Thursday 19 September 2013

வாலிபர்களே! பாதையின் வழியே பயணத்தைப் பாதுகாருங்கள்.!


“வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது” என்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நாளுக்கு நாள் வாகனங்களும் பெருகிக்கொண்டே செல்கின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளில் வாகனமும் ஒன்றாகிவிட்டது. அரசும் அதிகாரிகளும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்களை மேற்கொண்டாலும் அது சம்பந்தமான பிரசுரங்களை விநியோகித்தாலும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த முடியவில்லை. சாலை விபத்துக்களுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான இஸ்லாம் தரும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் எவ்வளவு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலை விபத்துகளை தடுக்கமுடியாது.
சாலை விபத்துகள் சம்பந்தமான ஓர் புள்ளி விபரம்:
நம் இந்தியத் திருநாட்டில் 2011ஆம் ஆண்டில் நடற்த சாலை விபத்துகளில் 1.36 இலட்சம் பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் மட்டும்15,422 இறந்துள்ளனர் என தேசிய போக்குவரத்து திட்டம் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்களின் இறப்பிற்கு 4 ஆவது காரணியாகவும் சுகாதாரக் குறைவிற்கு 3ஆவது காரணியாகவும் சாலைவிபத்துக்களே அமையும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. பல்வேறு தொற்றுநோய் மற்றும் மற்ற நோய்ப்பாதிப்புகளில் இறப்பவர்களைவிட சாலைவிபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என எச்சரிக்கின்றது இன்னொரு அதிர்ச்சித்தகவல். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. புள்ளிவிபரம் சொல்வது நமது நோக்கமல்ல (விரிவஞ்சி சுருக்கி விட்டோம்.)
விபத்துகளுக்கான காரணங்கள் :
1. தரமற்ற சாலைகள்:
குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக வாகன ஓட்டிகளுக்கு மரணக்குழிகளாக காட்சியளிக்கின்றன. மக்களின் ஓட்டுக்களிலும் வரிப்பணங்களிலும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளுமே இதற்கு முழு முதற்காரணங்களாகும். அரசாங்கம் சாலைகளுக்கென்று ஒதுக்குகின்ற அற்ப பணங்களை இடையில் இருக்கின்ற அதிகாரிகள் ஊழல் செய்து தரமற்ற சாலைகளை போட்டு குடிமக்களின் உயிர்களை பறித்து விடுகின்றனர். ஆட்சியாளர்களின் மெத்தெனப்போக்கும் பொடுபோக்குத்தனமும் குடிமக்களைக் குறித்து எந்தவிதமான கவலையும் கொள்ளாததுமே விபத்துகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன.
மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை கூறும்போது 1.3 சதவீதம் மோசமான சாலைகளே விபத்துகளுக்கு காரணம் என்று கூறுகிறது.
இஸ்லாம் கூறுவது போல ஆட்சியாளர்கள் அமைந்தால் இதுபோன்ற சாலை விபத்துகளை குறைக்க முடியும். அதுபோன்ற ஆட்சியாளர்களை இஸ்லாம் உலகிற்கு வழங்கியிருக்கிறது. குடிமக்களின் பொறுப்புகளை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்.
“உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார்கள்… என நபியவர்கள் கூறினார்கள் (புகாரி 893)
குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்குக் கொடுக்க அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையில் இறந்துபோனால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை தடை செய்யாமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஆட்சியாளர்கள் குடிமக்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவமொன்று:
கடைத்தெருவில் வயோதிகர் ஒருவர் பிச்சை எடுப்பதை கண்ட கலீஃபா உமர்(ரலி) அவர்கள் அவரின் கரங்களைப் பிடித்து பிச்சை எடுக்கும் காரணத்தை கேட்க எனக்கு தளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. என் அடிப்படைத் தேவைகளுக்குக்கூட உழைக்க சக்தியில்லை. என் தேவைகளை நிறைவு செய்யவே இவ்வாறு பிச்சை எடுக்கவேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது என்றார் அம்முதியவர். அதற்கு கலீஃபாவின் பதில் எவ்வாறிருந்தது என்பதை கவனிக்க வேணடும் “முதியவரே நாங்கள் தங்களிடம் நியாயமாக நடக்கவில்லை. தாங்கள் வாலிபராக உழைத்த காலங்களில் தங்களிடமிருந்து பாதுகாப்பு வரியை வசூலித்த நாங்கள் தாங்கள் உழைக்கமுடியாத காலங்களில் கவனிக்காமல் விட்டுவிட்டோமே? எனக் கண்ணீர் மல்கக்கூறி அவர் இறக்கும் காலம் வரை அவருக்கும் அவரைச் சார்ந்து வாழ்வோருக்கும் பொதுநிதியிலிருந்து கொடுக்கும்படி ஆணையிட்டார்கள்.
விபத்துகளில் சிக்கி உயிர் இழக்கும் இத்தகைய குடிமக்களின் உயிர்களைக் குறித்து அரசியல்வாதிகளுக்கு எள்ளின் முனையளவும் கவலையில்லை.
யூப்ரடீஸ் நதிக்கரையில் ஒரு ஆடு அநியாயமாக இறந்தாலும் அதற்காக இந்த உமர் இறைவனால் விசாரிக்கப்படுவான் என கலீஃபா உமர்(ரலி) கூறினார்கள். அவர்கள் ஆண்டு கொண்டிருந்த மதீனாவிற்கும் இராக்கில் அமைந்த யூப்ரடீஸ் நதிக்கும் பல நூறு மைற்கள் இருந்தாலும் ஒரு ஆட்டின் உயிருக்கு எந்தளவு மதிப்பளித்தார்கள் என்பதற்கு இது ஒரு மிகப்பெரும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ குடிமக்களின் உயிர்களை அற்பமாக நினைக்கின்றனர். இப்படி வரலாற்றுச் சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்
2. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது:
உலகத்தில் 44 முதல் 67 சதவீதம் வரையிலான சாலை விபத்து இறப்புகளுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம் என்ற அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார நிறுவனம் ஓர் ஆய்வில் தெரிவித்திருக்கிறது.
அரசே முன்னின்று சாராயக்கடைகளையும் மதுக்கடைகளையும் திறந்து விட்டிருக்கிறது. டாஸ்மாக்கினால் அரசுக்கு வருடந்தோறும் பண்டிகைக் காலங்களிலும் ஏனைய நாட்களிலும் பல கோடிக்கணக்கான வருமானம் வருகிறது. அரசே இதை ஒழித்தால்தான் மதுவினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கமுடியும்.
மது அருந்தியவனுக்கு சாட்டையடி கொடுங்கள். மீண்டும் மீண்டும் அருந்தினால் சாட்டையடி கொடுங்கள். மூன்றாவதாகவோ நான்காவதாகவோ அருந்தினால் கொன்று விடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் ஹாகிம்)
இதுபோன்ற சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் கொண்டுவந்தால் மதுவினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கமுடியும்.
3.கட்டுப்பாடில்லாத அசுர வேகம்:
அசுர வேகத்தினால் பலர் தங்களின் உயிர்களை பறிகொடுத்து விடுகின்றனர். இதற்கு இஸ்லாம் அழகானதொரு தீர்வைத் தருகின்றது. நிதானம் மிக முக்கியம் அவசரம் கூடாது.
அரஃபா தினத்தில் நபி(ஸல்) அவர்களுடன் நான் திரும்பும்போது, நபி(ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் ஒட்டகத்தை அடித்து விரட்டக் கூடிய கடும் (அதட்டல்) சப்தத்தையும் ஒட்டகம் அலறுவதையும் செவியுற்றார்கள். உடனே தம் சாட்டையால் சைகை செய்து, மக்களே! அமைதியைக் கடைப்பிடியுங்கள்! நன்மையென்பது விரைவதிலோ ஒட்டகங்களை குதிரைகளை விரட்டுவதிலோ இல்லை” எனக் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி 1671)
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுது கொண்டிருக்கையில் (அவர்கள்) சில சப்தத்தை செவியுற்றனர். தொழுகையை முடித்துக்கொண்டு உங்களது விஷயம் என்ன? (ஏன் சப்தமிட்டீர்கள்) எனக் கேட்டார்கள். (அதற்கவர்கள்) தொழுகைக்கு அவசரமாக வந்தோம் என்றனர். அதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்காக நீங்கள் வந்தால் அவசியம் அமைதியாக வாருங்கள். எதைப் பெற்றுக் கொண்டீர்களோ அதை (இமாமுடன் சேர்த்து) தொழுங்கள். எது உங்களுக்கு முந்திவிட்டதோ அதை (தொடர்ந்து) நிறைவு செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் ஹதீஸ் எண் : 244)
ஆக அவசரம் கூட விபத்துகளுக்கு காரணமாகி விடுகின்றது. நிதானத்தைக் கடைபிடிப்பது மிகமுக்கியமானது. இதைக் கடைபிடித்தால் அவசரத்தினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கமுடியும்.
4. நீயா? நானா? என்ற போட்டி மனப்பான்மை:
இதுவும் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. வாகனங்களை முந்துவதில் காட்டுகின்ற ஆர்வத்தை நல்லகாரியங்களில் காட்ட முனையவேண்டும்.
நபித்தோழர்கள் தோழியர்கள் வணக்கவழிபாடுகளில், செலவிடுவதில், போர்களில் கலந்துகொள்வதில் போட்டி போட்டிருக்கின்றார்கள்.
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள், நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும் நன்மை செய்வதற்கு விரைகின்றனர். இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்றுமுள்ளவர்கள். (அல்குர்ஆன்: 3:114)
நற்செயல்களின்பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன்: 2:148)
5. ஆணவம்:
பொறுமையான நல்ல சாதுவான மனிதர்கள் கூட வாகனங்கள் ஓட்டும்போது தங்கள் இயல்பிற்கு மாற்றமாக நடந்துகொள்கிறார்கள் என சர்வதேச ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆணவமும், அகம்பாவமும் கூடவே வந்துவிடுகின்றன. பின்னால் வரும் வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பினாலோ அல்லது நம்மை ஓவர்டேக் செய்தாலோ நாம் நம் இயல்பை மறந்து விடுகிறோம். அங்கே ஆணவம் மேலோங்குகிறது. இதுவே விபத்துக்களுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
மேலும் நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம், (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்து விட முடியாது, மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல்குர்ஆன்: 17:37)
ஒருவனுக்கு அவனுடைய ஆடை மமதையை ஏற்படுத்தியது. பெருமையுடன் நடந்ததினால் அல்லாஹ் அவனை பூமியில் புதையுண்டு போகச்செய்தான். அவன் யுகமுடிவு நாள் வரை பூமியில் சென்றுகொண்டே இருக்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறொரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின் ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயை மூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப்
பார்க்க வேண்டும் – மேலும் நிச்சயமாக நான் இவரைப் பொய்யர்களின் நின்றுமுள்ளவர்” என்றே கூறுகிறேன். மேலும் அவனுடன் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றிப் பெருமை அடித்துக் கொண்டனர். மேலும் அவர்கள் நம்மிடம் நிச்சயமாகத் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டார்கள். ஆகையால் நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம், பிறகு அவர்களைக் கடலில் (மூழ்கி விடுமாறு) எறிந்து விட்டோம், ஆகவே அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே)நீர் கவனித்துக் கொள்ளும். (அல்குர்ஆன் 28:38,39,40)
ஃபிர்அவ்ன் ஆணவம் கொண்ட காரணத்தினால் அவனை யுகமுடிவு நாள்வரை உள்ள மக்களுக்கு படிப்பினையாக ஆக்கி வைத்திருக்கிறான். அவன் உடல் இன்றுவரை எகிப்தில் உள்ள ஒரு பிரபலமான அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம், நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). (அல்குர்ஆன்:10:92)
பெருமை எனது மேலாடை கண்ணியம் எனது கீலாடை இவற்றில் ஏதாவதொன்றில் என்னோடு போட்டிபோடுகிறவனை நரகில் போட்டுவிடுவேன் என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூறனார்கள். (அபூதாவூத்)
ஆக பெருமை கொண்டு வாகனம் ஓட்டுவதினால் உயிரை இழக்கவேண்டியது வருமே ஒழிய எதையும் சாதித்து விடமுடியாது.
6.கைப்பேசி:
மக்களின் அத்தியவாசியத் தேவைகளில் முதலிடம் வகிப்பது கைப்பேசி தான். மக்களின் மூன்றாவது கரம் என்று சொல்லுமளவிற்கு செல்போன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செல்போன்களே அவர்களின் உயிர்களையும் பறித்துவிடுகிறது. செல்போன்களில் பேசிக்கொண்டே ரோட்டைக் கடக்கும்போது இரயில்வே லைனை கடக்கும்போது வாகனங்கள் ஓட்டும்போது சாலைவிபத்துகள் நடக்கின்றன இதற்கு இன்னொரு காரணம் கவனமின்மை.
இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள், இன்னும் நன்மை செய்யுங்கள். (அல்குர்ஆன் 2:195)
ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்:5:105)
தொழுகை போர் போன்ற எல்லாக் காரியங்களிலும் கவனத்தை மேற்காள்ளும்படி இஸ்லாம் வலியுறுத்துகிறது.
7. பெற்றோர்கள்:
விலை உயர்ந்த வாகனங்களை தங்களின் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுப்பதும் இல்லையெனில் பிள்ளைகளே பெற்றோர்களை மிரட்டுவதும் சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. சாலை விபத்துகளுக்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக அமைந்துவிடுகின்றனர். தங்களின் செல்லப்பிள்ளைகளுக்கு கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் அவர்களின் உயிர்களை பறித்து விடுகிறது.
கடந்த ஆண்டின் கணக்கின்படி சாலைவிபத்துகளில் அதிகம் பலியானவர்கள் இளைஞர்களே என்பது வேதனைக்குரிய விசயமாக இருக்கின்றது. 15 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்டோரின் அகால மரணத்திற்கு முழுமுதற்காரணமே சாலைவிபத்துகள் தான் என எச்சரிகிறது உலக சுகாதார நிறுவனம்.
ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். (புகாரி 893)
பிள்ளைகளுக்கு இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள உபதேசங்களையும் இன்னபிற இஸ்லாமிய போதனைகளையும் பெற்றோர்கள் போதிக்கவேண்டும்.
8. மக்களின் சாபம்:
வாகனங்களில் அதிகம் சப்தம் எழுப்பிக்கொண்டும், மற்ற வாகனஓட்டிகளை அச்சுறுத்தும் வண்ணமும் பொதுமக்களை அச்சுறுத்திக்கொண்டும் வாகனம் ஓட்டுவது இன்று பிரபலமாகப் பார்க்கப்படுகிறது.
இறைநம்பிக்கையாளன் யாரெனில் மற்ற மக்களின் உயிர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாதுகாப்பளிப்பவனே மூஃமினாவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, நஸாயீ)
“அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நன்மையை நாடுவதே மார்க்கம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மூன்று பிரார்த்தனைகள் இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பெற்றோரின் பிரார்த்தனை, பயணியின் பிரார்த்தனை, அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், திர்மிதீ, இப்னு ஹிப்பான்)
அநீதியிழைக்கப்பட்வனின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படு;ம் அவன் பாவியாக இருந்தாலும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.முஸன்னஃப் அபீஷபா
“பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். (புகாரி 10)
9.பிரார்த்தனை இன்மை:
வாகனங்களில் பயணிக்கும்போது இறை நினைவுடன் பயணிக்கவேண்டும். இஸ்லாம் காட்டித்தந்த பிரார்த்தனைகளை புரியும்போது இறைப்பாதுகாப்பு என்றும் நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்.

أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ إِذَا اسْتَوَى عَلَى بَعِيرِهِ خَارِجًا إِلَى سَفَرٍ كَبَّرَ ثَلاَثًا ثُمَّ قَالَسُبْحَانَ الَّذِى سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِى سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِى السَّفَرِ وَالْخَلِيفَةُ فِى الأَهْلِ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِى الْمَالِ وَالأَهْلِ

பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன். அல்லாஹ் மிகப்பெரியவன். அல்லாஹ் மிகப்பெரியவன். எங்களுக்கு இதனை வசப்படுத்தித் தந்தவனாகிய அவன் மிகப் பரிசுத்தமானவன். (இதன் மீது பிரயாணிக்க அவன் வசப்படுத்தி தந்திராவிட்டால்) இதற்கு நாங்கள் சக்தி பெற்றவர்களாக ஆகியிருக்கமாட்டோம். மேலும் நிச்சயமாக நாம நம்முடைய இரட்சகனிடமே திரும்பக்கூடியவர்கள். யாஅல்லாஹ்! நிச்சயமாக நாங்கள் நன்மை மற்றும் பயபக்தி நீ பொருந்திக்கொள்ளக்கூடிய செயல்களை எங்களுடைய பயணத்தில் உன்னிடம் நாங்கள் கேட்கிறோம். யாஅல்லாஹ்! இந்த எங்களுடைய பயணத்தை எங்களுக்கு எளிதாக்கித் தருவாயாக. அதன் தூரத்தை சுருக்கியும் தருவாயாக. யா அல்லாஹ்! நீதான் இப்பயணத்தில் தோழன். என் குடும்பத்தினரின் என் பிரதிநிதி. யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் பயணத்தின் களைப்புகளிலிருந்தும் (ஆபத்துகள் ஏற்பட்டு) தோற்றம் மாறுவதிலிருந்தும், செல்வம் மற்றும் குடும்பத்தில் தீய விளைவுகள் ஆகியவற்றிலிருந்தும் உன்னைக்கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன். (முஸ்லிம்)
10. படைத்தவனின் நாட்டம்:
இவை எல்லாவற்றிற்கும் மேலாக படைத்தவனின் நாட்டம் ஒன்று இருக்கிறது. விபத்துகளுக்கு மட்டுமல்ல நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும் இறைவனின் நாட்டப்படியே நடக்கின்றன.
நிகழும் நிகழ்ச்சிகளெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை, மேலும் எவர் அல்ல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் – அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 64:11)
(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கி விட்டால் (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 6:17)
அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது, அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை, தன் அடியார்களில் அவர் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் – அவன் மிகவும் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்குர்ஆன்: 10:107)
சாலை விதிகளை கடைபிடியாமை,முறையாக பயிற்சி பெறாத வாகனஓட்டிகள், தூக்கமின்மை ,உடல் சோர்வு போன்ற காரணங்களாலும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இவைகளை அரசு தீவிரமாக கண்காணித்து இஸ்லாம் தரும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே சாலைவிபத்துகளை கட்டுக்குள் கொண்டுவரமுடியும் இன்ஷா அல்லாஹ்

இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம்

நன்றி: காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!


\


அப்துல் வாஜித் மௌலானா அவர்களின் பேரனும், திண்டுக்கல், பேகம்பூர், டில்லி குதுப்கானா உரிமையாளர் , கனி ஹல்ரத் அவர்களின் மகனுமான சைபுல்லாஹ் அவர்கள் சாலை விபத்தில் மவ்த். இன்று மக்ரிபில் பேகம்பூர் பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
 இவரின் மக்பிரத்திற்காக துஆ செய்யவும்.

Thursday 12 September 2013

ஹஜ்- கடைசி கடமை!?


