Thursday 30 May 2013

அறியாமைக் காலச் சிந்தனைகள்.



                                                          
அறியாமைக் காலச் சிந்தனைகள் (அல்ஜாஹிலிய்யா) என்பது விரிவான பொருள் கொண்டதாகும். பலரும் புரிந்திருப்பதைப் போன்று, இறைமறுப்பு (குஃப்ர்), இணைவைப்பு (ஷிர்க்) ஆகிய கொள்கைகள் மட்டுமன்று. இறைக்கட்டளைக்கு எதிரான அனைத்துமே அறியாமைதான்;ஜாஹிலிய்யாதான். 


இதனாலேயே, இறைமறைக்கும் நபிவழிக்கும் முரண்படுகின்ற சிந்தனைகள் அனைத்தும் ஜாஹிலிய்யா என இலக்கணம் கூறுவர்.சமயம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு, கலாசாரம் ஆகிய எந்தத் துறையாகவும் அது இருக்கலாம்.

இறைத்தூர் (ஸல்) அவர்களுக்கு முன்பு இருந்தவை எல்லாம்ஜாஹிலிய்யா என்பர் சிலர்.

எப்படியானாலும், அறியாமை இன்னதெனப் புரிந்தால்தான், அறிவுஇன்னதெனத் துல்லியமாக அறிய முடியும். இஸ்லாம் தெளிந்த அறிவு; அதன் கொள்கைகளும் நெறிகளும் இயற்கையானவை. இஸ்லாத்தில் அறியாமைக்கு அறவே இடமில்லை.

இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அறியாமைக் காலச் சிந்தனைகளை (ஜாஹிலிய்யா) அறியாதவர் இஸ்லாத்தில் தோன்றும்போது, இஸ்லாத்தின் பிடிகள் ஒவ்வோன்றாகத் தளர்ந்துவிடும்; தகர்ந்துபோகும். (அல்ஃபவ்ஸான்)

தீர்ப்பில் அறியாமை உண்டு. அல்லாஹ் கூறுகின்றான்:அறியாமைக் காலத் தீர்ப்பையா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்? உறுதியாக நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்தாருக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பு வழங்குபவர் யார்? (5:50)

கலாசாரத்தில் அறியாமை உண்டு. நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்: உங்கள் இல்லங்களிலேயே நீங்கள் தங்கியிருங்கள்; முந்தைய அறியாமைக் காலச் சுற்றலைப் போன்று வெளியே சுற்றாதீர்கள். (33:33)
பண்பாட்டிலும் குணத்திலும் அறியாமை உண்டு. அல்லாஹ் கூறுகின்றான்: இறைமறுப்பாளர்கள், தம் உள்ளங்களில் அறியாமைக் கால வைராக்கியத்தை வைராக்கியமாக ஏற்படுத்திக்கொண்டனர். (48:26)
மனிர்களிடையே குல, நிற, மொழி வேறுபாடு பார்க்கும் சமூக அநீதியும் அறியாமைக்காலக் கலாசாரம்தான். தோழர் அபூதர்அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், கறுப்பு நிற தம் பணியாளரை ஏசிவிட்டார்கள்.

தகவல் அறிந்த நபி (ஸல்) அவர்கள், அபூதர்! அவருடைய தாயைக் குறிப்பிட்டு இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர். உங்களின் அடிமைகள் உங்களின் சகோதரர்கள் ஆவர் என்று கண்டித்தார்கள். (புகாரீ)

பொதுவாகவும் அறியாமைக் காலக் கலாசாரம் குறித்துக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள் நபியவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகின்றவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகின்றவன். 3. ஒரு மனிதனின் குருதியை ஓட்டுவதற்காக நியாயமின்றி கொலை செய்யத் தூண்டுகின்றவன். (புகாரீ)

அறியாமை பலவிதம்

அறியாமைக் காலச் சிந்தனைகளில் முதலிடம் வகிப்பது அன்றைய மதச் சிந்தனைகள்தான். அறியாமைக் காலக் கொடுமைகளிலேயே வன்கொடுமை, மதத்தின் பெயரால் நடந்த அறிவீனம்தான்.

இறை தொடர்பான கொள்கைகள் மூன்றாகத்தான் இருக்க முடியும்.1. இறைமறுப்பு (குஃப்ர்) 2. ஓரிறை (தவ்ஹீத்). 3. பல்லிறை (ஷிர்க்). இஸ்லாம் வந்து, ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தியது; மற்ற இரண்டையும் நிராகரித்தது; கடுமையாக எதிர்த்தது.

இந்த வகையில் நாத்திகம், பலதெய்வக் கொள்கை, யூத மதம்,கிறித்தவ மதம், இந்து மதம், ஜைன மதம், புத்த மதம் முதலானவை அறியாமைக் கால மதச் சிந்தனைகளில் அடங்கும்.

இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் மதப் பிரிவுகள் சிலவும் அறியாமைக் காலப் பிரிவுகளே ஆகும். அவற்றில் ஷியா, காதியானி (அஹ்மதிய்யா), ஹதீஸ் மறுப்பு ஆகியவை குறிப்பிடத் தக்கவை ஆகும்.

அறியாமைக் காலக் கலாசார சிந்தனைகள் பல உள்ளன. அவற்றில் பெண்ணியம் () மேற்கத்தியம் ஆகியவை மிக ஆபத்தானவை. இவற்றைப் பற்றியே பின்னால் ஆய்வு செய்யவிருக்கிறோம்.

அறியாமைக் காலச் சித்தாந்தங்களில் முக்கியமானவை என நான்கைக் குறிப்பிடலாம். கிறித்தவமயமாக்கல், கிழக்கத்தியம்,மதச்சார்பின்மை, டார்வினிஸம் ஆகியவையே அவை.

அறியாமைக் காலப் பொருளியல் மற்றும் அரசியல் சிந்தனைகளும் பல உண்டு. அவற்றில் முதலாளித்துவம்  (),பொதுவுடமை, மேற்கத்திய ஜனநாயகம், தேசியம், கம்யூனிஸம் ஆகியவற்றைப் பிரதானமாகக் குறிப்பிடலாம்.

மேற்கத்தியம்

அறியாமைக் காலக் கோட்பாடுகளிலேயே இன்று உலக மக்களைப் பெரிதும் பாதிக்கக்கூடியதும் படுகுழியில் தள்ளக்கூடியதும் என இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, மேற்கத்தியக் கலாசாரம்( ); இரண்டு, பெண்ணியம் ().

இவை மதம், மொழி, நாடு, இனம் ஆகிய எல்லா எல்லைகளையும் கடந்து, மனித நாகரீகம் அல்லது உலகளாவிய நடைமுறை என்ற பெயரால், அனைத்துச் சமூக மக்களிடமும் ஊடுருவி காலூன்றிவிட்டன.

நடை, உடை பாவனை, உணவு, மொழி, கல்வி, பழக்க வழக்கங்கள்,விழாக்கள், பொருளாதாரம், அரசியல், ஊடகம் என அனைத்துத் தளங்களிலும் மேற்கத்தியமே கொடிகட்டிப் பறக்கின்றது.

மதக் கோட்பாடுகள், சமூகக் கட்டுப்பாடுகள், பாரம்பரியங்கள்,இயல்புகள் முதலான மானுட விழுமங்கள் எதுவும் மேற்கத்தியத்திற்கு முன்னால் நிற்க முடிவதில்லை;மதிக்கப்படுவதில்லை.

முன்னேற்றம், முற்போக்கு, வளர்ச்சி போன்ற கவர்ச்சியான அடைமொழிகள் மேற்கத்தியத்திற்கு மட்டுமே சொந்தமாகிப்போயின.

மேற்கத்திய கலாசாரத்திற்கு மாற்றமான அனைத்தும் பழைமை வாதம், பிற்போக்கு, அநாகரீகம், வறட்டுத்தனம், பிடிவாதம், மத மற்றும் சமூக வெறி ஆகிய முத்திரைகள் குத்தப்பட்டு ஓரங்கட்டப்படுகின்றன; ஒதுக்கப்படுகின்றன.

புதிதாகத் தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற கடுமையான விமர்சனங்களும் சேர்ந்துகொண்டுள்ளன.

வெள்ளைக்கார காலனி ஆதிக்கமும் சிலுவைப் போர்களும் முடிவுக்கு வந்துவிட்டாலும் கலாசார மற்றும் சிந்தனைப் போர்கள் தொடர்கின்றன. இப்போர்களில் மேற்கத்திய உலகம் வாகை சூடிவிட்டன எனலாம். மேற்கத்தியத்திற்குக் கிடைத்துள்ள இந்த வெற்றிதான் முந்தைய வெற்றிகளைவிட அவர்களுக்கு மகத்தானவை; மற்றவர்களுக்கு ஆபத்தானவை.

