாப்பையும் கொடுக்கும்.
 எனவே பெற்றோர்கள் பிள்ளைகளின் ஒழுக்க விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்..
மாநபி (ஸல் )கூறினார்கள
                                             حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا عَامِرُ بْنُ أَبِي عَامِرٍ الْ
خَزَّازُ حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُوسَى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ "مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ"
 رواه الترمذي 1875 واحمد 14856
           

“ஒரு தந்தை பிள்ளைக்கு அழகிய ஒழுக்கத்தை விட சிறந்த ஒரு வெகுமதியை தந்திட இயலாது.” 

அந்த ஒழுக்கத்தை சிறுபிள்ளையிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். இதோ அன்புமகளுக்கு  நபியின் போதனை. இந்த போதனைகள் பாத்திமாவை எப்படியெல்லாம் வாழவைத்தது என்பதை நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.


அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள் உச்சகட்டமான ஒழுக்கக் கேடுகள் தலைவிரித்தாடிய காலத்தில் வாழ்ந்தவர்கள்.
இன்றைய நவீன ஜாஹிலிய்யாவை விட பண்டைய ஜாஹிலிய்யா மிக மோசமானதே.

திருமண வாழ்க்கைக்கும்- விபச்சாரத்திற்கும் வித்தியாசமில்லாத காலம் அது.

அக்காலத்தில் ஒழுக்கக் கேடுகளுக்கு அஞ்சி ,கண்ணியமான குடும்பத்தார்கள் பெண் பிள்ளைகளை சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள்.

அத்தகைய மோசமான காலத்தில் மிக ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் தான் அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள்.
இத்தனைக்கும் அவர்களின் திருமணம் மிக தாமதாகவே நடந்தது. இன்னும் சொல்வதெனில், நபி(ஸல்) அவர்களின் பெண் பிள்ளைகளிலேயே மிகவும் தாமதமாக அவர்களுக்கு தான் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது அவர்களின் வயது 20 ஆகும். (ஏனெனில் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு பத்ரு போருக்கு பின்பு தான் அவர்களுக்கு திருமணம் நடந்தது. நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து ஆறு மாதத்திற்குள் அவர்கள் மரணமடைந்தார்கள்.மரணித்தின் போது வயது 28 )

திருமணம் பேசி வைக்கப்பட்டு, நாளும் குறிக்கப்பட்ட பிறகு ஓடிப் போகும் பெண்கள் அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.

மக்கா வாழ்க்கையில் அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள் திருமணம் குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாமல் இருந்தது.

திருமணம் அவர்களுக்கு கானல் நீராகவே இருந்தது.
அவர்களின் வீட்டில் ஏற்கனவே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு, கொடியவன் அபூலஹபின் இரு மகன்களால் காழ்ப்புணர்ச்சின் காரணமாக தலாக் விடப்பட்ட இரண்டு சகோதரிகள் (ருகையா- உம்மு குல்சூம்) இருக்க, வயதுக்கு வந்த பருவ மங்கையாக இருந்த அவர்களுக்கு திருமணம் நினைத்துக் கூட பார்க்க முடியாமல் இருந்தது.

தாய் உயிருடன் இல்லை. தந்தையின் உயிருக்கு விலை வைக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் ஒழுக்கமாகவும் , பொறுமையாகவும் வாழ்ந்தார்கள் அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள்.

சிறிதளவு அவர்கள் பிசகியிருந்தால் கூட எதிரிகள் நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கோ மக்கா வாழ்க்கையில் மகளின் திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கு கூட நேரமில்லாமல் இருந்தது. அவ்வளவு நெருக்கடிகள் அங்கே அவர்களுக்கு தரப்பட்டு வந்தன.

அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள் பொறுமையாக இருந்ததற்கும், ஒழுக்கமாக இருந்ததற்கும் காரணம் எது தெரியுமா?

நபி (ஸல்) அவர்கள் ஊட்டிய இறையச்சமும், ஒழுக்கப் பயிற்சியும் தான்.