 இஸ்லாத்தில் ஹஜ் கடைசிக் கடமை. எனவே வாழ்க்கையின் கடைசியில் தான் அதை நிறைவேற்ற வேண்டும் என்கிற மனோநிலை ஓரளவு மாறிவிட்டாலும் இக்கருத்து மக்களிடமிருந்து முழுமையாக எடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும். இஸ்லாமிய கடமைகளில் எதுவுமே முதலாவது,கடைசி என்ற பாகுபாடு கிடையாது. எல்லா கடமைகளும் அதனதன் இடங்களில் முதல் நம்பரில் தான் வரும். குறிப்பாக ஹஜ்ஜைப் பொறுத்தவரை தற்காலத்தில் இளம் வயதில் செல்வது தான்  சாலச் சிறந்தது.
வயது முதிர்ந்தவர்கள் ஹஜ்ஜுடைய நாட்களில் மட்டுமல்லபயணம் முழுவதும் பல சிரமங்களை சகிக்க வேண்டியிருக்கும். நெருங்கிய சொந்தக் காரர்கள் இல்லையானால் அது போன்றதொரு கஷ்டமான சூழ்நிலை வேறெதுவும்  இருக்க முடியாது.
இளம் வயதில்:
                இளம் வயதில் ஹஜ் செய்யும் போது அல்லாஹóவின் கிருபையால் பல சிரமங்களை தவிர்க்க முடியும். தவாஃப்ஸயீ செய்வதும் சுலபமாகி விடும். ஹதீம்முல்தஜம் போன்ற துஆ’ ஏற்றுக் கொள்ளப் படும்இடங்களில் முந்திச் செல்வதுஇடம் பிடிப்பது போன்றவை வாலிபர் களுக்கும் நடுத்தர வயதினர்களுக்கும் சுலபம். வயதானவர்கள் ஹஜ்ஜுக்கு செல்லக்கூடாது என்பது இதன் பொருளல்ல.  இன்றைய இளைய தலைமுறையினர் இது பற்றி நன்கு யோசிக்க வேண்டும். வாழ்க்கையின் கடைசியை நாம் தீர்மானிக்க முடியாது. மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இன்றும்  நல்ல வசதி படைத்தவர்களில் எத்தனையோ பேர் ஹஜ்ஜை தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதே நிலையில் மரணித்து விட்டால் யூதனாகவோ,கிறிஸ்தவனா கவோ மரணிக்கட்டும்” என்று நபி (ஸல்) கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள். (பைஹகீ 6;452). ஹஜ் செய்ய நாடியவர் அதை சீக்கிரம் செய் யட்டும்.  (ஹாகிம் -1645)  மக்காவுக்கு சீக்கிரம் புறப்படுங்கள். ஏனெனில் நோயோ அல்லது வேறு ஏதாவது தேவையோ ஏற்பட்டு விடுவதை யாரும் (முன்னரே) அறிய மாட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (பைஹகீ 6/463) 15வயதுக்குப்பின் ஹஜ் கடமையாகி ஹஜ் செய்யாமலேயே மரணித்து விட்டால் அவரும் கடமை தவறியவராகிவிடுகிறார்.
                லட்சக்கணக்கில் பணம் படைத்தவர் தான் ஜகாத் கொடுக்க வேண்டுமென்று நினைப்பது போல் பெரும் பண முதலைகள் தான் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டுமென்று நினைப்பதும் தவறு. பெரிய வருமானம் வரவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அல்லாஹóவின் நாட்டம் இருந்தால் எதுவும் நடக்கும்.
ஹஜ்ஜுக்கு முன்:
                கஃபதுல்லாஹóவுக்கு செல்ல வேண்டு மென்ற எண்ணம் யாருக்கும் இல்லாமல் இருக்க முடியாது. சதாவும் அது முஃமினுடைய உள்ளத்தில் ஓடிக் கொண்டிருக்கும். எனினும் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணம் உறுதியான பின் ஹஜ்உம்ரா ஜியாராவுடைய சட்டங்களைத் தெரிந்து கொள்வதில் தீவிரம் காட்ட வேண்டும். எந்த வணக்கமாக இருந்தாலும் அதில் இரண்டு தன்மைகள் வராதவரை முறையான வணக்கமாக ஆகாது.
                1. அல்லாஹóவுக்காக மட்டுமே செய்கிறேன் என்ற (இக்லாஸ்) மனத் தூய்மை
                2. சட்டங்களை அறிந்து சரியாக செய்வது.
                ஹஜ்ஜை யாருக்கும் தெரியாமல் மறைத்து செய்ய முடியாது. எப்படியாவது வெளிப் பட்டு விடும். எனவே அல்லாஹóவுக்காக மட்டுமே செய்கிறோம் என்ற மனத்தூய்மை ரொம்ப முக்கியம். மனத் தூய்மை என்பதும் பெருமை இல்லை” என்பதும்  பேச்சிலும் எழுத்திலும் இருந்தால் போதாது. உள்ளத்தில் இருக்க வேண்டும். அல்லாஹó மனதின் எண்ண ஓட்டங்களை நன்கு அறிந்திருக்கிறான். மக்கள் தன்னை ஹாஜி’ என்று சொல்ல வேண்டுமென்ற எண்ணம் கடுகளவு கூட வந்து விடக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவுக்காக புறப்படும்போதுயா அல்லாஹó! இந்த ஹஜ்ஜை பிரபலத்தைத் தேடுவதற்காகவோ மற்றவர்களுக்கு காட்டுவதற்காகவோ   செய்யும் ஹஜ்ஜாக ஆக்கிவிடாதே”! என்று துஆ செய்தார்கள்.
கடமையுணர்வு:
                ஹஜ் என்பது தொழுகையைப் போன்று ஒரு கடமை.  மக்காவுக்குப் போகிறேன்” என்று சாதாரணமாக சொல்லிவிட முடியாது. எல்லாரும் போகிறார்கள்நானும்போகிறேன் என்றோஅவர் போய் விட்டார்நான் போகாமல் இருந்தால் மரியாதை இல்லை என்றோ நினைக்கக் கூடாது. இது ஒரு இபாதத் - கடமை. யாருக்கு கடமையோ அவர் கண்டிப்பாக போக வேண்டும். இது மற்ற பயணங்களைப் போல அல்லகட்டாயக் கடமை என்ற உணர்வு இருக்க வேண்டும். கடமையை ஒழுங்காக நிறைவேற்றுவதற்காக பேணுதல் மிக்க ஆலிமிடம் சட்டங் களை கேட்டோ அல்லது படித்தோ தன்னை ஹஜ்ஜுக்கு தயாராக்கிக் கொள்ள வேண்டும். சட்ட விளக்கங் களை யாராவது ஒருவரிடம் தான் கேட்க வேண்டும். பல பேரிடம் கேட்டு குழம்பி விடக் கூடாது. மக்காவில் செய்பவர்களைப் பார்த்தும் செய்து விடக் கூடாது.
                பொருளாதார ரீதியாகவும்அரசாங்க ரீதியாகவும் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் மும்முரமாகச் செய்கிறார்கள். செய்து தான்  ஆக வேண்டும். ஆனால் உலகியல் தொடர்பான காரியங்களில் காட்டப்படும் தீவிரம் மறுமை தொடர்பான சட்டங்களை தெரிந்து கொள்வதில் காட்டப்படுவதில்லை என்பதே உண்மை. அல்லாஹுதஆலா குர்ஆனில் ஹஜ்ஜுடைய சட்டங்களைப் பற்றிக் கூறிய பின், “அல்லாஹóவைப் பயந்து கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹóகடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (2:196)” என்று கூறுகிறான். இந்த வசனம் ஹஜ்ஜுடைய சட்டங்களை தெரிந்து செயல்படுத்துவதை எச்சரிக்கையுடன் வலியுறுத்துகிறது. நிறைய பேர் சட்டம் தெரியாமல் எதையோ செய்கிறார்கள்.  பெரிய தொகை செலவு செய்து மக்காவரை செல்கிறோம். சட்ட விளக்கங்களில் முறையாக கவனம் செலுத்தினால் ஹஜ்ஜை  வீணாக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். சட்ட ஒழுங்குகளை பேணாமல் மக்கள் ஹஜ் செய்வதால் ஹஜ்ஜின் மூலம் கிடைக்க வேண்டிய பரக்கத்துகளையும் பலன்களையும் இந்த உம்மத்  இழந்து தவிக்கிறது என்று வேதனைப்பட்டுக் கொள்கிறார் மௌலானா. ரஃப்அத் காஸிமீ அவர்கள். (மஸாயிலே ஹஜ்ஜோ உம்ரா)
ரசனை:
                ஊட்டிகொடைக்கானல் செல்பவர்கள் அதற்குரிய ரசனையோடு தான் செல்வார்கள். ஒருவர் கொடைக்கானலில் தூண் பாறையை பார்த்து விட்டு இதைப் பார்க்கத்தான்  வந்தோமாஒரு உயரமான பாறை! அவ்வளவு தானே! என்று சொல்பவராக இருந்தால் அவரை எப்படிப் பார்ப்போம்.  அதே போன்று ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் சட்டங்கள் தெரிந்தால் மட்டும் போதாது. மக்காவும் மதீனாவும் இஸ்லாம் உருவான இடங்கள். இஸ்லாத்தின் ஆரம்பகால வரலாற்றுச் சின்னங் களையும்,  நபி இபுராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தினரின் தியாகச் சின்னங்களையும் சுமந்து நிற்கும் புண்ணிய பூமி தான் மக்காவும்மதீனாவும். அவற்றை ரசிப்பதற்கு ஈமானிய சிந்தனை தேவை. அத்துடன் இஸ்லாமிய வரலாற்றுச் சிந்தனையும்  அவசியம். மைதானங்கள்,கட்டிடங்கள்பள்ளிவாசல்கள்மலைக் குகைகள்கப்ருஸ்தான்கள் போன்றவை மக்காமதீனாவில் மட்டுமல்ல. முழு உலகிலும் இருக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் மத்தியில் வானம்பூமிக்கு மத்தியிலுள்ள வேறுபாடு இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் நடந்த இடம்நபித்தோழர்கள் போரிட்ட இடம்,நபியவர்களுக்கு நபித்துவம் கொடுக்கப்பட்ட குகை என  புண்ணியத்தலத்தின் ஒவ்வொரு இடமும் நம்மை இஸ்லாமிய  வரலாற்றின் ஆரம்ப காலத்திற்கே இழுத்துச் சென்று விடும். இவற்றை உணர்வதற்கு தனி ரசனை இருக்க வேண்டும். இது காசு கொடுத்து பெற வேண்டிய பொருளல்ல. அதற்காக நீண்ட கால முயற்சியும் பயிற்சியும் தேவை. குறைந்த பட்சம் ஹாஜிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டால் அந்த சிந்தனையை ஓரளவு வளர்த்துக் கொள்ளலாம். படிப்பதாக இருந்தால் ஷைகுல் ஹதீஸ்  ஜகரிய்யா (ரஹó) அவர் களுடைய ஹஜ்ஜின் சிறப்புகள்” என்ற நூலையும், “அர்ரஹீகுல் மக்தூம்” (தமிழ்) என்ற நூலையும் படிக்கலாம்.
வஸிய்யத்:
                பயணம் புறப்படுவதற்கு முன் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்திருக்க வேண்டும். முக்கியமாக கொடுக்க வேண்டிய கடனை  அடைத்திருக்க வேண்டும். கடன் வாங்கி ஹஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை எனினும்அந்தக் கடனை அடைப்பதற்குத் தேவையான சொத்துக்களை  விட்டுச் சென்றிருந்தால் பரவாயில்லை. அதிகப்படியான சொத்துக்கள்  ஹஜ் செய்யப் போதுமான அளவுக்கு இருந்தால் ஹஜ் கடமையாகி விடும். அவற்றை விற்று ஹஜ் செய்ய வேண்டும்.  விற்க விருப்பமில்லையானால் கடன் வாங்கி ஹஜ்ஜுக்குச் செல்ல வேண்டும். அத்துடன்  கண்டிப்பாக வஸிய்யத் எழுதி வைக்க வேண்டும்.  கடன் அடைக்கப்படாவிட்டால்  அதற்குரிய  ஏற்பாடுகளை செய்து விட்டு யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற விபரங்களை தெளிவாக (வஸிய்யத்) எழுதி குடும்பத்தார்களிடம் அல்லது நம்மைச் சார்ந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டுத் தான் ஹஜ்ஜுக்குசெல்ல வேண்டும்.    
     அடியார்களுக்கு நிறைவேற வேண்டிய கடமைகளை முடித்தபின் பயணம் புறப்படும்போது நெருக்கமானவர்கள்நல்லோர்கள்பெரியவர்களை சந்தித்துதுஆ’ பெற்றுக்கொள்வது மார்க்கத்தில் விரும்பத்தக்கதே! நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ஹஜ்ஜுக்காக பயணம் சொல்லி வந்த போது துஆசெய்து வழியனுப்பி வைத்தார்கள். இன்று பயணம் சொல்லுதல் என்ற பெயரில் தேவையில்லாத சிரமங்கள் ஏற்படுகிறது. சாதாரண ஒரு காரியத்திற்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுப்பதால் அசல் நோக்கம் தப்பிவிடுகிறது. அதுவே பெருமைக்கும்முகஸ்துதிக்கும் காரணமாகி விடுகிறது.
தொழுகையும்கடமையே!
     பயணம் புறப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத் நபில் தொழுவது சுன்னத்தாகும். ஒருவர் பயணத்தை ஆரம்பிக்கும் போது தொழும் இரண்டு ரக்அத்தை விட ஆகச் சிறந்த ஒன்றை யாரும் அவருடைய குடும்பத்தினரிடம் விட்டுச் செல்ல முடியாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல்-அத்கார்) நபியவர்கள் பிரயாணத்தில் எந்த இடத்தில் இறங்கினாலும் இரண்டு ரக்அத் தொழுது விட்டுத் தான் அந்த இடத்திலிருந்து விடைபெறுவார்கள்.
     ஹஜ்ஜுடைய பயணத்தில் எக்காரணம் கொண்டும் கடமையான தொழுகைகள் தப்பி விடக் கூடாது. இரயில் நிலையத்திலும்விமான நிலையத்திலும் பயணத்திற்கிடையிலும் அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஹஜ்ஜைப் போல ஐந்து நேரத் தொழுகையும் கட்டாயக் கடமை. பயணத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியவில்லையானால் ஹஜ்ஜே கடமையாகாது. (ஃபஸாயிலே ஹஜ்)
விண்ணில் ஒரு லெப்பைக் முழக்கம்:
     சென்னையிலிருந்து நேராக மக்கா செல்கிறாரென்றால் இஹóராமுடைய நபில் இரண்டு ரக்அத் தொழுது உம்ராவுக்காக இஹóராம் கட்டிக்கொண்டு விமான நிலையம் செல்ல வேண்டும். எனினும் உம்ராவுடைய நிய்யத் விமானம் புறப்பட்டபின் வைத்துக் கொள்ளலாம். (மீகாத் -எல்லையைக் கடப்பதற்கு முன் நிய்யத் வைப்பது கட்டாயம்) விமானம் தாமதமாகிவிட்டால் இஹóராமுடைய கட்டுப்பாடுகளைப் பேணுவதில் அதிகப்படியான சிரமம் ஏற்படலாம். உம்ராவுடைய நிய்யத்துடன் மூன்று தடவை தல்பியா ஓதிக் கொள்ள வேண்டும். மீகாத் என்பது ஒரு எல்லை. ஹஜ்உம்ராவுக்குச் செல்லும் போது இஹóராம் இல்லாமல் அந்த எல்லையைக் கடக்கக் கூடாது. இந்தியாவிலிருந்து வõமானத்தில் பயணம் செய்தால் கர்னுல் மனாஜில்” என்ற மீகாத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கும்.  இது மக்காவிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ளது. விமானம் மீக்காத்தை கடப்பதற்கு  15 அல்லது 20 நிமிடங்களுக்கு முன் அது பற்றிய அறிவிப்பு கொடுக்கப்படும். அந்த சமயத்தில் ஹாஜிகள் எழுப்பும் லெப்பைக் அல்லாஹும்ம லெப்பைக்....” என்ற தல்பியா முழக்கம் இன்றும் என்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும். மண்ணின் முழக்கம்  விண்ணைப் பிளக்கும். ஆனால் இங்கு சில நூறு பேர்களை சுமந்து கொண்டு ஒரு விமானம் பறக்கிறது. ஆகாயத்தில் அவர்கள் தவிர வேறு யாரும் இல்லை. விமானம் மீகாத்தை நெருங்க நெருங்க விண்ணில் ஒலித்த தல்பியா முழக்கம் மண்ணைப் பிளந்தது. லெப்பைக் அல்லாஹும்ம லெப்பைக்” இபுறாஹீம் (அலை) அவர்கள் மக்களை ஹஜ்ஜுக்கு அழைக்கும்போது அவர்கள் வெகு தூரமான இடங்களிலிருந்தெல்லாம் வருவார்கள் என்று அல்லாஹó நபியிடம் கூறிய போதுஇப்படி விமானத்தில் பறந்த நிலையில் லெப்பைக்’ என்று கூறி தம்முடைய அழைப்புக்கு பதில் கொடுப்பவர்கள் பற்றி நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ!