இந்த எதார்த்தம் புரியாத காரணத்தால், கீழை நாடுகளும் சமூகங்களும் தங்களைத் தாங்களே பிற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொண்டு, மேற்கு நோக்கி நகர்கின்றன. இதற்காகச் சொந்த மக்களுடன் சண்டையிடவும் மோதிக்கொள்ளவும் கிழக்கத்தியோர் தயங்குவதில்லை.

குழு மோதல்களை உருவாக்கி, சண்டையை மூட்டிவிட்டு, இரண்டு பக்கமும் ஆயுதங்களை விற்றுக் காசாக்கிக்கொண்டிருக்கின்றன மேற்கு நாடுகள்.

மேற்கத்தியம் என்ன சொல்கிறது?

உண்மையில் மேற்கத்தியம், அல்லது மேற்குமயமாக்கல் என்றால் என்ன?

அரசியல், கலாசார, கலை சார்ந்த இலக்குகளைக் கொண்ட மாபெரும் சிந்தனை இயக்கம்தான் மேற்கத்தியம். ஆனால், இந்தச் சொல்லாடல் அவர்களின் அகராதியிலோ தகவல் களஞ்சியங்களிலோ கிடைக்காது. தம்மைத்தாமே சதிகாரர்கள்என்று அடையாளப்படுத்த அவர்கள் எப்படித் துணிவார்கள்?

எனவே, மேற்கத்தியம் என்பது இரகசிய இயக்கம் எனலாம்;அல்லது பெயர் வைக்கப்படாத மர்ம அமைப்பு எனலாம். பெயர்இல்லையே தவிர, எல்லாத் திட்டங்களும் செயலில் உள்ளன.

மேற்கத்திய நடைமுறைகளை உலக மக்கள்மீது திணிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். இதன் மூலம், தனிமனிதனின் தனித்தன்மை,தனிப்பட்ட போக்குகள், சமயம் மற்றும் சமூகத்தின் வழிகாட்டல் ஆகியவற்றை ஒழித்துக்கட்டிவிட்டு, மேற்கத்திய நாகரீகத்தை முழுமையாக அடியொட்டி நடக்கின்ற கண்மூடித்தனமான அடிமைகளை உருவாக்குவதே அதன் இலட்சியமாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் முஸ்லிம் நாடுகளில் கிழக்கத்திய சிந்தனையாளர்கள் மேற்குமயமாக்கல் சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினர்.

இவர்கள் தம் படைகளை நவீனப்படுத்தினர்; புதிய எழுச்சிக்கு வித்ததிடுவதற்காக மேலை நாடுகளுக்கு முஸ்லிம் குழுக்களை அனுப்பினர்; அல்லது மேற்கத்திய பாடம் நடத்துவதற்காக மேலை நாடுகளிலிருந்து நிபுணர்களைக் கீழை நாடுகளுக்கு இறக்குமதி செய்தனர்.

ஆடை அணிகலன்கள், கல்வி, புதிய அறிவியல், படைகளை உருவாக்குதல், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்காகங்களைப் புதிதாக ஆரம்பித்தல், முஸ்லிம் நாடுகளில் மேற்கத்தியப் பேராசிரியர்களை நியமித்தல் ஆகிய வழிகளில் மேற்கத்தியத்தை உறுதிப்படுத்தினர்; நடைமுறைப்படுத்தினர்.

வாழ்க்கை வாழ்வதற்கே. சாத்தியமான வழிகளிலெல்லாம் பொருளீட்டி வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும். பொருளீட்டும் வழியையோ செலவிடும் முறையையோ பற்றி யோசிக்க வேண்டியதில்லை. இதில் சமயத்திற்கோ சமயயத் தலைவர்களுக்கோ எந்தத் தொடர்பும் கிடையாது என்கிறது மேற்கத்தியம். ஒரு வகையில் முதலாளித்துவத்தின் அடிப்படையே இதுதான் எனலாம்.

கலாசாரம், பண்பாடு என்று சொல்லிக்கொண்டு ஆண்-பெண் உறவுக்கும் நட்புக்கும் கட்டுப்பாடு விதிக்கலாகாது. 16வயதை அடைந்த ஓர் ஆணோ பெண்ணோ விரும்பும் வகையில் பாலியல் உறவு வைத்துத்கொள்ளலாம். காதல், நட்பு, விபசாரம், ஒருபால் உறவு என எல்லாவற்றுக்கும் அனுமதி உண்டு.

ஆடையில் கட்டுப்பாடு, உணவு மற்றும் பானங்களில் கட்டுப்பாடு,போதைப் பொருட்களில் கட்டுப்பாடு, சூதாட்டத்தில் கட்டுப்பாடு,விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் கட்டுப்பாடு என எந்தக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது.

விளைவுகள்

இந்த மிருகத்தனமான, தான்தோன்றித்தனமான போக்கால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும், அவற்றைப் பின்பற்றுகின்ற இந்தியா போன்ற கிழக்கத்திய நாடுகளிலும் மனித இனமே வெட்கித் தலைகுனிகின்ற கேவலான கலாசாரம் வளர்ந்து, மனித குலத்தையே அச்சுறுத்திவருகிறது.

அமெரிக்காவில் 2003ஆம் ஆண்டில் மட்டும் திருமணம் ஆகாத பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் - அதாவது தகப்பன் தெரியாத குழந்தைகள்- எண்ணிக்கை 14 லட்சம். இது, அந்த ஆண்டு அங்கு பிறந்த மொத்த குழந்தைகளில் 34.6 விழுக்காடு.

அமெரிக்கர்கள், வாழ்க்கையில் நிம்மதியிழந்து கண்ணில் படுபவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தாங்களும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன.

பிரிட்டனில் 2013 ஜனவரியில் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. பிரிட்டனில் 20 பெண்களில் ஒருத்தி 60 வயதுக்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். அது கற்பழிப்பாகவும் முடியலாம்.

ஆண்டுதோறும் 95 ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்;அல்லது ஆபத்தான வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.உண்மையில் இந்த எண்ணிக்கை 50 லட்சம் இருக்கும். வழக்கில் சிக்குவோர் மிகவும் குறைவு. நீதிமன்றம் செல்லும் 87 ஆயிரம் வழக்குகளில்கூட ஆயிரம் சம்பவங்களில் மட்டுமே குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.

2012-சன்டே இந்தியா வெளியிட்ட புள்ளி விவரங்கள் இந்தியாவின் அகோர முகத்தைக் காட்டுகிறது.

இந்திய நகர்ப்புற இளைஞர்களில் 62 விழுக்காட்டினர் 20வயதுக்குள்ளாகக் கன்னித் தன்மையை இழந்தவிடுகின்றனர். 31விழுக்காட்டினர் 21ஆவது வயதில் முதல் முறையாகப் பாலுறவில் ஈடுபடுகின்றனர்.

தவறான உறவில் கர்ப்பம் ஏற்பட்டுவிட்டால் 6 சதவீதத்தினரே திருமணம் செய்தகொள்வோம் என்றனர். 80 சதவீதத்தினர்கருக்கலைப்பே சிறந்த வழி என்றனர்.

இந்தியாவில் பள்ளி, கல்லூரி நாட்களிலேயே 32 விழுக்காடு மாணவர்களும் 26 விழுக்காடு மாணவிகளும் போதைப் பழககத்திற்கு அடிமையாகிவிடுகின்றனர்.

இஸ்லாத்தின் எச்சரிக்கை

மேற்கத்தியக் கலாசாரம் என்பது, கிறித்தவர்கள் மற்றும் யூர்களான வேதக்காரர்களின் கலாசாரம்தான். அவர்களின் வேதங்களில் அக்கலாசாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மேலை உலகில் பெரும்பான்மையாக வசிப்பவர்களும் அக்கலாசாரத்தை ஊட்டி வளர்ப்பவர்களும் அவர்கள்தான்.

அல்லாஹ் ஆணையிடுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! யூர்களையும் கிறித்தவர்களையும் நீங்கள் உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்; அவர்களில் சிலர்தான் சிலருக்கு உற்ற நண்பர்கள் ஆவர். உங்களில் யார்அவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்கிறாரோ அவர், அவர்களைச் சேர்ந்தவர் ஆவார். (5:51)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள், எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால்கூட, நீங்கள் அதிலும் புகுவீர்கள். அப்போது தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! யூர்களையும் கிறித்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், வேறு யாரை? என்று கேட்டார்கள். (புகாரீ)

பெண்ணியம்

ஆணுக்குச் சமமாக பெண் மதிக்கப்பட வேண்டும் எனும் சிந்தனைப் போக்கே பெண்ணியம் () எனப்படுகிறது. பெண்களுக்குச் சம உரிமைகளைக் கோருகின்ற சமூக இயக்கமாகும் அது.

பெண்ணுரிமைக்கே இவர்கள் கொடுக்கும் பொருள் அபத்தமானது ஆணைச் சார்ந்திராமல் பெண் சுதந்திரமாக இருக்க வேண்டியவள் என்பது மதிக்கப்பட வேண்டும்; ஆணுக்கு இருக்கும் உரிமைகள்,வாய்ப்புகள் அனைத்தும் பெண்ணுக்கும் தரப்பட வேண்டும். இதுதான் பெண்ணுரிமை ( ) என்கின்றனர்.