அன்னை ஃபாத்திமாவுக்கு ஐந்து வயதாக இருக்கும் பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் தரப்பட்டது.
சிறுமியான அன்னை ஃபாத்திமாவுக்கும் ஈமானிய பயிற்சியை நபி (ஸல்) அவர்கள் தரவே செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமாவிடம் இவ்வாறு பிரச்சாரம் செய்ததாக ஹதீஸ்களில் நாம் காணலாம்.
يَا فَاطِمَةُ أَنْقِذِي نَفْسَكِ مِنْ النَّارِ فَإِنِّي لَا أَمْلِكُ لَكُمْ مِنْ اللَّهِ شَيْئًا غَيْرَ أَنَّ لَكُمْ رَحِمًا سَأَبُلُّهَا بِبَلَالِهَا  رواه مسلم 303
இது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நடந்த பிரச்சாரமாகும்.

மரணத்திலும் ஒழுக்கத்தை கட்டிக் காத்த அன்னை
இவ்வுலக வாழ்க்கையில் ஒழுக்கமாக வாழ்ந்த அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள் மரணத்திற்கும் பின்பு தமது ஒழுக்கத்தை சிந்தித்தார்கள்.

தன்னை கணவர் அலீ (ரழி) மற்றும் சிறிய தந்தையின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரழி) இருவர் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும், சன்தூக் (பெட்டி) இல் வைத்து தூக்கி செல்ல வேண்டும், இரவில் அடக்கம் செய்ய வேண்டும்  என மூன்று வஸிய்யத்கள் செய்து இருந்தார்கள்.
ولما حضرها الموت قالت لأَسْمَاء بِنْت عميس: يا أَسْمَاء، إني قد استقبحت ما يُصنع بالنساء، يطرح على المرأة الثوب فيصفها. قالت أَسْمَاء يا ابنة رسول الله صلّى الله عليه وسلّم، ألا أريك شيئاً رأيته بأرض الحبشة؟ فدعت بجرائد رطبة فحنتها، ثم طرحت عليها ثوباً. فقالت فاطِمَة: ما أحسن هذا وأجمله! فإذا أنا متُّ فاغسليني أنت وعليّ، ولا تُدخلي عليَّ أحداً. فلما توفيت جاءت عائشة، فمنعتها أَسْمَاء، فشكتها عائشة إلى أبي بكر وقالت: هذه الخثعمية تحول بيننا وبين بِنْت رسول الله صلّى الله عليه وسلّم، وقد صنعت لها هودجاً؟! قالت: هي أمرتني ألاّ يدخل عليها أحد، وأمرتني أن أصنع لها ذلك. قال: فاصنعي ما أمرتك. وغسَّلها عليّ وأَسْمَاء.
وهي أول من غُطّي نعشها في الإسلام، ثم بعدها زينب بِنْت جحش. وصلى عليها علي بن أبي طالب. وقيل: صلى عليها العَبَّاس. وأوصت أن تدفن ليلاً، ففعل ذلك بها. (  اسد الغابة)
குளிப்பாட்டும் இடத்துக்கு அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஒழுக்கமான வாழ்வே வாழ்வில் உயர்வை தரும்
ஃபாத்திமாவுக்காக மறுமையில் எல்லோரும் பார்வையை தாழ்த்துவார்கள்
4711 - أخبرنا أبو بكر محمد بن عبد الله بن عتاب العبدي ، ببغداد ، وأبو بكر بن أبي دارم الحافظ ، بالكوفة ، وأبو العباس محمد بن يعقوب ، وأبو الحسين بن ماتي ، بالكوفة ، والحسن بن يعقوب ، العدل ، قالوا : ثنا إبراهيم بن عبد الله العبسي ، ثنا العباس بن الوليد بن بكار الضبي ، ثنا خالد بن عبد الله الواسطي ، عن بيان ، عن الشعبي ، عن أبي جحيفة ، عن علي عليه السلام قال : سمعت النبي صلى الله عليه وسلم يقول : « إذا كان يوم القيامة نادى مناد من وراء الحجاب : يا أهل الجمع ، غضوا أبصاركم عن فاطمة بنت محمد صلى الله عليه وسلم حتى تمر » « هذا حديث صحيح على شرط الشيخين ، ولم يخرجاه »  رواه الحاكم والطبراني
சுவர்க்கத்தின் தலைவி எனும் உயர்வு
3808 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ ابْنُ عَثْمَةَ قَالَ حَدَّثَنِي مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ عَنْ هَاشِمِ بْنِ هَاشِمٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ وَهْبٍ أَخْبَرَهُ أَنَّ أُمَّ سَلَمَةَ أَخْبَرَتْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا فَاطِمَةَ يَوْمَ الْفَتْحِ فَنَاجَاهَا فَبَكَتْ ثُمَّ حَدَّثَهَا فَضَحِكَتْ قَالَتْ فَلَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلْتُهَا عَنْ بُكَائِهَا وَضَحِكِهَا قَالَتْ أَخْبَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يَمُوتُ فَبَكَيْتُ ثُمَّ أَخْبَرَنِي أَنِّي سَيِّدَةُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ إِلَّا مَرْيَمَ ابْنَةَ عِمْرَانَ   