                                   நன்றி:நிஜாமுத்தீன் யூஸுபி 

எதிர்பார்ப்பில்லா ஜீவன்கள்!


உலகில் நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளை இஸ்லாம் இந்த உம்மத்திற்கு மிகத்தெளிவாக போதனை செய்திருக்கிறது. அதற்கு حقوق العباد என்று பெயரும் வைத்திருக்கிறது. இந்த حقوق العبادல் முதல் இடத்தைப் பிடித்தவர்கள் நம்முடைய பெற்றோர்கள். அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமைகளுக்குப் பிறகு மிக முக்கியமான கடமை பெற்றோர்களுக்கு செய்யவேண்டிய கடமைதான். பாவங்களில் குஃப்ருக்குப் பிறகு பெரிய பாவம் பெற்றோருக்கு மாறு செய்வதுதான்.
பிள்ளைகளின் வாழ்க்கை சீராகுவதும், சீரழிவதும் பெற்றோரின் துஆவிலும், சாபத்திலும் தான் இருக்கிறது.


வரலாற்றில் ஒருநாள்:  ஜுரைஜ் எனும் வணக்கசாலி, ஒருநாள் தொழுது கொண்டிருந்தார். அந்நேரத்தில் அவரின் தாய், மகனை அழைக்கிறார். மகனோ அல்லாஹ்வின் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்து தாயிற்குப் பதில் தராமல் தொழுகையில் ஈடுபடுகிறார். மனமுடைந்த தாய், அல்லாஹ்விடம் இறைவா! என் மகனை விபச்சாரியின் (விஷயத்தில்) முகத்தில் விழாமல் மரணிக்கச் செய்யாதே என்று துஆ செய்தார்.  நாட்கள் ஓடியது. ஒருநாள் ஒரு விபச்சாரி, ஆட்டிடையன் ஒருவனோடு தவறாக நடந்து, அவன் மூலமாக ஒரு பிள்ளையையும் பெற்றெடுத்தாள். அந்த குழந்தை, ஜுரைஜூக்குத்தான் பிறந்தது என்று பொய் சொன்னாள். மக்களோ இதை உண்மையென நம்பி ஜுரைஜை கடுமையாக தாக்கினார்கள். பிறகு ஜுரைஜ் அவர்கள் இரண்டு ரகஅத் தொழுதுவிட்டு வந்து அந்த பிஞ்சு குழந்தையிடம் உன் தகப்பன் யாரென்று கேட்டார்? அந்த குழந்தை அல்லாஹ்வின் உதவி கொண்டு  என்னுடைய தந்தை இன்ன ஆட்டிடையன் என்றது.

நீதி: தன் நேசர்களை இறைவன் எப்படியும் பாதுகாப்பான் என்றாலும், தாயின் துஆ இறைநேசராக இருந்தாலும் விடாது துரத்தும் என்பதை உணர்த்துகிறது.
பெற்றோரைப் புன்முறுவலோடு பார்ப்பது, இறைக் கடமையாம் ஹஜ் செய்த நன்மை என்பது இறைத்தூதுவரின் வாக்கல்லவா?
பார்த்தாலே நன்மைதருபவையில் கஃபத்துல்லாஹ்,குர்ஆன் இவ்விரண்டோடு சேர்த்து பெற்றோரையும் இணைத்திருப்பது எவ்வளவு பெரிய சிறப்பை உணர்த்துகிறது!

உலகில் உள்ள தொடர்புகள் அனைத்தும் ஏதாவதொரு பிரதிபலனை எதிர்பார்த்தே இருக்கிறது. ஏன்! பெற்றெடுத்த பிள்ளைகள்கூட பிரதிபலனை எதிர்பார்த்துதானே நம்மை விரும்புகிறார்கள். ஆனால் நம்மைப் பெற்றெடுத்த நமது பெற்றோர்கள் நம்மிடம் எவ்வித பலனையும் எதிர்பார்ப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்மிடமிருந்து பலனை பெரும் முன்னேகூட அவர்கள் இறந்தும் போகலாம்.

பெற்றோரை மதிக்க வேண்டும் என்பதை எல்லா மதங்களும் போதிக்கின்றன. ஆனால் இஸ்லாம் மட்டும்தான் இதையும் வணக்கமாக்கியது.நபியவர்களும் கூட சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இதை சட்டமாக தவறியதில்லை.
பெற்றோரை தவிக்கவிட்டு விட்டு ஹிஜ்ரத்திற்குப் புறப்பட்ட சஹாபியை நபியவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பினார்கள்.                                                                                                                           :عن عبد الله بن عمرو رضي الله عنه قال  
جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم  فقال جئت أبايعك على الهجرة وتركت أبوي يبكيان فقال  ارجع إليهما فأضحكهما كما أبكيتهما    رواه أبو داود ــ كتاب الجهاد برقم 216  

நபியவர்களிடம் ஒரு சஹாபி கேட்டார்கள். பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமை என்ன? என்றபோது  அவ்விருவரும் உனக்கு சுவர்க்கம் அல்லது நரகம் என்றார்கள். 


وأخرج ابن ماجه أن رسول الله صلى الله عليه وسلم، سأله أحد الصحابة قائلاً: ما حق الوالدين؟ قال: هما جنتك ونارك. 
                      
ஹசன் பசரீ (ரஹ்) அவர்களின் தாய் மரணமான போது ஹசன் பஸரீ அவர்கள் கடுமையாக அழுதார்கள். மக்கள் கேட்டபோது حسن بصري  அவர்கள், அல்லாஹ் எனக்கு சுவனம் செல்ல இரண்டு வாசல்களை கொடுத்தான். அதி ஒருவாசல் மூடப் பட்டுவிட்டது. இன்னும் நான் சுவனம் செல்ல ஒரு வாசல்தானே இருக்கிறது. என்பதற்காக அழுகிறேன் என்றார்கள்.