மேர்வுல்ஸ்டன் கிராஃப்ட் எனும் பெண் எழுதிய       (1792) எனும் நூலே பெண்ணியத்தின் முதல் வெளிபாடு என்று கூறுவர்.

அதையடுத்து 1848ஆம் ஆண்டில் எலிஸபெத் கேடி ஸ்டான்டன்,லக்ரீ ஷாமாட் போன்ற மார்களால் கூட்டப்பட்ட செனகா ஃபால்ஸ் மாநாடு, ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்கு முழுமையான கல்வி வாய்ப்பு, சமமான இழப்பீடு போன்ற சட்டப்பூர்வ நிலைகளைக் கோரியது.

1949இல் சைமன் டி போவ்யார் எழுதிய தி செகண்ட் செக்ஸ் எனும் நூல், 1963இல் பெட்டி ஃபிரிடன் எழுதிய தி ஃபெமினைன் மிஸ்டிக் எனும் நூல், 1966ல் நிறுவப்பட்ட தேசிய மகளிர் அமைப்பு ஆகியவை பெண்ணியத்திற்குக் குரல் கொடுத்தன.

முஸ்லிம் நாடுகளைப் பொறுத்தவரை, மதச்சார்பற்றவர்களால் எகிப்தில் இவ்வியக்கம் தொடங்கப்பட்டது; பின்னர் மற்ற அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கும் பரவியது.

பெண்ணியத்தின் முக்கயமான கொள்கைகள் இஸ்லாத்திற்கு எதிரானவை.

இஸ்லாமியப் பண்பாடுகள், ஷரீஅத் சட்டங்கள் ஆகியவற்றிலிருந்து முஸ்லிம் பெண்களை விடுவிக்க வேண்டுமாம்!

ஹிஜாப், தலாக், பலதார மணம் ஆகியவற்றுக்குத் தடை.

பாகப் பிரிவினையில் ஆணுக்குச் சமமான பங்கு பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும்.

எல்லாவற்றிலும் முஸ்லிம் பெண்கள் மேற்கத்தியப் பெண்களைப்போல் மாற வேண்டும்.

பெண்ணியத்தின் விஷமம் புரிந்தோ புரியாமலோ முஸ்லிம்களே அதற்குப் பல்வேறு பெயர்களில் ஆதரவு தெரிவித்துவருவது வேதனையளிக்கும் செய்தியாகும். இதன் மூலம் இவர்கள் இஸ்லாத்தை, திருக்குர்ஆனை, நபிவழியையே தங்களையும் அறியாமல் எதிர்க்கின்றனர் என்பதுதான் உண்மையாகும்.

இஸ்லாத்தின் நிலை

ஆண்-பெண் பிறவி வித்தியாசம் பார்க்கலாகாது என்பதில் இஸ்லாம் தெளிவாக இருக்கிறது. பெண் பிறவியைக் கண்ணியமாகக் கருதிப் போற்றுவதிலும் பெண்ணுக்கு வேண்டிய இயல்பான உரிமைகளை வழங்குவதிலும் இஸ்லாம்தான் உலகுக்கே முதலில் வழிகாட்டியது.

அதே நேரத்தில், இயற்கைக்கு மாற்றமாக, இயல்புக்கு ஒவ்வாத வகையில் பாலின சமத்துவம் பேசுவதை இஸ்லாம் ஏற்கவில்லை என்பதைச் சொல்வதில் தயக்கம் காட்ட வேண்டியதில்லை. இஸ்லாத்தின் இந்தத் தொலைநோக்குப் பார்வைதான் முற்றிலும் சரியானது என்பதையே இன்றைய உலக நடப்புகளும் புள்ளி விவர ஆய்வுகளும் தினமும் நிரூபித்துவருகின்றன.

அல்லாஹ் கூறுகின்றான்: ஆண்களே பெண்களை நிர்வகிப்போர் ஆவர். அவர்களில் சிலரைவிட வேறு சிலரை அல்லாஹ் மேன்மையாக்கியிருப்பதும் ஆண்கள் தம் செல்வங்களை (பெண்களுக்காக)ச் செலவு செய்வதுமே இதற்குக் காரணம். எனவே, நல்ல பெண்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். (கணவன்) இல்லாத நேரத்தில் அல்லாஹ் அறித்துள்ள பாதுகாப்பால் (தம் கற்பையும் கணவனின் உடைமைகளையும்) அவர்கள் பாதுகாப்பார்கள். (4:43)

இத்திருவசனத்தில் பெண்ணின் நிர்வாகியாக, தலைவனாக,காவலனாக ஆணே இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். 1. இயற்கையான காரணம். அதுதான் உடல் வலிமை, நெஞ்சுரம், நிர்வாகத் திறன்,அறிவுக்கூர்மை ஆகியவையாகும். உடல் வலிமைக்கும் புத்திக்கூர்மைக்கும் இன்றைய அறிவியலே சான்று பகர்கின்றது.

மனித உடலில் 60 மில்லியன் உயிரணுக்கள் உள்ளன. அவற்றில் ஆண் -பெண் உயிரணுக்கள் இடையில் வெளிப்படையான உருவ வேறுபாடுகள் உண்டு. நுண்ணோக்கிகொண்டு பார்த்தால் அவை தெளிவாகவே தெரியும்.

குரோமோசோம்கள் எனப்படும் இனக்கீற்றுகளில் ஆண்-பெண் இடையே வித்தியாசம் உண்டு. ஆண்களில் ஒவ்வொரு செல்லிலும் ஙீசீ இனக்கீற்று இருக்கும் என்றால், பெண்களில் ஙீஙீ இனக்கீற்று இருக்கும். அது வலுவானது; இது பலவீனமானது. சிசுவின் பாலினத்தை நிர்ணயிக்கும் சக்தி ஆணின் செல்லுக்கே உண்டு.

ஆணின் ஒவ்வொரு துளிவிந்திலும் பல மில்லியன் அணுக்கள் இருக்கின்ற நிலையில், பெண்ணின் கருப்பை மாதம் ஒரு முட்டைக் கருவை மட்டுமே வெளியிடுகிறது.

இடுப்புப் பகுதியில் மட்டும் ஆண்-பெண் இடையே 19 வித்தியாசம் உள்ளன.

மூளையில்கூட ஆண்-பெண் இடையே இயற்கையான வித்தியாசம் உள்ளது என 1981 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ரோகர்ஸ் ஸ்பிரே கூறுகிறார். ஹார்மோன்களில் ஏற்படும் வித்தியாசமே இதற்குக் காரணமாம்!

2. செயல்பாடும் பொருளாதாரமும் இரண்டாவது காரணமாகும். குடும்பத்திற்காகக் கடுமையாக உழைப்பவன் ஆண்தான். குடும்பத்திற்கான செலவினங்களுக்கு ஆணே பொறுப்பு.

இதனாலேயே மற்றொரு வசனம், அந்தப் பெண்களுக்குக் கடமைகள் இருப்பதைப் போன்றே நியாயமான உரிமைகளும் அவர்களுக்கு உண்டு. ஆயினும்,அவர்களைவிட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு (2:228)என்று குறிப்பிடுகின்றது.

அந்த ஒருபடி உயர்வு, புத்திக்கூர்மை, வீரம், கடின உழைப்பு ஆகிய இயல்பான தகுதிகளால் கிடைத்ததாகும். இதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, அவசியமும் நெருக்கடியும் இல்லாமலேயே நாங்களும் சம்பாதிக்கப்போகிறோம் என்று பெண்கள் வெளியேறியதால் பல்வேறு சிக்கல்களும் பாதிப்புகளும்தான் ஏற்பட்டுள்ளன.

பெண்ணியம் படுத்தும் பாடு

முதலில் குடும்பத்தில் ஆரோக்கியமான, சகஜமான உறவு இருப்பதில்லை.

தம்பதியரிடையே நீயா, நானா என்ற கௌரவப் பிரச்சினை.

இயல்பான, முக்கியமான பொறுப்புகளில் பெண்கள் சோடை போய்விடுகிறார்கள்.

எல்லாவற்றையும்விடப் பெண்களுக்கே உரிய குடும்பப் பொறுப்புகள் வீணாகின்றன.

பெற்றோர் இருந்தும் குழந்தைகள் அநாதைகளாக; மனைவி இருந்தும் கணவன் துணை இல்லாதவனாக; எல்லாரும் இருந்தும் வீடு கவனிப்பார் இல்லாததாக... ஆவதற்கு யார் காரணம்?பெண்களின் நேரங்கள் வெளி வேலைக்குக் களவாடப்படுவதே காரணம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் செலவிடும் நேரங்கள் பற்றிய ஆய்வு ஒன்றைப் பாருங்கள்:

வேலைக்குச் செல்லவும் வீடு திரும்பவும் 2 மணி நேரம்;வேலைக்காக 8 முதல் 10 மணி நேரம்; வீட்டு வேலைகளுக்காக 3முதல் 4 மணி நேரம்; தூக்கம் மற்றும் ஓய்வுக்காக 7 முதல் 8 மணி நேரம்; குழந்தையுடன் அரைமணி நேரம்தான். வாரிசுகளின் நிலைமை என்னவாகும்? சொல்லுங்கள்!