நன்றி; vellimedainew                                                                         فَضَحِكْتُ رواه الترمذي
இந்த போதனைகளை நம்பிள்ளைகளுக்கு எப்போது கற்றுக்கொடுக்கப் போகிறோம். மேலைநாட்டுப் படிப்புகளின் மீது ஆர்வம் கொண்ட பெற்றோர்களே!மேலைநாட்டுப்  படிப்பின்  லட்ச னம் என்னதெரியுமா?
வருடத்திற்கு அமெரிக்காவில் மட்டும் 15லட்சம் கருக்கலைப்புகள் நடக்கிறது.48%பெண்கள் திருமணத்திற்கு முன்பே பிள்ளைகளைப் பெறுகிறார்கள்.நூற்றுக்கணக்கான பிள்ளைகள் பிறந்ததும் கொள்ளப்படுகின்றன.
எனவே மார்க்கக் கல்வியின் மீதான ஆர்வத்தை நமது பிள்ளைகளுக்கு ஊட்டவேண்டும்.உலகமே போற்றுகின்றசஹாபிகளும்  இமாம்களும் மார்க்க மேதைகளும் தத்தமது மார்க்க ஞானத்தால் இவ்வுலகிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு வரலாறுகள் நிறைந்து காணப்படுகின்றன.

கல்விப் பட்டணத்தின் சாவி,இமாமுனா அலி (ரலி) கூறினார்கள்; நான் வருடத்திற்கு 40000 தீனார்கள் ஜகாத் கொடுக்கிறேன் என்றார்கள்.நமது கணக்குப்படி 436800000ரூபாய் ஆகிறது. 

சட்டமேதை ஷாபி ரஹ் அவர்களின் மார்க்கக்கல்வியின் மீதான ஆர்வத்தைப் பாருங்கள்.

ஒருநாள் இமாம் முஹம்மது ரஹ் அவர்களிடம் சில மனிதர்கள் வந்து உங்கள் ஊரில் தாங்கள் நடத்தும் உபதேசங்கள் போன்று எங்களது ஊரிலும் உபதேசம் செய்யவேண்டுமென்று வேண்டிக் கொண்டபொழுது பலமுறை மறுத்து பிறகு நிர்பந்தமாக ஏற்றுக்கொண்டார்கள்.இந்நிலையில்தான் இமாம் ஷாபிஈ ரஹ் அவர்கள்,இமாம் முஹம்மது ரஹ் அவர்களிடம் வந்து எனக்கும் தாங்கள் கல்வி கற்றுத்தரவேண்டும் என்று வேண்டியபோது இமாம் முஹம்மது ரஹ் நேரமில்லைஎன்று மறுத்துவிட்டார்கள்.இமாம்ஷாபிஈ கூறினார்கள்;தாங்கள் பக்கத்து ஊருக்கு வாகனத்தில் புறப்படும் பொழுது நான் உங்களது வாகனத்துக்குப் பின்னால் ஓடிவருகிறேன்.நீங்கள் வாகனத்தில் அமர்ந்தவாறு பாடம் நடத்துங்கள்,நான் பின்னாலோடியவாறே பாடம் படித்துக் கொள்கிறேன் என்றார்கள். மார்க்ககல்வியின் மீதான ஆர்வம் உலகில் சட்டமேதை அளவிற்கு அவர்களை உயர்த்தியது.
எனவே இஸ்லாமியப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வியின் மீதான ஆர்வத்தை அதிகப் படுத்தவேண்டும். உலக மாசுகளை அகற்றும் ஒரே கல்வி மார்க்கக் கல்வி என்பதை விளங்க வைக்கவேண்டும். 
அல்லாமா ரூமி கூறினார்கள்;900ஆண்டுகள் ஆட்சிபுரிந்த ஸ்பெயின் இன்று நமது கைகளில் இல்லை. ஸ்பெயினின் நிலை உங்களது பகுதிகளுக்கும் ஏற்படக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் உங்களது பள்ளிவாசல்களில்நடக்கும் மதரசாக்களைப் பலப்படுத்துங்கள் என்றார்கள். எனவே இது விஷயங்களில்இமாம்களாகிய நாமும் கவனம் செலுத்த வேண்டும்.