தாயைப் பற்றிய செய்திகள் நிறைய பேசப் படுகிறது. பெரும்பாலும் தந்தைமார்கள் ஒதுக்கப் படுகிறார்கள். தந்தை என்பவர்  இந்த உலகில் மட்டுமல்ல, மறு உலகிலும் அவர்தான் நமக்கு அடையாளமும்,முகவரியும்.
عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ 
அது மட்டுமல்ல. கஃபாவில் சில இடங்களில் எப்படி துஆ  அங்கீகரிக்கப் படுமோ, துஆ ஏற்பதற்கான நேரம் என்று சில நேரம் இருக்கிறதோ அது மாதிரி தகப்பனின் துஆவும் மக்பூலான துஆவாகும். 
ஒருநாள் நபியவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். வந்தவர், நபியிடம் தன் தந்தை அடிக்கடி பணம் கேட்பதாக முறையிட்டார். நபியவர்கள் உன் தந்தையை அழைத்துவா! என்றார்கள். வந்த மனிதர், தன் தந்தையை அழைக்கச் சென்றார். அவர் வருவதற்குள்ளாக ஜிப்ரயீல் வந்து, நபியே! அந்த தகப்பன்னார், மனதில் சில வரிகளைப் பாடிக் கொண்டிருக்கிறார். அதையும் விசாரியுங்கள், என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். நபியவர்கள் விசாரித்து விட்டு நீயும், உனது பொருளும் உன் தகப்பனுக்குத் தான் சொந்தம்,என்றார்கள்,

عن جابرٍ - رضِي الله عنه - قال: جاء رجلٌ إلى النبي - صلَّى الله عليه وسلَّم - فقال: يا رسول الله، إنَّ أبي أخَذَ مالي، فقال النبي - صلَّى الله عليه وسلَّم - للرجل: ((اذهَبْ فأتِني بأبيك))، فنزل جبريل - عليه السلام - على النبي - صلَّى الله عليه وسلَّم - فقال: إنَّ الله - عزَّ وجلَّ - يُقرِئك السلام ويقول لك: إذا جاءَك الشيخ فسَلْه عن شيءٍ قالَه في نفسه ما سمعَتْه أذناه، فلمَّا جاء الشيخ قال له النبي - صلَّى الله عليه وسلَّم - ما بال ابنك يَشكوك، أتريد أخْذ ماله؟ قال: سَلْهُ يا رسول الله، هل أُنفِقه إلا على إحدى عمَّاته أو خالاته أو على نفسي! فقال النبي - صلَّى الله عليه وسلَّم -: ((إيهٍ! دَعْنا من هذا، أخبِرنا عن شيءٍ قُلتَه في نفسك ما سمعَتْه أذناك))، فقال الشيخ: والله يا رسول الله ما يَزال الله يزيدنا بك يقينًا! لقد قلتُ في نفسي شيئًا ما سمعَتْه أذناي فقال - صلَّى الله عليه وسلَّم -: ((قُلْ وأنا أسمع))، قال: قلت:
غَذَوْتُكَ مَوْلُودًا وَمُنْتُكَ يَافِعًا 
تُعَلُّ بِمَا أَجْنِي عَلَيْكَ وَتَنْهَلُ 
إِذَا لَيْلَةٌ ضَافَتْكَ بِالسُّقْمِ لَمْ أَبِتْ 
لِسُقْمِكَ إِلَّا سَاهِرًا أَتَمَلْمَلُ 
كَأَنِّي أَنَا الْمَطْرُوقُ دُونَكَ بِالَّذِي 
طُرِقْتَ بِهِ دُونِي فَعَيْنَايَ تَهْمُلُ 
تَخَافُ الرَّدَى نَفْسِي عَلَيْكَ وَإِنَّهَا 
لَتَعْلَمُ أَنَّ الْمَوْتَ وَقْتٌ مُؤَجَّلُ 
فَلَمَّا بَلَغْتَ السِّنَّ وَالْغَايَةَ الَّتِي 
إِلَيْهَا مَدَى مَا فِيكَ كُنْتُ أُؤَمِّلُ 
جَعَلْتَ جَزَائِي غِلْظَةً وَفَظَاظَةً 
كَأَنَّكَ أَنْتَ الْمُنْعِمُ الْمُتَفَضِّلُ 
فَلَيْتَكَ إِذْ لَمْ تَرْعَ حَقَّ أُبُوَّتِي 
فَعَلْتَ كَمَا الْجَارُ الْمُجَاوِرُ يَفْعَلُ 

قال: فحينئذٍ أخذ النبي - صلَّى الله عليه وسلَّم - بتلابيب ابنه وقال: ((أنت ومالُك لأبيك))
 எனவே  பெற்றோரை பொறுப்போடு பார்த்துக் கொள்வது பிள்ளைகளின்  தலையாய கடமையாகும்.
 











Friday 6 September 2013

சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கறிக்கோழிதான் காரணமா?


பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கறிக்கோழிதான் காரணமா? குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த சுசிலாவுக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண்கள் இருவரும் பதினாறு வயதில்தான் பருவமடைந்தார்கள். மூன்றாவது பெண் பத்து வயதில் உட்கார்ந்துவிட்டாள். சின்னமகள் வயதுக்கு வந்ததை வெளியில் சொல்ல வெட்கப்பட்ட தாய், மகளை டாக்டரிடம் அழைத்துச் சென்றார். ""எங்க பரம்பரையில யாருமே 15 வயதுக்கு முன்னால பூப்படையமாட்டாங்க. இவள் 10 வயசுல வந்துட்டாள். ஏதாவது நோய் இருக்குமோன்னு பயமா இருக்கு டாக்டர்.'' சிறுமியை பரிசோதித்த டாக்டர், ""புள்ளைக்கு உடம்புல புரோட்டின் சத்து அதிகமாட்டு இருக்கு. பிராய்லர் கோழி இறைச்சியில அதிக புரோட்டின் இருக்கு. அதை அதிகம் சாப்பிட்டால் குழந்தைகள் சீக்கிரம் வயதுக்கு வர நிறைய வாய்ப்பிருக்கு'' என்றார் டாக்டர்.. ""ஆமாம் டாக்டர், பெரிய பொண்ணுங்களைவிட இவள் பிராய்லரை விரும்பிச் சாப்பிடுவாள். கோழி இறைச்சி இல்லைன்னா இவளுக்கு சாப்பாடு இறங்காது'' என்றார் சுசிலா. இதே ஊரைச்சேர்ந்த கோகிலவாணியின் மகளும் 10 வயதில் வயதுக்கு வந்துவிட்டாள். (Your family too some daughters early happened like this) பாஸ்ட்ஃபுட் அதிகம் விரும்பிச் சாப்பிடுவதால் இந்த வளர்ச்சி மாற்றம் ஏற்பட்டிருக்குமோ? சந்தேகப்பட்ட கோகிலவாணி மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். ""பாஸ்ட்ஃபுட் சாப்பிட்டால் உடல் பருமனாகும். பருவத்திற்கு வரமாட்டாள். பிராய்லர் கோழி விரும்பிப் சாப்பிடுவாளா உங்கள் பெண்?'' -திருப்பிக் கேட்டார் பெண் மருத்துவர். ""கோழிதான் காரணமா டாக்டர்?'' ""கோழிக்கு போடுகிற ஊசி மருந்து காரணமாக இருக்கும்'' என்றார் டாக்டர். தற்போது பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடு வதை இந்தப் பகுதி மக்கள் வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதே பிராய்லர்கள்தான் காயத்ரி தேவி என்ற ஆரம்பப் பள்ளி மாணவியையும் தாய்மைக்கு தயாராக்கி யுள்ளது. ""10 வருடத்திற்கு முன்பு நகர்ப் புறத்து மக்கள் பிராய்லர் இறைச்சி யை விரும்பிச் சாப்பிட்டனர். இப்போது பிராய்லர் இறைச்சிக்கடை இல்லாத கிராமம் இல்லை என்கிற அளவுக்கு விற்பனையாகிக்கொண்டிருக் கிறது. பிராய்லர் கோழிகள் சீக்கிரம் பெருக்கவேண்டும், எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார் கள். இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது. இது ஆண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது'' என்கிறாô சமூக ஆர்வலர் சேம்ஜி. இது .உண்மை தானா? பட்டுக்கோட்டை அரசு கால் நடை மருந்தக மருத்துவர் பெயர் வேண்டாம் என்ற கண்டிஷனோடு பதில் சொன்னார். ""தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளவை கோழிகளுக்கான நோய்த் தடுப்பு மருந்துகள்தான். கோழி வளர்ச் சிக்கான மருந்துகள் அல்ல. வெளி நாடுகளில் இறைச்சிக்காக வளர்க்கப் படும் பன்றி மற்றும் மாடுகளுக்கு குறுகிய நாளில் வளர்ச்சியடைய ஊசிகள் போடு வது வழக்கம். சில மாதங்களில் கொழுகொழுவென வளர்ந்துவிடும். இந்தியாவில் அத் தகைய மருந்துகள் பயன்படுத்தப் படவில்லை. ஏனெனில் அந்த மருந்துகளின் விலை அதிகம். ஆனால் பிராய்லர் இறைச்சியில் அதிகம் புரதச் சத்து இருப்பது உண்மை'' என்றார். கால்நடைகள் ஆய்வு மைய பேராசிரியர் ஒருவரிடம் நாம் இந்த "சிறுமிகள் பூப்படையும்' பிரச்சனை பற்றி கேட்டபோது... ""இந்த சந்தேகம் எங்களுக்கும் இருக்கிறது. தென் மாவட்டங்களில் பிராய்லர் கோழியை அறிமுகப் படுத்தியதே நான்தான். அப்ப ஒரு பிராய்லர் கோழியின் அதிகபட்ச எடை ஒண்ணேகால் கிலோதான் இருக்கும். சிறிது காலத்தில் பெரு முதலாளிகள் இந்தத் தொழிலில் இறங்கிவிட்டனர். அவர்கள்தான் குஞ்சு, தீவனம், ஊசி என்று நேரடியாக கொடுத்து கோழி வளர்க்கச் சொல்லி கொள்முதல் செய்து மார்க்கெட்டுக்கு அனுப்புகிறார் கள். முதலில் இந்திய முறைப்படிதான் பிராய்லர் ஜீன் தயாரிக்கப்பட்டது. பெருமுதலாளிகள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து தாய்க் கோழி வாங்கி வந்து உற்பத்தி செய்கிறார்கள். மருந்து களும் வெளிநாட்டு ஃபார்முலாதான். விவசாயத்திற்கு அமெரிக்க விதைகள் நுழைந்ததைப் போல கோழி மற்றும் பசுமாடுகளும் நுழைந்துவிட்டது. வெளிநாட்டு ஃபார்முலாப்படி 45 நாளில் 2 கிலோ எடைக்கு வந்துவிடுகிறது பிராய்லர் கோழி. நிச்சயம் இதனால் பாதிப்புதான். இதனை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டால் ஒரேநாளில் பிராய்லர் கோழி விற்பனை படுத்துவிடும். அதனால் தான் நாட்டுக்கோழி வளர்க்குமாறு நாங்கள் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். 10 வயதில் ஒரு சிறுமி பெரிய மனுஷியா வதற்கு பிராய் லர் இறைச்சியும் முக்கியமான காரணமாக இருக்கலாம்'' என்கிறார் பெயர்கூற விரும்பாத ஆய்வு மைய பேராசிரியர். தமிழக சுகாதாரத்துறை அவசர அக்கறை காட்ட வேண்டிய ஒரு முக்கிய பிரச்சனை இது. நன்றி -மணிகண்டன், பகத்சிங் Alternate Solution is Eat "நாட்டுக்கோழி "Country Cock & Hen"