ஆக, பாலின சமத்துவம் என்பது, இயல்புக்கு ஒவ்வாத, வலிந்து ஏற்கும் பெரும் சுமையே தவிர வேறொன்றுமில்லை. பெண்களுக்கே உரிய நாணம், அடக்கம், பணிவு போன்ற உயர்பண்புகளைக் கெடுக்கவும் இல்லறத்தில் புயலைக் கிளப்பவும் தான் பெண்ணியம் வழிவகுக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாணம், இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும். (புகாரீ)

மேலும் கூறினார்கள்: நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்! (புகாரீ)

அரைகுறை ஆடை, கடின உழைப்பு, காலம் கடந்து வீடு திரும்புதல்,அலுவலகங்களில் பாலியல் கொடுமை, பயணங்களில் ஆண்களின் தொல்லை.... எனப் பெண்ணியத்தின் எதிர்வினைகளின் பட்டியல் நீள்கிறது.

அந்நியனுடன் ஒரு பெண் தனிமையில் இருக்கலாகாது; ஒருவரை ஒருவர் இச்சையுடன் பார்ப்பது, பழகுவது, பேசுவது கூடாது;ஒருவரின் மறைக்க வேண்டிய உறுப்புகளை மற்றவர் பார்ப்பது கூடாது; அலங்காரம் செய்துகொண்டு பெண் ஊரைச் சுற்றுவது கூடாது; தகுந்த துணையின்றி பயணிக்கக் கூடாது; பெண்ணை நுகர்பொருளாகக் காட்டும் ஆடை ஆபரணங்கள் அணிந்து காட்சியளிப்பது கூடாது... என இஸ்லாம் நாகரீகமான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

இவை செயல்படுத்தப்பட்டால், பாலியல் பலாத்காரப் பிரச்சினைக்கு இடமிருக்காது; மீறி பாலியல் கொடுமை நடந்தால் தகுந்த தண்டனையையும் இஸ்லாம் வகுத்துள்ளது. ஆனால், இங்கு அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளும் இல்லை; வீரியமிக்க தண்டனைகளும் இல்லை.
                                  
மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி அவர்களின் கட்டுரையிலிருந்து,



Thursday 23 May 2013

மஸ்ஜிதில் சேர் கலாச்சாரமும், தேவ்பந்த் ஃபத்வாவும்


 மார்க்கத்தில் தொழுகைக்கு மற்ற வணக்கங்களுக்கு இல்லாத முக்கியத்துவமும் சிறப்பும் இருக்கிறது. தொழுகை நேரம் குறிப்பிடப்பட்ட கடமை. யுத்த களமாக இருந்தாலும் அந்தந்த நேரத்தில் தொழுவது தவறிவிடக் கூடாது, அதற்குரிய முறைகளையும் குர்ஆனே தெளிவுபடுத்துகிறது.

 யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதால் ஜமாஅத்தாகவோ ஓரிடத்தில் நிலையாக நின்றோ தொழ முடிய வில்லையானாலும் தனித்தானியாக நடந்து கொண்டோ வாகனத்தில் அமர்ந்து கொண்டோ தொழுகையை நிறைவேற்ற வேண்டும், என்று குர்ஆன் வலியுறுத்துகிறது. (யுத்தம் போன்ற) அச்சம் தரும் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் நீங்கள் நடந்து கொண்டோ வாகனத்தில் சவாரி செய்து கொண்டோ தொழுங்கள். ... (அல்குர்ஆன் - 2:239)

ஒருவன் தண்ணீரில் மூழ்கி விட்டாலும் (நீச்சலில் திறமையானவராக இருந்து... ) தொழுகைக்கு முரணான அதிகமான செயல்கள் இன்றி தொழ முடியுமென்றால் தொழுகையை களாவாக்கிவிடக்கூடாது. உடனடியாக தொழ வேண்டும்.
ஒரு பெண் பேறுகால வலியில் இருக்கும் போதும் தொழுகையை விடக்கூடாது, போன்ற சட்டங்களையெல்லாம் நம்முடைய ஃபிக்ஹ் நூற்கள் சொல்கின்றன.

தொழுகையில் சலுகை: தொழுகையை எந்நிலையிலும் விடக்கூடாது என்று வலியுறுத்தும் மார்க்கம் நிர்பந்த சூழ்நிலைகளில் தொழுகையின் நிபந்தனைகளை தளர்த்துகிறது. யுத்த களத்தில் நடந்து கொண்டே தொழும் போது கிப்லாவை முன்னோக்குவது கட்டாயமில்லை. பயணத்தில் சுருக்கித் தொழுது கொள்ளலாம். நிற்க முடியவில்லையானால் உட்கார்ந்து தொழலாம்.

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் நீங்கள் நின்று தொழுங்கள். முடியவில்லையானால் உட்கார்ந்து தொழுங்கள். அதுவும் முடிய வில்லையானால் படுத்து தொழுங்கள் என்றும் ஒரு அடியார் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அனுமதிக்கப்பட்ட சலுகைகளைப் பயன்படுத்தி தொழுதால்) அவர் ஆரோக்கியமாக ஊரில் இருக்கும் போது (எல்லா நிபந்தனைகளுக்கும் உட்பட்டு நிறைவாக செய்த) அமல்களுக்குரிய கூலியே அவருக்கு எழுதப்படும், என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)
தொழுகையில் நிற்பது கடமை: நிற்க முடிந்தவருக்கு நின்று தொழுவது கட்டாயம். இல்லையானால் தொழுகையே கூடாமல் போகலாம். அதே சமயம் ஒருவருடைய வியாதியின் காரணமாக நிற்பதற்கோ அல்லது உட்காருவதற்கோ ரொம்பவும் சிரமப்படுகிறார். நிற்பதால் ஏற்படும் வேதனையால் தெழுகையில் கவனம் செலுத்த முடியவில்லையானால் அவருக்கு நபிமொழியில் கூறப்பட்ட சலுகை இருக்கிறது.
ஒருவருக்கு (ருகூஃ, ஸுஜூத் முறையாக செய்ய முடிந்து) சிறிது நேரம் சுயமாக இன்றி சுவற்றில் சாய்ந்து நிற்க முடிந்தாலும் அதாவது தக்பீர் சொல்லுமளவுக்கோ அல்லது ஒரு இறைவசனம் ஓதும்அளவுக்கோ நிற்க முடிந்தாலும் (முடிந்தவரை) நிற்பது கட்டாயம். (நூல்: அத்துர்ரு மஅர்ரத் 2/97)

ஆனால் இன்று பெரும் பாலான பள்ளிவாசல்களில் பாய் வரிசையைப் போல சேர் வரிசையையும் பார்க்க முடிகிறது. ஷரீஅத்தில் அனுமதிக்கப் பட்ட தங்கடம் இல்லாதவர்களும் சேரில் அமர்ந்து விடுகிறார்கள், என்பது தான் பரவலாக எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள், என்பது மட்டுமல்ல. இந்த சட்டம் பற்றி ஃபத்வா எழுதப்படுகிற அரபீ உர்தூ நூற்களிலும் இதே குற்றச்சாட்டு தான் கூறப்படுகிறது. உண்மையிலேயே முடியாதவரை குறை கூறுவது தவறு என்பதைப் போலவே சேர் தவறாக உபயோகிக்கப் படுவதும் மிகப் பெரும் தவறுதான். சேர், டேபிள் கலாச்சாரம்: சேரில் அமர்ந்து தொழுவது கூடுமா? கூடாதா? என்பதற்கு அப்பாற்பட்டு சட்டத்தைத் தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் பள்ளிவாசல் சேர்க்கலாச்சாரத்தை அனுமதிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும். காலப்போக்கில் பள்ளிவாசல்கள், சேர்கள் நிரம்பிய தேவாலாயங்களைப் போல ஆகிவிடக்கூடாது.

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் நபித்தோழர்கள் காலத்திலும் தொழுகை விஷயத்தில் ஏற்பட்ட நவீனத்தை ஒழிப்பதில் எவ்வளவு கடுமையாக நடந்து கொண்டார்கள் என்பதை நாம் வரலாற்றில் பார்க்கிறோம்.