அல்லாஹ் அருள் புரிவானாக! 









Thursday 4 April 2013

சுகம் தரும் சுத்தம் ...!

ஏப்ரல் 7 உலக சுகாதார தினம்


உலகமே ஒரு குப்பைதொட்டியோ என்று வியக்குமளவுக்கு ஆகாயம் முதல் அதல பாதாளம் வரை குப்பையும் கூழமும்நிறைந்து வழிந்துகொண்டிருக்கும் நிலையில் குப்பைக்கு 'குட்பை 'சொல்ல மக்கள் தாங்களாகவே தயாராக வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் திரைப் பட நடிகர் ஒருவர் பேட்டி கண்டபோது கலாம் கூறினார்,மேலை நாடுகளில் சுகாதாரம் சரியாய் பேணப்படுகிறது!ஒருவன் குப்பயைப்போட்டுவிட்டு அவனே இறங்கி சுத்தம் செய்கிறான்.முன்னால் சென்ற காரிலிருந்து விழுந்த குப்பையை பின்னால்காரில் வந்தவன் எடுத்து குப்பை தொட்டியில் போடுகிறான் இது போன்று தமிழக மக்கள் மாறவேண்டும் என்றார். சுகாதார கேடு விளைவிப்பவர்கள் மீது அரசு தண்டனைச் சட்டங்களை வலுப் படுத்தினால் மட்டுமே தமிழகத்தை சுகாதார சீர்கேட்டிலிருந்து பாதுகாக்க முடியும். பறந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி எம்பெருமானார் (ஸல்)அவர்கள் காலத்தில் தொழ வைத்துக்கொண்டிருந்த ஒரு தோழர் முன்பக்கமாக எச்சில் துப்பியதற்காக இனிமேல் இவர் உங்களுக்கு தொழுகை நடத்தக் கூடாது என்று நபியவர்கள் கண்டித்தார்கள்.

 இஸ்லாமும் சுகாதாரமும்
எல்லாத்துறைகளிலும் நிறைவாய் தடம் பதித்து வழிகாட்டிய  இஸ்லாம் சுகாதாரத்தை மட்டும் விட்டிருக்குமா? மலம்,ஜலம் கழிக்கும் முறையைக்கூடவா உங்கள் நபி கற்றுக் கொடுக்கிறார்; என்று கேவலமாக கேட்டவரிடம் சல்மான் பார்ஸி (ரலி) ஆம்! என்ற ஒற்றை வார்த்தையால் தொழுகை,நோன்பு மட்டுமல்ல: முறையாகச் செய்தால்சிறு நீர் கழிப்பதும் புனிதத்தைத் தேடித் தரும் என்பதை உணர்த்தினார்கள். "சுத்தம் ஈமானில் பாதி"என்ற நபிமொழி சுகாதாரத்தின் உயர்வையும்,மதிப்பையும் பறைசாற்றவில்லையா?   

அல்லாஹ் தூய்மையானவன்;தூய்மையையே விரும்புகிறான்.எனவே உங்கள் வீட்டுத் திண்ணைப் பகுதிகளையும் மூலைகளையும் சுத்தமாக வைத்திருங்கள், யூதர்களுக்கு ஒப்பாகிவிடாதீர்கள் என்ற நபிமொழி சுகாதாரத்தின் உயர்வையும்,மதிப்பையும் மறுபடியும் பறைசாற்ற வில்லையா?

சுத்தத்திற்கும்,சுகாதாரத்திற்கும் மேலை நாடுகளை மேற்கோள் காட்டும் மேதாவிகளே! எங்கள் மாநபிவாழ்ந்த காலங்களில் மதினமா நகரில் குப்பை கொட்டுவதற்கென்றே தனி இடம் இருந்திருக்கிறது என்பதை எப்போது நீங்கள் அறிவீர்கள்!