Thursday 5 September 2013

எம் ஆசான்களுக்கு ஆயுள் தருவாய் ரஹ்மானே!

செப்டம்பர் 4 ஆசிரியர் தினம்





பாமரனாய் பள்ளிக்குள் நுழைந்த என்னை
பாடசாலைக்குள் பத்திரப் படுத்தி
பாருலகின் பார்வை படாமல் பாதுகாத்து
பாசக் கயிற்றால் பக்குவப் படுத்திய
ஆசான்களே! உங்களுக்கு கோடி நன்றிகள்!

விடுமுறை காலங்களிலும்
தொடுதிரையில் செய்தி அனுப்பி
விடாமல் நலம் விசாரிக்கும்
வெள்ளை உள்ளங்களே! ஆசான்களே!
உங்களுக்கு கோடி நன்றிகள்!

சமுதாய அம்புகள்
என்னை சல்லடையாக்கிய போது
அறிவுக் கேடயத்தால்
பரிவு காட்டிய ஆசான்களே!
உங்களுக்கு கோடி நன்றிகள்!

Wednesday 4 September 2013

இரத்த தானமும்، உடல் தானமும்

றிவியலின் அதீத முன்னேற்றத்தால், முற்காலத்தில் சாத்தியமில்லாமல் இருந்த கனவுகள் பல தற்காலத்தில் நனவுகளாகி உள்ளன. அவற்றில் மருத்துவத் துறையின் சாதனைகள் திகைக்கவைக்கின்றன. போன உயிரை மீட்க முடியவில்லையே தவிர, மற்றெல்லா ஊகங்களும் நிஜங்களாகிவருகின்றன.

அதே நேரத்தில், சாதனைகளே சிலவேளைகளில் சோதனைகளாகி மனித இனத்தைச் சீரழிக்கவும் செய்கின்றன. ‘புதிய கண்டுபிடிப்புகள்’ என்று சொல்லி, மனித நாகரிகம், பண்பாடு, சமய மரபுகள், சமூக்க் கோட்பாடுகள் ஆகிய அனைத்துத் தார்மிக நெறிகளும் கேலிக்கூத்தாக்கப்பட்டுவிடுகின்றன.

கடிவாளமில்லாத விலங்கு மட்டுமல்லகட்டுப்பாடில்லாத மனித ஆராய்ச்சியும் பேரழிவுதான்அணு ஆயுதங்கள்வேதிப்பொருட்கள்மின்னணுச் சாதனங்கள் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்இவற்றால் மனித குலம் அனுபவிக்கும் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம்மதுவைப்போல்.

மருத்துவ ஆராய்ச்சி –குறிப்பாக அலோபதி சிகிச்சை முறைஎன்பது உடனுக்குடன் பலன் தந்தாலும் அதன் பக்க விளைவுகள் நீண்ட காலத்திற்குப் பெரிய பாதிப்பையே தரவல்லவைஊசி மருந்துகள்மாத்திரைகள், ’டானிக்குகள் போன்ற சிகிச்சைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை என்பது பலருக்கும் தெரியாது.

அவ்வாறேகருக்கலைப்புக்ளோனிங்வாடகைத் தாய் போன்ற மருத்துவ ஆராய்ச்சிகளால் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் கேடுகள்தான் விளைகின்றன.அறுவை சிகிச்சை முறை கட்டிகளை அகற்றப் பயன்படுவதைப் போன்றே,உறுப்புகளை எடுத்து மற்றொருவருக்குப் பொருத்தவும் பயன்படுகிறது.

இரத்த தானம்


ஒரு நோயாளிக்கு இரத்தம் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுவதுண்டுஅவரது இரத்தப் பிரிவு என்ன என்பதை அறிந்துஅதே பிரிவு இரத்தமுள்ள மற்றவரிடம் தானமாகவோ விலை கொடுத்தோ இரத்தம் பெற்று,நோயாளிக்குச் செலுத்தும் முறை மருத்துவ உலகில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.

இதற்காக இரத்த வங்கியின் தேவைமுதலாம் உலகப் போருக்குமுன் உணரப்பட்டதுஇரத்தத்தைச் சேகரித்து, சேமித்து, பதப்படுத்தி வழங்குகிற நிறுவனமே இரத்த வங்கி (Blood Bank) ஆகும்இரத்த தானம் மூலம் சேகரிக்கப்படும் இரத்தங்களே பெரும்பாலும் இதில் சேமிக்கப்படுகின்றன.
ஒரு தாய் மற்றொருவரின் குழந்தைக்குப் பாலூட்டும் முறை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றதுஅதற்காக அத்தாய் கூலியும் பெறலாம் (அல்குர்ஆன், 65:6).

தாய்ப்பால் எப்போதும் சுரந்துகொண்டிருப்பதால்அடுத்தவர் குழந்தைக்குப் பாலூட்டுவதால் தாய்க்கோ சேய்க்கோ பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.தாய்ப்பாலுக்காக ஏங்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர உதவும் வாய்ப்பும் இதில் உள்ளது.

பாலைப் போன்றே மனிதனின் உடலில் இரத்தமும் ஊறிக்கொண்டே இருக்கிறது.எனவேநோயாளிக்கு இரத்தம் வழங்குவதால் கொடையாளிக்குப் பாதிப்பும் இல்லைநோயாளிக்குப் பயனும் கிடைக்கும்எனவேஇரத்த தானம் செய்வது மார்க்கச் சட்டப்படி செல்லும்.
ஆனால்அவசியத்தை முன்னிட்டே இரத்த தானம் செய்ய வேண்டும்அத்துடன இரத்த தானம் செய்வதால் கொடையாளிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதைச் சோதனை மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்இரத்தம் கொடுத்துவிட்டுக் கூலி வாங்கக் கூடாது. “இரத்தம் விற்ற காசுக்கு நபி (ஸல்அவர்கள் தடை விதித்தார்கள்”. (புகாரீ)

இரு வகை உறுப்பு தானம்


கண்சிறுநீரகம்இருதயம்ஈரல்கல்லீரல் போன்ற உறுப்புகளைத் தானமாகவோ விலைக்கோ வாங்கிதேவையான நோயாளிக்குப் பொருத்தும் நடைமுறையும் பரவலாகக் காணப்படுகிறது.