நபித்தோழர்களின் காலத்தில்: நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியை நலம் விசாரிக்க சென்றார்கள். அவர் தலையணையின் மீது (ஸஜ்தா செய்து) தொழுது கொண்டிருப்பதைப் பார்த்த நபியவர்கள் அதைத் தூக்கி எறிந்து விட்டார்கள். அவர் (ஸஜ்தா செய்வதற்காக) ஒரு குச்சியை எடுத்தார். அதையும் நபியவர்கள் எறிந்து விட்டார்கள். உங்களால் முடிந்தால் பூமியில் (ஸஜ்தா செய்து) தொழுங்கள். இல்லையானால் சைகை செய்தால் போதுமானது. உங்களுடைய ருகூவை விட ஸஜ்தாவுக்கு அதிகமாக குனிந்து சைகை செய்யுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல்பைஹகீ) இப்னு உமர் (ரலி) அவர்கள் ஸஃப்வான் பின் முஅத்தல் என்பவரை தலையணையின் மீது ஸஜ்தா செய்து தொழுவதைப் பார்த்ததும் அவரை கல் அல்லது தலையணையின் மீது ஸஜ்தா செய்வதைத் தடுத்தார்கள். சைக்கினை செய்யுமாறு ஏவினார்கள். (முஸன்னஃப் அப்துர்ரஜ்ஜாக் 4137)
தலையணையின் மீது ஸஜ்தா செய்வது (நபியவர்களின் காலத்தில் இல்லாத) பித்அத் என்று முஹம்மதுப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு குச்சியை (நிறுத்தி அதன்) மீது ஸஜ்தா செய்வது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நான் அல்லாஹ்வை விட்டுவிட்டு சிலைகளை எடுத்துக் கொள்ளுமாறு உங்களை ஏவமாட்டேன். முடிந்தால் நின்று தொழுங்கள். இல்லையானால் அமர்ந்து தொழுங்கள். அதுவும் முடியவில்லையானால் படுத்து தொழுங்கள் என்று கூறினார்கள்.
 உமர் (ரலி) அவர்கள் குச்சியின் மீது ஸஜ்தா செய்வதை வெறுத்தார்கள்.
அதா (ரஹ்) அவர்கள் இப்னு ஸஃப்வான் தலையணையின் மீது ஸஜ்தா செய்ததை தடுத்தார்கள். அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தம்முடைய சகோதரரை நலம் விசாரிக்க சென்றார். அவர் ஒரு குச்சியின் மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருந்தார். அதைத் தூக்கி எறிந்து விட்டு இது உங்களுக்கு ஷைத்தான் காட்டித்தந்தது. முகத்தை பூமியில் வையுங்கள். முடியவில்லையானால் சைகை செய்யுங்கள், என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள். இவையனத்தும் முஸன்னஃப் இப்னு அபீஷைபாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நபித் தோழர்கள் மற்றும் தாபியீன்கள் காலத்தில் இந்த நடைமுறை புதிதாக பரவி வந்ததை அறிய முடிகிறது. எனவே தான் அப்படி செய்தால் ஸஜ்தா கூடுமா? கூடாதா? என்று சர்ச்சை செய்யாமல் அதைக் கடுமையான முறையில் தடுத்திருக்கிறார்கள். இன்றும் பல பள்ளிகளில் சேரோடு சேர்த்து டேபிளும் போடப்பட்டிருக்கிறது. உட்கார்ந்து தொழும் போது ஸஜ்தா செய்ய முடியவில்லையானால் கையை முழங்களாலில் வைத்துக் கொண்டு தலையை மட்டும் தாழ்த்தி சைக்கினை செய்தால் போதுமானது. கையை நீட்ட வேண்டிய தேவையுமில்லை. டேபிளும் தேவையில்லை. ஆனால் இன்று டேபிள் போட்டு பழகிவிட்டதால் சைக்கினை மட்டும் கூடாது, டேபிளில் தான் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் நம்பபவும் பேசவும் ஆரம்பித்து விட்டார்கள். நபியவர்களின் காலத்தில் நாற்காலி: நபித்தோழர்களின் காலத்தில் குச்சியின் மீது ஸஜ்தா செய்ததையே இவ்வளவு கடினமாக கண்டித்துள்ளார்கள். நாற்காலிகளில் உட்கார்ந்து தொழுவதைப் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? அந்தக் காலத்தில் சேர் இருந்திருக்காது என்று சொல்லமுடியாது. தற்காலத்தில் இருப்பது மாதிரி நவீனமுறையில் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாற்காலி கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். ஹதீஸ்களில் நாற்காலி பற்றி நாம் அறிய முடிகிறது. நபி (ஸல்) அவர்களும் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள்.
அபூரிஃபாஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நபியவர்களிடம் வந்தேன். அவர்கள் குத்பா பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது நான், யாரஸூலல்லாஹ்! ஒரு சாதாரண மனிதர் தன்னுடைய தீனைப் பற்றி அறியாதவர் அது பற்றி கேட்டு அறிந்து கொள்ள வந்திருக்கிறார், என்று கூறினேன். உடனே நபியவர்கள் குத்பாவை நிறுத்திவிட்டு என்னிடம் வந்தார்கள். ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது. அதனுடைய கால்கள் இரும்பால் ஆனது என்று நினைக்கிறேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்தார்கள். எனக்கு அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக் கொடுத்ததை எனக்கு கற்றுத்தர ஆரம்பித்தார்கள். (நூல்: முஸ்லிம் - 1450)
அலீ (ரலி) அவர்களுக்கு உளூ செய்வதற்காக நாற்காலி (குர்ஸீ) கொண்டு வரப்பட்டது. அதன் மீது உட்கார்ந்தார்கள்..... என்று அபூதாவூதில் 99 ம் எண் ஹதீஸில் வருகிறது. இப்னுமாஜாவில் பாபு மாலில் கஃபா என்ற பாடத்தில் 3107 ம் எண் ஹதீஸில் ஷைபா நாற்காலியின் மீது உட்கார்ந்திருந்தார், என்று வருகிறது. மஸ்ஜிதின் நல்லொழுக்கம்: இன்று பள்ளிவாசல்களில் டேபிள் சேர் வரிசையாக போடப்பட்டிருப்பதால் தக்க காரணம் இல்லாமல் அதில் உட்கார்ந்து தொழுகிறார்கள் என்ற விமர்சனம் ஒரு புறமிருக்க தொழுகையல்லாத மற்ற நேரங்களில் நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்களும் அதில் சும்மா உட்கார்ந்திருப்பதையும் அல்லது பலர் உட்கார்ந்து கதை பேசுவதையும் அல்லது அதில் உட்கார்ந்து குர்ஆன் ஓதுவதையும் பார்க்க முடிகிறது. இது பள்ளிவாசலின் மகத்துவத்திற்கு முரணானது. ஒழுக்கக் கேடானது.
 ஃபிக்ஹ் சட்ட நூற்களில் உட்கார்ந்து தொழும் போது கூட ஒழுக்க நடைமுறைகளைப் பேணுவது பற்றி அதிகமாக கூறப்பட்டுள்ளது. உட்கார்ந்து தொழுபவர் சம்மணம் போட்டு உட்காருவதை விட அத்தஹிய்யாத் இருப்பில் இருப்பதே சிறந்தது. ஏனெனில் அத்தஹிய்யாத் இருப்பே வணக்க வழிபாட்டின் இருப்பு. காலை நீட்டி உட்காருவது மக்ரூஹ். அவ்வாறே தக்க காரணமின்றி சாய்ந்து உட்காருவதும் மக்ரூஹ். ஏனெனில் இது நல்லொழுக்கத்திற்கு முரணானது. இவை பரவலாக ஃபிக்ஹ் நூற்களில் கூறப்பட்டுள்ளன.
இன்று இந்த எல்லா ஒழுக்கக் கேடுகளும் சேரில் உட்காருவதால் ஏற்படுகின்றன. இதன் மூலம் சேரில் உட்கார்ந்து தொழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் சாயும்படியான சேரில் உட்காரக்கூடாது, என்றே விளங்குகிறது. தனி நபர் ஒருவர் மக்ரூஹான கரியத்தை செய்வதற்கும் பள்ளிவாசலில் பகிரங்கமாக ஜமாஅத்துடைய முழு அங்கீகாரத்துடன் மக்ரூஹான காரியத்தை செய்வதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. தொழுகையாளிகளின் குஷூஃ, குளூவை கெடுக்கும் விதத்தில் மஸ்ஜிதின் மிஹ்ராபுடைய சுவரை அலங்கரிக்கக் கூடாது, என்று சொல்லும் போது தவறாக பயன்படுத்துவதால் தொழுகையே கூடாது என்ற நிலை ஏற்படும் போது வரிசையாக சேர்களைப் போட்டு வைப்பது பற்றி என்ன சொல்ல வேண்டியிருக்கிறது?
எனவே தான் ஃபதாவா ரஹீமிய்யாவில் சேரில் தொழ வேண்டிய நிர்பந்தம் உள்ளவர்கள் தாங்களாகவே சேருக்கு ஏற்பாடுசெய்ய வேண்டும். அது நிர்வாகத்தின் பொறுப்பாகாது. ஏற்கனவே சேர் போடப்பட்டிருந்தால் தங்கடமில்லாதவர்களும் உட்காருவார்கள். அவர்களுடைய தொழுகையே கூடாமல் போய்விடும். எனவே இந்த முறை பொருத்தமானதல்ல, என்று கூறப்பட்டுள்ளது. (9/98)
தேவ்பந்த ஃபத்வா: சேரில் உட்கார்ந்து தொழுவது கூடுமா? கூடாதா? எப்பொழுது கூடும்? எப்பொழுது கூடாது என்பது பற்றி உலகப்பிரசித்தி பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் மத்ரஸாவிலிருந்து பெறப்பட்ட ஃபத்வா - மார்க்கத் தீர்ப்பின் தமிழாக்கத்தை அப்படியே இங்கு தருகிறோம்: (நேரடியாக விளக்கம் கேட்டு பெறப்பட்ட அசல் ஃபத்வாவின் மொழியாக்கம் இது.
டேபிளில் ஸஜ்தா செய்வது பற்றி கேள்வியில் கேட்கப்பட வேண்டியது விடுபட்டு விட்டதால் அது பற்றிய விளக்கம் இந்த ஃபத்வாவில் இல்லை. எனினும் சமீபத்தில் வேலுர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மத்ரஸா வழங்கிய ஃபத்வாவில் (179/எ . 27) மஸ்ஜிதை டேபிள்களால் நிரப்புதால் மஸ்ஜிதின் மகத்துவம் பாதிக்கப்படும், என்பதால் டேபிள் போடுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும், என்று கூறப்பபட்டுள்ளது.)
 தேவ்பந்த் ஃபத்வா வருமாறு: ஒருவருக்கு நிற்க முடியவில்லை. ஆனால் தரையில் உட்கார்ந்து ஸஜ்தா செய்து தொழமுடியுமென்றால் அவர் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது. ஒருவருக்கு தரையில் அமர்ந்து தொழ முடியும். ஆனால் அவரால் ருகூஃ, ஸஜ்தா செய்யமுடியாது, என்றால் அவர் சைக்கினையின் மூலம் தரையில் உட்கார்ந்து தொழ வேண்டும். இந்நிலையில் சேரில் உட்கார்ந்து தொழுவது ஏற்றமானதல்ல. (கிலாஃபுல் அவ்லா) தரையில் உட்கார்ந்து தொழுபவர் அத்தஹிய்யாத்துடைய இருப்பில் அமர்வதே சிறந்தது. அத்தஹிய்யாத் இருப்பில் அமர்வது சிரமமாக இருந்தால் மற்ற முறையிலும் இருந்து கொள்ளலாம். தரையில் அமர்வதும் கஷ்டமாகி விட்டால் சேரில் அமர்ந்து கொள்ளலாம்.
ஆக மொத்தத்தில் சுருக்கம் என்ன வெனில், எவர்கள் உண்மையிலேயே தங்கடமுள்ளவர்களாக இருக்கிறார்களோ மேலும் பூமியின் மீது (தரையில்) எந்த முறையிலும் உட்கார முடியாதோ (எப்படி உட்கார்ந்தாலும் கஷ்டமாக இருக்குமோ) அவர்களுக்கு நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடும். இப்படிப்பட்டவர்களுக்காக (அதாவது உண்மையான தங்கட முள்ளவர் களுக்காக) பள்ளிவாசலில் சேர்களுக்கு ஏற்பாடு செய்வது தவறில்லை. அதேசமயம் சேர்கள் தவறாக பயன்படுத்தப் படாமல் இருக்க வேண்டும் என்பதிலும் இந்த (சேர்) நடைமுறை அதிகமாகி விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக சேர்களை போட்டு வைக்கக்கூடாது. எல்லா நேரத்திலும் சேர்கள் ஸஃப்பில் - வரிசையில் இருகக்கூடாது. மாறாக அவற்றை எடுத்து தனியாக வேறொரு இடத்தில் வைக்க வேண்டும். ஏனெனில் அவசியமான நேரத்தில் மட்டுமே பயன் படுத்தப்பட வேண்டும். மேலும் (சேர்) தேவையுள்ளவர்கள் தாங்களே தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். ஃபத்வா பெறப்பட்ட தேதி : ஹிஜ்ரி 1432, ரபீவுல் ஆகிர் 24 ம் தேதி. (மார்ச்- 30, 2011)