"குப்பை கொட்டும் இடங்களில் இறைவணக்கம் செய்யாதீர்கள்"என்ற நபிமொழியும், அழுக்காடை அணிந்த மனிதரைப் பார்த்து துவைக்கக்கூடவா வழியில்லை?! என்று கடிந்து கொண்ட வரலாறும் சர்வதேச சுகாதார தினத்துக்கே சாவுமணி அடிக்கவில்லையா?  

தனி மனித வாழ்க்கை தூய்மையானதாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திய இஸ்லாம், தன் போதனைகளையும் அவ்வாறே அமைத்துக் கொண்டதன் வெளிப்பாடுதான் "சுத்தம் ஈமானில் பாதி" என்ற சுந்தர நபிமொழி.

பாதசாரிகளுக்கு தொந்தரவு தருபவர்மீது இறைச் சாபம் உண்டாகும் என்ற நபிமொழி உணர்த்தும் பாடம் என்ன தெரியுமா? வெற்றிலைப் பாக்கை குதப்பிக் கொண்டும், வேகமாக ஓடும் பேருந்தில் ஜன்னல் வழியாகவும் எச்சில் துப்பியவர்கள்;நாம் துப்பிய எச்சில் கீழே விழுந்ததா?யார் மேலேயும் விழுந்ததா?என்று கவனிக்க வேண்டும்  என்பதை உணர்த்தவில்லையா?   

பள்ளிவாசலில் எச்சில்துப்புவது பாவம்!  (பிறருக்கு தொல்லை தராத வண்ணம்அதை மண்ணில் ) மூடிவிடுவதே அதற்கு பரிகாரம் என்பது நபிமொழி.

அவசரமாக எச்சில் வந்தால் (துப்புவதற்கு இடம் இல்லையென்றால்) அதை தன் ஆடையில் துப்பி வைத்துக் கொள்ளவும்.பிறகு சென்று கழுவிக் கொள்ளலாம். என்ற நபிமொழி பிறமனிதர்களுக்கு சுகாதாரக்கேடு விளைவிப்பதை கண்டிக்கிறது.   ஆம்! எச்சில் துப்புவதற்கும் இலக்கணம் தந்த ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான்.


இங்கே சிறுநீர் கழிக்காதீர்!

ஆத்திரத்தை அடக்கினாலும் சிறுநீரை அடக்க முடியாது! என்ற ஆதங்கத்தோடு பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள்,தங்கள் மறைவிடம் மறைக்கப்பட வேண்டியது என்ற சிந்தனயே இல்லாமல் "இங்கே சிறுநீர் கழிக்காதீர்!"என்ற அறிவிப்பு பலகைக்குக் கீழ் சிறுநீர் கழித்துக் கொண்டே சுகாதார தினத்தைக் கொண்டாடுவதில் பயன் என்ன இருக்கிறது?!

குடியிருக்க வீடு தேடி அலைந்தவர்களைப் பார்த்திருப்போம்; ஆனால்  மாநபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்க இடம் தேடிச் சென்றிருக்கிரார்கள்.

பாத்திரங்களில் சிறுநீரை சேமித்து வைக்கும் வீடுகளுக்கு வானவர்கள் வரமாட்டார்கள். (நபிமொழி)

ஓடும் தண்ணீரில் சிறுநீர் கழிக்காதீர்கள். (நபிமொழி)

ஆற்றங்கரையிலும்,பழம் தரும் மரத்தடியிலும் மலம் கழிக்காதீர்கள். (நபிமொழி)
இந்த நபிமொழிகள் சர்வதேச சுகாதாரத்தை எவ்வளவு அழகாய் உணர்த்துகின்றன. சுகாதரம் சம்பந்தமாக மேலும் நிறைவாய் தெரிந்து கொள்ள இதை அழுத்தவும்.



  























    






    

Monday 1 April 2013

யூசுபிகளே வருக!



அல்லாஹ் அளவிலா அருள் புரிவானாக!
அன்பிற்குரிய யூசுபி உலமாக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
நலமறிய ஆவல்
இன்ஷா அல்லாஹ் வரும் 18-05-2013 சனிக்கிழமை ஃபஜர் முதல் இரவு 8.00 மணி வரை யூசுபிய்யா அரபிக் கல்லுரியில் "ابناء يوسفية சந்தித்தல் - சிந்தித்தல் கலந்தாய்வுக் கூட்டம்" நடைபெற உள்ளது.
அவசியம் வருகை தந்து கூட்டத்தில் கலந்து சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் مدعو அல்ல: داعي