உயிருடன் இருக்கும் ஒருவரின் உறுப்பை வெட்டி எடுத்து அடுத்தவருக்குப் பொருத்துவது ஒரு வகைஇறந்துபோனவரின் உறுப்பை வெட்டி எடுத்து அடுத்தவருக்குப் பொருத்துவது இன்னொரு வகை.

முதல் வகை உறுப்பு தானம் மார்க்கத்தில் செல்லாது என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர்காரணம்வெட்டி எடுக்கப்படும் உறுப்பு உயிருள்ள அந்த மனிதருக்குத் தேவைஇரு கண்களில் எது வேண்டும் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று மற்றொன்றுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதற்காகவே இறைவன் இரண்டாகப் படைத்துள்ளான்இரண்டில் ஒன்றை அடுத்தவருக்குக் கொடுத்த பிறகுமீதியுள்ள ஒன்று இயங்க மறுத்துவிட்டால்,கொடுத்தவர் என்ன செய்வார்அவ்வாறேஎடுக்கப்பட்ட சிறுநீரகம் அடுத்தவருக்குப் பொருந்தாமல்போய்விட்டால் வீண்தானே!

தவிரவும்மனிதனின் உடல் உறுப்பு எதுவாயினும் அது மதிப்புக்குரியது;விலைமதிப்பற்றதுஅதனை வெட்டி எடுத்தோ கோரப்படுத்தியோ அலங்கோலமாக்குவதற்கு அந்த மனிதனுக்கே உரிமை இல்லைமனிதன் கண்ணியமானவன்அவனது கண்ணியத்தை எந்த வகையிலும் சீர்குலைப்பது தகாத செயலாகும்.

நிச்சயமாக நாம் ஆதமின் மக்களை (மனிதர்களை)மேன்மைப்படுத்தியுள்ளோம் (17:70) என்று இறைவன் தெரிவிக்கின்றான்.

அடுத்து இறந்தவரின் உடலுறுப்புகளைத் தானம் செய்வதைஇன்றைய இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் அனுமதிக்கின்றனர்.

இதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரம் பொதுவானதுஇஸ்லாம் வலியுறுத்துகின்ற அதிகமான நன்மைகள் இதன்மூலம் ஏற்படும் என்பதுதான் அது.பொது நன்மைகள்பிறர் துயர் துடைத்தல்கேடுகளில் எளிதானது எதுவோ அதைத் தேர்ந்தெடுத்தல்நன்மைகளில் மேலானது எதுவோ அதைக் கவனத்தில் கொள்ளல் ஆகிய கோட்பாடுகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மண்ணில் மடிந்து வீணாகிப்போகும் உடலுறுப்பைஉயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு வழங்கினால் என்னஇறந்தவரின் மரியாதையைவிட உயிர்வாழும் ஒருவரின் நன்மைக்கே முதலிடம் அளிக்க வேண்டும் –என்பது இந்த அறிஞர்களின் வாதமாகும். (ஃபத்தாவா அஷ்ஷபகத்தில் இஸ்லாமிய்யா)

ஃபிக்ஹு அகாடமி


அவ்வாறேஇந்தியாவிலுள்ள ஃபிக்ஹு அகாடமி வெளியிட்டுள்ள ஃபத்வா தொகுப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:

ஒருவரின் உறுப்பை வெட்டி எடுத்து அவருக்கே வேறு இடத்தில் பொருத்துவது செல்லும். (எடுத்துக்காட்டுவிரல்)

மனிதன் அல்லாத வேறு உயிரினங்களின் உறுப்புகள் பயன்படாதபோதுஒருவரின் உயிரைக் காக்க மற்றொரு மனிதரின் உறுப்பை எடுத்துப் பொருத்துவது செல்லும்.

நெருக்கடியான நேரத்தில் ஒருவர் தன்னுடைய இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றைத் தானம் செய்யலாம்ஆனால்இறந்தபின் உறுப்புகளைத் தானம் செய்வதாக வாக்களிக்கக் கூடாது.

மற்றவர்கள் கருத்து


வேறுபல அறிஞர்கள்இறந்தவரின் உறுப்புகளைத் தானம் செய்வது கூடாது என்கின்றனர்உயிருடன் இருக்கும்போதும் இறந்தபிறகும் உடலுறுப்பு தானம் என்பது செல்லாது என்பதே இவர்களின் கருத்தாகும்ஷைகு இப்னு பாஸ்ஷைகு இப்னு உஸைமீன்ஷைகு அபூஹைஸமா முதலானோர் இந்த முடிவையே தெரிவித்துள்ளனர்.

உடல் மனிதனிடம் அளிக்கப்பட்டுள்ள அமானிதமாகும்எனவேஅதை அகற்றுவதற்கோ அகற்றுமாறு ‘வஸிய்யத்’ செய்வதற்கோ அவனுக்கு உரிமை கிடையாது. ‘வஸிய்யத்’ செய்தாலும் அதை நிறைவேற்றுவது கூடாதுஇறந்தவரின வாரிசுகளுக்கும் அந்த உரிமை இல்லை.

இறந்தவரின் எலும்பை உடைப்பதானதுஉயிருள்ளவரின் எலும்பை உடைப்பதைப் போன்றதே” என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்இப்னுமாஜா,முஸ்னது அஹ்மத்). அதாவது இரண்டும் குற்றமே.

மேலும்அடக்கத் தலத்தின் (கப்று)மேல் அமர்வதற்கு நபி (ஸல்அவர்கள் தடை விதித்துள்ளார்கள். (அபூதாவூத்)

ஒரு மனிதர் காலணி அணிந்துகொண்டு கப்றுகள்மேல் நடந்து போய்க்கொண்டிருந்தார்அவரிடம் நபி (ஸல்அவர்கள், “உமக்குக் கேடுதான்உமது காலணியைக் கழற்றுவீராக!” என்று சொன்னார்கள்உடனே அவர் தம் காலணிகளைக் கழற்றி எறிந்துவிட்டார். (அபூதாவூத்)

நபி (ஸல்அவர்கள் மற்றொரு ஹதீஸில் குறிப்பிட்டார்கள்உங்களில் ஒருவர்,நெருப்புக் கங்கின்மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து சருமம்வரை சென்றடைவதானதுஅடக்கத் தலத்தின் மீது அவர் அமர்வதைவிட அவருக்குச் சிறந்ததாகும். (முஸ்லிம்)

இறந்துபோனவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கப்றுமீது அமர்வதே இத்துணை பெரும் குற்றம் என்றால்சடலத்தைச் சிதைப்பது எவ்வாறு தகும்?

உடல் தானம்


இறந்துபோன ஒருவரது முழு உடலையும் தானம் செய்வதுஅவரே ‘வஸிய்யத்செய்திருந்தாலும் கூடாதுமருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக இவ்வாறு உடலைத் தானம் செய்யும் பழக்கம் உள்ளது.

ஒரு முஸ்லிமின் உயிர் பிரிந்தவுடன்அவரது சடலத்தை நீராட்டிகஃபனிட்டு,இறுதித் தொழுகை (ஜனாஸாநடத்திமுறையாக மண்ணில் நல்லடக்கம் செய்ய வேண்டும்அதாவது குழி வெட்டிஅதனுள் மய்யித்தை வைத்துமண்ணைத் தள்ளி மூடிவிட வேண்டும்இதுவே மார்க்கம் சொல்லியிருக்கும் வழிமுறையாகும்.

இதை விடுத்துசடலத்தைப் பதனிட்டு நீண்ட காலம் வைத்துக்கொண்டிருப்பதோ,கிழித்து ஆய்வுக்குப் பயன்படுத்துவதோ இஸ்லாமிய நடைமுறை ஆகாது.

ஆகநவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன என்பதற்காகமார்க்கத்தின் நெறிமுறைகளையும் நபிவழியையும் மாற்றிக்கொள்ள முடியாதுஅந்தச் சிகிச்சை முறை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகவோநபிவழிக்கு முரண்பட்டதாகவோ இல்லாமல் இருக்கும் வரைதான் முஸ்லிம்கள் பயன்படுத்தலாம்.

ஆண் பெண்ணாக மாறுவதுபெண் ஆணாக மாறுவதுயாரோ ஒருவனின் விந்தணுவை எடுத்து வாடகைத் தாய்க்குச் செலுத்தி குழந்தை பெற்றுக்கொள்வது போன்ற நவீன முறைகளும் இருக்கத்தான் செய்கின்றனஅதற்காக மார்க்கத்தைப் புறக்கணித்துவிட்டுஅறிவியல் எதைச் சொன்னாலும் அதைச் செய்வதென்பதை ஏற்க முடியாது.

இறைக் கட்டளைக்கு முதலிடம் அளித்துஅதற்கு முரண்படாத அறிவியல் வளர்ச்சியையே நாம் ஏற்க வேண்டும்.
_______________

கான் பாகவி அவர்களின் கட்டுரை.