Wednesday 22 May 2013

ஏமாற்றும் உலகம்..!


 இந்த உலகைப் படைத்தவன் அல்லாஹ்! இந்த உலகின் உண்மை நிலைகளை அறிந்தவன் அல்லாஹ்! வானம் பூமி, சூரியன், சந்திரன், சமுத்திரம், மலை, பிரபஞ்சமென்று எல்லாவற்றையும் படைத்து இந்த உலகம் ஒரு ஏமாற்றும் உலகம். யாரும் இதை நிரந்தரமாய் தேடவேண்டாம் என்கிறான்.
ஒரு பொருளை உற்பத்தி செய்தவனே இந்த பொருளை வாங்க வேண்டாம் என்றால் அறிவுள்ள யாரும் அந்த பொருளை வாங்கமாட்டார்கள். இறைவன் இந்த உலகை அறிமுகப் படுத்தும் போதே  متاع الغرور  என்றுதான் அறிமுகப் படுத்துகிறான். நபியவரகள் கூட      الدنيا لا تزن عند الله جناح بعوضة .. என்றார்கள். 
இந்த உலகின் தங்கம்,வெள்ளிக்கு நாம் தரும் மதிப்பில் துளியளவுகூட அல்லாஹ்விடம் இல்லை.
                                                                               
  وَلَوْلَا أَنْ يَكُونَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً لَجَعَلْنَا لِمَنْ يَكْفُرُ بِالرَّحْمَنِ لِبُيُوتِهِمْ سُقُفًا مِنْ فَضَّةٍ وَمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُون وَلِبُيُوتِهِمْ أَبْوَابًا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِئُونَ 
இறைமறுப்பாளர்களின் வீட்டு  முகடுகளை வெள்ளியாக்கியிருப்பேன். நீங்களும் அதன் மீது ஆசைப்பட ஆரம்பித்து இறை மறுப்பாளர்களாகி விடுவீர்கள். என்ற கருத்துப் பட அல்லாஹ் سورة الزخرف ٣٣-٣٤ ஆயத்தில் குறிப்பிடுகிறான்.
மாநபி (ஸல்) ஒருமுறை இப்படியும் கூறினார்கள்:      الدنيا جيفة وطلابها كلاب                                                           
உலகில் மாமிசம் சாப்பிடும் பிராணிகள் நிறைய உண்டு. குறிப்பாக காக்கைக்கு  கூட ஒப்பிடாமல் நாயிற்கு இந்த உலகத்தை ஒப்பாக்கியதன் உள்ளர்த்தம் என்ன என்பதை ஞானிகள் இப்படி விளக்கம் தருகிறார்கள்.

1. காகத்திற்கு மாமிசம் கிடைத்தால் அது தன் கூட்டத்தை அழைத்து கூடி சாப்பிடும், ஆனால் நாய் அப்படியில்லை. தான் மட்டும் சாப்பிட வேண்டுமென்று நினைக்கும். மனிதனும் அப்படித்தான். தானே எல்லாவற்றையும் சுருட்ட வேண்டும் என்று நினைப்பான்.
2. காக்கா தன் இனத்தைச் சாப்பிடாது. நாய் தன் இனத்தைச் சாப்பிடும். மனிதன் தன் சொந்த பந்தங்களைக் கூட அடித்துச் சாப்பிடுகிறான்.
3. ஒரு காக்கா இறந்து விட்டால் அந்த இடத்திற்கு மறுபடியும் வேறு காக்கா செல்லாது, ஆனால் நாய் அப்படியில்லை. ஒரு நாய் இறந்து விட்டால் அந்த இடத்திற்கு வேறு நாய் வந்து நாட்டாமை செய்ய ஆரம்பிக்கும். மனிதனும் அப்படியே! "அண்ணன் எப்பொழுது சாவான், திண்ணை எப்பொழுது காலியாகும்" என்ற பழமொழி போன்று.
4. காக்கா பகலில் மாமிசம் சாப்பிட்டாலும் இரவில் கூட்டுக்குப் போய்விடும். நாய் அப்படியில்லை. பகலில் மாமிசம் சாப்பிடும், இரவில் அந்த மாமிசத்திற்கு காவல் காக்கும். மனிதனும் அப்படியே! பகலில் கடைக்குள் அவனிருக்கிறான், இரவில் கடை அவனுக்குள் இருக்கிறது.
5. காகம் வெறும் கறியை மட்டும் சாப்பிடும், எலும்பை விட்டுவிடும். நாய் எலும்பையும் சேர்த்துச் சாப்பிடும். மனிதனும் அப்படித்தான். வட்டி,லஞ்சம் போன்றவைகளில் தன் பணத்தையும் வசூல் செய்கிறான், பிறர் பணத்தையும் சேர்த்துச் சாப்பிடுகிறான். இப்பொழுது சொல்லுங்கள்! நபியவர்கள் எவ்வளவு பெரிய தத்துவத்தை கூறியுள்ளார்கள்.

