Wednesday 19 February 2014

வாழும் ஜனாஸாக்கள்!


நாம் யாரையாவது பிரியப் படுகிறோம்; நம்மை யாராவது பிரியப் படுகிறார்கள்! காதல் வயப்படுகிறோம். அந்த காதலுக்காக நம்மையே இழக்கிறோம். இது அர்த்தமில்லாதது. 

நாம் அல்லாஹ்வைப் பிரியப் படவேண்டும்; அல்லாஹ்வில் காதல் வயப் படவேண்டும்.  இறைக் காதலன் எனும் பெயரோடு இந்த உலகை நான் பிரிய வேண்டும். வெறும் ஜடமாய் வாழ்ந்து, இருந்தான், செத்தான் என்பதோடு என்னை அடக்கி விடாமல் ; செத்தும் வாழ்கிறான் எனும் நற்பெயர் பெற வேண்டும். 

அப்படி வாழ்ந்தவர்கள் வலிமார்களாகி விடுகிறார்கள். இவர்கள்  இறந்தாலும் வாழ்கிறார்கள்.

                         .ولا تقول لمن يقتل في سبيل الله اموات بل احياء

இந்த இறை நேசர்கள் இறைவனையே நினைத்து வாழ்வதால் இறைவன் இவர்களை எப்போதும் மறப்பதேயில்லை. இவர்களின் எதிரிகளை கூட தன்னுடைய எதிரி என்கிறான்.
                                                       
                                        من عادى لي وليا فقد آذنته بالحرب
துன்னூன் மிஸ்ரி (ரஹ்) ஒருநாள், மழை நேரத்தில் நடந்து சென்றார்கள், சேரும் சகதியுமாக இருந்தது. அவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கையில் பக்கத்தில்  புதிதாக திருமணம் முடித்த கணவனும், மனைவியும் சென்று கொண்டிருந்தனர். துன்னூன் அவர்களின் காலடித் தண்ணீர் அந்த பெண்மீது  பட்டுவிட்டது. உடனே கணவன், துன்னூன் அவர்களை அடித்து விட்டான். சிறிது நேரத்தில் அந்தப் பெண் மட்டும் வந்தாள். தங்களை அடித்த என் கணவன் வீட்டிற்குப் போகும் முன்பே இறந்து விட்டார் என்றார். துன்னூன் கூறினார்கள். அது ஒன்றுமில்லையம்மா! உன்மீது இருந்த காதலில் அவன் என்னை அடித்தான். என்மீது இருந்த காதலில் என்னவன் (அல்லாஹ்) உன்னவனை அடித்து விட்டான் என்றார்கள்.
சிற்றின்பம் தரும் மனைவிக்காக, மனிதர்கள் இவ்வளவு ஆத்திரப் படும்போது , பேரின்பம் தரும் இறைவன், தன் நேசர்களை விட்டு விடுவானா!

தனக்கென வாழ்ந்தவன் இருந்துமே இறக்கிறான்; பிறர்கென வாழ்ந்தவன் இறந்துமே இருக்கிறான் எனும் வரிகளுக்குச் சொந்தமானவர்கள் இறை நேசர்கள். 

அல்லாஹ்வே அவர்கள் வாழ்கிறார்கள் என்கிறான்.
அதெப்படி என்று கேட்டால் உனக்குப் புரியாது என்கிறான்.
  بل احياء ولكن لا تشعرون  
  தல்ஹத்திப்னு உபைதுல்லாஹ்(ரலி), மரணமாகி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது மகளின் கனவில் தோன்றி என் கப்ரை இடமாற்றம் செய்யுங்கள். என்றார்கள்.  இதை இப்னு அப்பாஸிடம் சொன்னபோது என்கனவிலும் உங்கள் தந்தை இதையே சொன்னார்கள் என்றார்கள். அவர்களின் கப்ரை தோண்டிய பொழுது ஆடையும், அத்தர் வாடையும் கூட மாறாமல் இருந்தது.  இது சாத்தியமா!?   بل احياء ولكن لا تشعرون 