ஆக இந்த உலகம் பொய்!  இந்த உலகிலுள்ள அழகும் பொய், அசிங்கமும் பொய். வெள்ளையும் பொய், கருப்பும் பொய். அதிகாரம் பொய், அரசபதவிகள் பொய். வெள்ளையாய் இருப்பவர்கள் சொர்க்கத்திற்கும், கருப்பாய் இருப்பவர்கள் நரகத்திற்கும் சொந்தமானவர் களில்லை.
மனித வாழ்வை   அல்லாஹ் மிகத் தெளிவாக நிர்ணயம் செய்து இருக்கிறான்.
                                                                             نحن قسمنا بينهم معيشتهم
சம்பவம் 1. ஒரு நீக்ரோ சஹாபி நபியைப் பார்த்து சொன்னார், நான் எவ்வளவு கருப்பாக இருக்கிறேன், நீங்கள் எவ்வளவு அழகாகவும், வெண்மையாகவும் இருக்கிறீர்கள். நபி கூறினார்கள்: ஆயிரம் ஆண்டுகள் நடந்தால் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம்  உங்கள் முகம் நாளை மறுமையில் பிரகாசமாக இருக்கும் என்றார்கள். உடனே அந்த சஹாபி கேட்டார். நபியே! நான் சொர்க்கம் செல்வேனா! என்றார். நபி ஆம்! என்றார்கள். அங்கேயே அந்த சஹாபியின் உயிர் பிரிந்து விட்டது. நபியவர்கள் தங்களது கையால் அவரை அடக்கம் செய்தார்கள். கருப்பென்பதால் இந்த சஹாபி நரகவாதியில்லையே!

சம்பவம் 2. பிலால் இப்னு ரபாஹ் (ரலி)  இவரும் ஒரு நீக்ரோ சஹாபி. கஃபாவின் மீதேறி பாங்கு சொன்னவர்கள். மஸ்ஜிதுன் நபவியின் தலைமை முஅத்தினாக பணிபுரிந்தவர்கள். முஅத்தின் என்றால் ஆடு,மாடு,கோழி போன்றதை அறுக்கவும், ஜனாஸாவிற்கு அடிகழுவதும் தான் என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது. நபி (ஸல்) கூறினார்கள்:  இக்லாஸான முறையில் பாங்கு சொல்பவரை கப்ரில் புழு பூச்சிகள் தீண்டாது, மறுமையில் முத்து மேடையில் இருப்பார்கள்   என்றார்கள்.

ضحّاك رح கூறுகிறார்கள்: ( عبد الله بن زيد (رضي எப்பொழுது பாங்கு சொல்லும் முறையை கனவில் பார்த்து சொன்னார்களோ பிறகு நபியவர்கள் பிலாலை பாங்கு சொல்ல பணித்தார்கள். பிலால் பாங்கு சொன்னபோது கடுமையான சப்தமொன்று கேட்டது. அந்த சப்தத்தைக் கேட்ட நபியவர்க்ள் இப்படிச் சொன்னார்கள். பிலாலின் சப்தத்தால் அர்ஷ்வரை உள்ள கதவுகள் திறக்கப் பட்டன.  அந்த சப்தத்தை தான் இப்போது நீங்கள் கேட்டீர்கள் என்றார்கள். கருப்பானவர் என்பதால் அல்லாஹ்விடம் அந்தஸ்த்தில் குறைந்தவராகி விட்டாரா?
அது மட்டுமா!  முதன் முதலாக நபியவர்கள் சுவனம் செல்லும் போது நபியின் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்தவராக சுவனம் செல்பவர் இந்த பிலால். அடிமையென்பதால் இந்த சஹாபி நரகவாதியில்லையே!

சம்பவம் 3. முற்காலததில் பெண் பார்ப்பவர்கள் ஐந்து விஷயங்களை கவனிப்பார்கள். 1. அழகானவளா? 2.பணவசதி எப்படி? 3. பரம்பரை எப்படி?           4. பிள்ளைப் பேறு பெறுவாளா? 5. அடிமையா? சுதந்திரமானவளா?
இந்த ஐந்திலும் குறையுள்ளவர்கள் ராபியத்துல் பஸரிய்யா (ரஹ்).
ஒவ்வொரு நாளும் தஹஜ்ஜத்தில் எழுந்து தன் கணவரிடம் கேட்பார்களாம். என்னிடம் ஏதேனும் தேவையிருக்கிறதா? இருந்தால் பூர்த்தி செய்வார்கள். இல்லையெனில் தொழுகையில் ஈடுபடுவார்கள். இவருடைய கணவர் இறந்த பிறகு ஒருநாள் ஹஸன் பஸரி (ரஹ்) ராபியத்துல் பஸரிய்யாவை பெண் கேட்டு வந்தார்கள். அப்பொழுது ராபியா நான்கு கேள்விகளை ஹஸன் பஸரியிடம் கேட்டார்கள்,
 ராபியா: நான் சீதேவியா? மூதேவியா?
ஹஸன்: தெரியாது
ராபியா: என் செயலேடு வலது கையில் தரப்படுமா? இடது கையிலா?
ஹஸன்: தெரியாது
ராபியா: ஸிராத் பாலத்தில் எழுவேனா? விழுவேனா?
ஹஸன்: தெரியாது
ராபியா: நான் சுவர்க்க வாதியா? நரக வாதியா?
ஹஸன்: தெரியாது
ராபியா: இந்த நான்கையும் நான் தேடிக் கொண்டிருக்கிறேன் ஹஸன் பஸரியவர்களே என்னை விட்டு விடுங்கள் என்றார்கள். அழகில்லையென்பதால் இவரென்ன நரகவாதியா!
இந்த உலகின் அழகும் நம்மை ஏமாற்றும், அசிங்கமும் நம்மை ஏமாற்றும். இறைவன் இந்த இரண்டை வைத்து சுவர்க்க நரக முடிவுகளை எடுப்பதில்லை.

நபியவர்கள் கூறினார்கள்: நரகில் சில மனிதர்கள் இப்படி இருப்பார்கள். அவர்களின் மேலுதடு சுருண்டு நீண்டு நெற்றி வரை விரிந்து கிடக்கும். கீழுதடு தொப்புள் வரை நீண்டு இருக்கும். பல் மலையளவு இருக்கும், கண் நீல நிறமாய் இருக்கும் என்றார்கள். இந்த எச்சரிக்கை அழகானவர்களுக்கும் தானே!

நீதி: இந்த உலகம் ஏமாற்றும் உலகம். இங்கு நாம் பார்க்கும் எல்லாம் பொய். அடிமைகள் தங்களின் அமலால் மகான்களாய் உயர்ந்து விடுகிறார்கள், மகான்களாய் தங்களை காட்டிக் கொண்டவர்கள் அடிமையை விட அல்லாஹ்விடம்  கேவலமாகி விடுகிறார்கள். எனவே இவ்வுலக வாழ்வில் முழுவதுமாய் மூழ்கிவிடாமல் மறுவுலக சிந்தனையோடு வாழும் பாக்கியத்தை அல்லாஹ் தருவானாக!
   
  

கல்விமான்கள் காரைக்குடி! பேரைச் சொல்லி பெருமையடி!




அனைவரும் வருக!                                                                    அறிவமுதம் பெறுக!
பட்டிமன்றம் சம்பந்தமான குறிப்புகள் இருந்தால் தெரியப் படுத்தவும்

Thursday 9 May 2013

நிழல் மனிதர்கள்........III



                மறுமை நல்லோருக்கு பெருமை! பொல்லோருக்கு கொடுமை!
               மீஜானின் நன்மைகள் நல்லோருக்கு இதம்! பொல்லோருக்கு வதம்!
              ஸிராத் பாலத்தை நல்லோர்கள் நடந்து கடப்பர்! 
              பொல்லோர்கள் விழுந்து கிடப்பர்!
              நன்மைகள் சுவனம் தருமா!? தீமைகள் நரகம் தருமா!?
             அல்லாஹ்வின் அன்பு கிடைக்குமா!? அவனின் அதாபு இறங்குமா!?
என்று அல்லோலகல்லோலப் பட்டு கிடக்கும் நேரத்தில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் சிலர் மட்டும் இருப்பர். அவர்களில் ஆறாம் நபர்,

6.ரதியின் சதியில் (சூழ்ச்சியில்) விழாமல் ரப்பை பயந்த மனிதன் மறுமையின்        நிழல் மனிதன்.    ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله 
 பேரழகர் யூசுப் (அலை) சம்பவம் எவ்வளவு பெரிய சான்று. 
وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَنْ نَفْسِهِ وَغَلَّقَتِ الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ ۚ قَالَ مَعَاذَ اللَّهِ ۖ إِنَّهُ رَبِّي أَحْسَنَ                     مَثْوَايَ ۖ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ
நபி (ஸல்) பனீஇஸ்ரவேலர்களில் ஒருவரைப் பற்றி சஹாபிகளிடையே பேசினார்கள்:
ومن أعاجيب بني إسرائيل ما رواه أحمد والترمذي وحسنه عن ابن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: كان الكفل من بني إسرائيل لا يتورع من ذنب عمله، فأتته امرأة فأعطاها ستين دينارا على أن يطأها.. فلما قعد منها مقعد الرجل من امرأته أرعدت وبكت فقال: ما يبكيك أكرهتك؟ قالت: لا، ولكنه عمل ما عملته قط، وما حملني عليه إلا الحاجة، فقال: تفعلين أنت هذا وما فعلته، اذهبي فهي لك وقال: لا والله لا أعصي الله بعدها أبدا. فمات من ليلته فأصبح مكتوبا على بابه إن الله قد غفر للكفل.
 60 தீனார் கொடுத்து, ஆசையை பூர்த்தி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்த போதும் அல்லாஹ்வைப் பயந்தார்.  فمات من ليلته فأصبح مكتوبا على بابه إن الله قد غفر للكفل.

7. வலக்கை கொடுக்கும் தர்மத்தை இடக்கை அறியா வண்ணம் பிறர்கையில் கொடுக்கும் தர்மா கர்த்தா நிஜநாளின் நிழல் மனிதன். 
ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه

அல்லாஹ் கூறுகிறான்  قوله تعالى إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم
வால்போஸ்ட் இல்லாத வள்ளல்களே இன்று இல்லை. விளம்பர மோகத்தால் வறியோர்க்கு செய்யும் தர்மத்தில் உரியோர்க்கு எந்த பயனும் இருப்பதில்லை. மறைவான தர்மம் மலையை விடவும் சக்திவாய்ந்து விடுகிறது.
وخرج الإمام أحمد والترمذي من حَدِيْث أَنَس ، عَن النَّبِيّ - صلى الله عليه وسلم - ، قَالَ : (( لما خلق الله الأرض جعلت تميد ، فخلق الجبال فألقاها عَلَيْهَا فاستقرت ، فعجبت الملائكة من خلق الجبال ، فقالوا : يَا رب ، فهل من خلقك شيء أشد من الجبال ؟ قَالَ : نَعَمْ ، الحديد . قالوا : يَا رب ، فهل شيء من خلقك أشد من الحديد ؟ قَالَ : نَعَمْ ، النار ، قالوا : يارب، فهل من خلقك شيء أشد من النار ؟ قَالَ : نَعَمْ ، الماء . قالوا : يارب ، فهل من خلقك شيء أشد من الماء ؟ قَالَ : نَعَمْ ، الريح . قالوا : يارب ، فهل من خلقك شيء أشد من الريح ؟ قَالَ : نَعَمْ ، ابن آدم ؛ يتصدق بيمينه يخفيها من شماله))

قال النووي " وَفِي هَذَا الْحَدِيث فَضْل صَدَقَة السِّرّ ، قَالَ الْعُلَمَاء : وَهَذَا فِي صَدَقَة التَّطَوُّع فَالسِّرّ فِيهَا أَفْضَل ؛ لِأَنَّهُ أَقْرَب إِلَى الْإِخْلَاص وَأَبْعَد مِنْ الرِّيَاء . 

மலை(யரசி)களின் பலம் கண்டு மலக்குகள் இறைவனிடம் கேட்பார்கள், 
மலக்குகள்: இறைவா! உன் படைப்பில் மலையைவிட சக்தி வாய்ந்தது எது?
இறைவன்:  இரும்பு
மலக்குகள்: இரும்பை விட?!
இறைவன்:  நெருப்பு
மலக்குகள்: நெருப்பைவிட?!
இறைவன்:  தண்ணீர்
மலக்குகள்: நீரைவிட?!
இறைவன்: காற்று
மலக்குகள்: காற்றைவிடவும்?!
இறைவன்: قَالَ : نَعَمْ ، ابن آدم ؛ يتصدق بيمينه يخفيها من شماله  மறைவான தர்மம்
இறைவனின் கோபம் கூட தணிந்து விடுகிறது.   صدقة السر تطفئ غضب الرب 


8. இறையை நினைத்து தனிமை(ச் சிறை) யில் அழுத மனிதன் அந்தப் பெருவெளியின் நிழல் மனிதன்:           رجل ذكر الله خاليا ففاضت عيناه

நரகம் முடிவு செய்யப்பட்ட மனிதன் கூட கண்ணின் சாட்சியால் சுவனம் செல்வான் என்பது நபிமொழி. நுரையளயவு பாவம் இருந்தாலும் இரு சொட்டு கண்ணீரால் அவ்வளவும் மன்னிக்கப் படும் என்றார்கள் நபியவர்கள். ஒரு மனிதனுக்கு நரகம் என்று முடிவு செய்யப்படும், அந்நேரத்தில் அம்மனிதனின் புருவமுடி சொல்லும், ரஹ்மானே! ஒருநாள் இவன் உன் பயத்தால் அழுதான். அதற்கு நான் சாட்சி. மலக்குகள் கூறுவார்கள். புருவமுடியால் அல்லாஹ்வின் மன்னிப்பை பெற்றவன் இவன் என்பார்கள். 

9. சமுதாயத்தைப் பாதுகாக்க பாரா இருந்தவன் ஒன்பதாம் நிழல் மனிதன்:
                                               وَرَجُلٌ كَانَ فِي سَرِيَّةِ قَوْمٍ فَلَقُوا الْعَدُوَّ فَانْكَشَفُوا فَحَمَى أَدْبَارَهُمْ حَتَّى نَجَا وَنَجَوْا أَوِ اسْتُشْهِدَ

தன் சமுதாயத்தின் பாதுகாப்புக்காக விழித்திருந்து பாரா இருப்பவனின் அந்தஸ்த்து என்ன தெரியுமா?
பாரா இருப்பது, ஒரு மாதம் தொடர் நோன்பும், ஒரு மாதம் இரவு நின்று வணக்கம் புரிந்த நன்மையும் கிடைக்கும். காரணம், இவன் பாரா இருக்கும் நம்பிக்கையில் அவனது சமூகம் நிம்மதி பெறுகிறதே!. சமூக சேவைக்கு இஸ்லாம் தரும் மகத்தான அந்தஸ்த்து.

10. சிறுவயதில் அருள்மறை கற்று பெருவயதில் ஓதும் பழக்கமுள்ளவன் பத்தாம் நிழல் மனிதன்                                              رجل تعلم القران في صغرة فهو يتلو في كبيره

அபூதர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்:

قلت يا رسول الله أوصني قال أوصيك بتقوى الله فإنه رأس الأمر كله قلت يا رسول الله زدني قال عليك بتلاوة

  القرآن وذكر الله فإنه نور لك في الأرض وذخر لك في السماء

இப்னு உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்:
 وعن ابن عمر قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء " قيل : يا رسول الله وما جلاؤها ؟ قال : " كثرة ذكر الموت وتلاوة القرآن روى البيهقي الأحاديث الأربعة في شعب الإيمان . 

மானுட வர்க்கத்தையே மாற்றியமைத்த  வல்லமை குர்ஆனுக்கு அப்போதும் உண்டு, சதிகாரர்களின் விதியை மாற்றிய வியத்தகு பெருமை குர்ஆனுக்கு இப்போதும் உண்டு, வல்லரசுகளின் சிரசுகளை வீழ்த்திய பெருமை குர்ஆனுக்கு எப்போதும் உண்டு.

11.ஆதியானவனைத் தொழுக ஆதவனை கண்காணிக்கும் மனிதன் மறுமையின் நிழல் மனிதன்
(தொழுகையின் நேரம் அறிய சூரியனை கண்காணிப்பவன்) 

 عن سلمان الفارسي قال سبعة في ظل الله يوم لا ظل الا ظله رجل لقى أخاه فقال انى أحبك في اللهوقال الآخر ... فقال انى أخاف 
الله ورجل قلبه معلق بالمساجد من حبها ورجل يراعى الشمس لمواقيت الصلاة
  சூரியன் உதிப்பதற்கு முன்னால் சுபுஹ் தொழுகை. ஜவாலுக்கு பின்னால் லுஹர். ஒரு வஸ்த்துவின் நிழல் இருமடங்காக ஆகிவிட்டால் அஸர், சூரியன் மறைந்து விட்டால் மக்ரிப், பிறகு இஷா. என்று நமது தொழுகை நேரங்கள் சூரியனை மையமாகக் கொண்டே கணக்கிடப் படுகிறது.

12. பயன் தரும் பேச்சு, அறிவான மௌனம், இவை இரண்டையும் கொண்டவன் நிழல் மனிதன்:                                            إن تكلم تكلم بعلم، وإن سكت سكت بحلم..


நிழல் மனிதர்கள் கொடை கொண்டு தொடர்ந்து வருவார்கள்