ثابت بن قيس شماس  இவர்கள், தனக்கென கப்ரை ஏற்பாடு செய்துவிட்டு யமாமா யுத்தத்தில் கலந்து கொண்டார்கள். யுத்தத்தில் ஷஹீதும் ஆனார்கள். ஒருநாள் خالد بن وليد அவர்களின் கனவில் தோன்றி  தனக்கு கடன் இருப்பதாகவும், தனக்கு சொந்தமான உருக்குச் சட்டையொன்று, இன்ன நபர் வைத்திருப்பதாகவும் அதை வாங்கி அபூபக்கர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து, என் கடனை நிறைவேற்றுமாறும் கூறினார்கள். இதை எப்படி நம்புவது!?  بل احياء ولكن لا تشعرون  

இறைநேசர்களின் அடையாளங்கள்;  
التوبة
பாவம் செய்பவன் மனிதன், பாவ மன்னிப்புத் தேடுபவன் புனிதன்.
இறைநேசர்கள் எல்லாக் காலங்களிலும் இஸ்திஃபார் செய்யும் பழக்க முள்ளவர்களாக இருந்தார்கள்.
ஹசன்பசரி (ரஹ்)  அவர்களின் வீட்டிற்கு ஷேகுமார்கள் சிலர் வந்தபோது வீடெல்லாம் தண்ணீராக இருந்தது. வந்தவர்கள், இதென்ன தண்ணீர் என்றபோது,  இது ஹசன்பசரி தவ்பா செய்ததில் வந்த கண்ணீர் என்று கூறப் பட்டது.

ஏன்! அபூபக்கரின் கன்னத்தில் எப்போதும் அழுகையின் கோடுகள் இருக்கும் என்று நாம் படித்திருக்கிறோமே!

العزلة 
தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். துன்னூன் மிஸ்ரி, சொர்கத்தில் என் மனைவி யாரென்று அல்லாஹ்விடம் கேட்டார்கள்; அசரீரியில் மைமூனா என்று பதில் வந்தது; மைமூனாவைத் தேடி புறப்பட்டார்கள். ஒரு காட்டில் மைமூனா தன்னந்தனியாக தொழுது கொண்டிருந்தார்கள். பக்கத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. தொழுது முடித்ததும் துன்நூனைப் பார்த்து மைமூனா கேட்டார்கள், இங்கு ஏன் வந்தீர்கள், நாம் சந்திக்கும் இடம் சொர்க்கம்தானே என்றார்கள். துன்னூன் திகைத்துப் போனார்கள்.

الزهد
பற்றற்ற வாழ்க்கை வாழ்வார்கள். உலக ஆசையை துறப்பார்கள். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலாணி (ரஹ்) அவர்களிடம் பணமூட்டை ஒன்றை அரசு அதிகாரிகள் கொடுத்தபோது அந்த மூட்டைக்குள் கையைவிட்டு பிழிந்தார்கள். வெறும் ரத்தமாக வடிந்தது. மக்களின் ரத்தம் இது, எனக்கு வேண்டாம் என்று அந்த பணமூட்டையை திருப்பி அனுப்பினார்கள்.

அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் அவர்கள் சின்னதாக வீடொன்று கட்டினார்கள். அதைப் பார்த்த அம்மாரிப்னு யாசிர் அவர்கள் மவ்த்தைப் பற்றிய கவலை இல்லாமல் இப்படி ஏன் வீடு கட்டினீர்கள் என்று கடிந்து கொண்டார்கள்.

التقوى
இறையச்சமுள்ள வாழ்க்கை; அலி (ரலி) கூறுவார்கள் ; அல்லாஹ்வை பயந்து, குர்ஆனின்படி வாழ்ந்து, குறைவானதைக் கொண்டு பொறுத்து, மறுமைக்காக தயாரிப்பு செய்பவனே உண்மையான இறையச் சமுள்ளவன் என்றார்கள்.

قناعت
போதுமென்ற தன்மை;  ஒரு சஹாபி, நபியவர்களிடம் வந்து, நான் பணக்காரனாக என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோது நபியவர்கள்
كن قنعا تكن أغنى الناس என்றார்கள்.

(இறைநேசர்கள் என்றதும் இவர்கள் இணைவைக்கும் கருவிகள் என்று பேசும் வாய்கள் (sorry) நாய்கள் புழுத்துப் போகட்டும்)   

வலிமார்களின் வாழ்வைப் பற்றி வாழும் பாக்கியத்தை அல்லாஹ் தந்தருள் வானாக!                                                                      


                                                                           










No comments:

Post a Comment