Thursday 29 August 2013

இறையருள் இல்லையேல், நிறை வாழ்வு இல்லை!




மனித சமூகத்தின் உருவாக்கம் முதற்கொண்டு, மண்ணாகி மக்கிப்போன பிறகும் அல்லாஹ்வின் அருள் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.
அவனது ரஹ்மத் இப்பூவுலகில் ஒரு நிமிடம் இல்லையென்றாலும் இந்த உலகம் கரிந்து சாம்பலாகிவிடும்.
رحم  லும் رحمة  வேண்டும்:
பொதுவாக படைப்புகள் மூன்று கட்டங்களாக பிரிகின்றன.
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُخَلْقًا آخَرَ ۚ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ ﴿١٤
               1.  மண், விந்து, ரத்தம்.
                           2.       சதை, எலும்பு, மாமிசம்.
3.      ثُمَّ أَنْشَأْنَاهُخَلْقًا آخَرَ
இதில் முதல் இரண்டு கட்டத்தில் மனிதனுக்கும்,மிருகத்திற்கும் எவ்வித மாறுபாடும் இருப்பதில்லை. இறைவனின் கூற்றுப்படி வேறு ஒரு படைப்பாக, அதுவும் அழகிய மனிதப் படைப்பாக அல்லாஹ் படைத்திருக்கிறான் என்றால் அவனின் ரஹ்மத் இல்லாமல் இது சாத்தியமாகுமா? அல்லாஹ்வின் ரஹ்மத் மட்டும் தாயின் கருவில் இல்லையென்றால் உருவில் நாம் நாயோ, பன்றியோ! யாரறிவார்? எனவேதான் رحم  லும் رحمة  வேண்டும்.
தாயன்புக்கும் தயாளனின் அருள் வேண்டும்:
பெற்ற பிள்ளையை குப்பையில் வீசிவிட்டுப் போகிற தாய்மார்களில் என்தாய் எவ்வளவு உயர்ந்தவள்!.
கள்ளிப்பால் கொடுத்து கொல்லப்படுகிற பெண்பிள்ளைகளில் என்சகோதரியை பெற்று, ஆளாக்கி, நல்ல வரன் பார்த்து கட்டிக் கொடுத்த என்தாயன்பு இறைவனின் அருளில்லையா?!
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு; பிள்ளைகளை விட்டுவிட்டு இன்னொருவனோடு ஓடிபோய்விட்ட தன் மனைவியை தன்னோடு சேர்த்துவைக்குமாறு கணவன் வழக்குத் தொடுக்கிறான். விசாரணைத் தொடர்கிறது. கனம்நீதிபதி அவர்களே! எனக்காக இல்லையென்றாலும் என் மூன்றுவயது பிள்ளைக்காகவாவது என்மனைவியை என்னோடு அனுப்பி வையுங்கள். உனக்கெல்லாம் வெட்கமாய் இல்லை!  மனைவி கேட்டாள், இன்னொருவனோடு ஓடிப்போய் குடும்பம் நடத்தி வருகிறேன், என்னை மறுபடியும் அழைக்காதே. நீயும் வேண்டாம், உன் பிள்ளைகளும் வேண்டாம் என்றாள். தாயன்புக்கும் தயாளனின் அன்பு வேண்டும் என்பது எவ்வளவு உண்மை.
மரணத்திலும் அவனது அருளெனும் இரணம் வேண்டும்:
நபியின் அந்திமகாலம். ஆயிஷாவிடம் நபியவர்கள் கூறினார்கள். கைபரில் இன்ன யூதப் பெண்மணி கொடுத்த விஷத்தின் வீரியத்தை இப்போது நான் உணருகிறேன் என்றார்கள். ஆயிஷா அவர்கள் கூறுகிறார்கள். நபி ஏதோ முனகுவது போன்று தெரிந்தது. நபியின் வாயருகே நான் காது கொடுத்து கேட்டபோது اللهم اغفرلي وارحمني اللهم بالرفيق الاعلى என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

நபியின் இந்த வார்த்தைகள், மரணத்திலும் அல்லாஹ்வின் அருள்வேண்டும் என்பதை உணர்த்துகிறதல்லவா?! 
உமர் ரலியின் அந்திமகாலம். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சமயம். மகனின் மடியில் தலைவைத்திருந்தவர்கள், மகனே! என்தலையை உன் மடியிலிருந்து எடுத்து கீழே வை. என்றார்கள். ஏனெனில்لعلي الله يرحمني என்றார்கள். உமரின் இந்த வார்த்தைகள், மரணத்திலும் அல்லாஹ்வின் அருள்வேண்டும் என்பதை உணர்த்துகிறதல்லவா?!  

ولما طعن عمر
.. جاء عبدالله بن عباس , فقال .. : يا أمير المؤمنين , أسلمت حين كفر الناس , و جاهدت مع رسول الله صلى الله عليه و سلم حين خذله الناس , و قتلت شهيدا و لم يختلف عليك اثنان , و توفي رسول الله صلى الله عليه و سلم و هو عنك راض .
فقال له : أعد مقالتك فأعاد عليه , فقال : المغرور من غررتموه , و الله لو أن لي ما طلعت عليه الشمس أو غربت لافتديت به من هول المطلع . 
و قال عبدالله بن عمر : كان رأس عمر على فخذي في مرضه الذي مات فيه .
فقال : ضع رأسي على الأرض .
فقلت : ما عليك كان على الأرض أو كان على فخذي ؟!
فقال : لا أم لك , ضعه على الأرض .
فقال عبدالله : فوضعته على الأرض .
فقال : ويلي وويل أمي إن لم يرحمني ربي عز و جل.

சக்ராத் என்பது பேராபத்துக்குண்டான நேரம். நம்மில் யாராவது சக்ராத்தை உணர்ந்தவர்கள் உண்டா?
முதன்முதலாக சூர் ஊதப்படும் போது, எல்லா உயிரினங்களும் அழிந்துவிடும். அல்லாஹ் கேட்பான். இன்னும் யார்  மீதம் இருக்கிறார்கள். அதற்கு மலைக்குள் மவ்த் கூறுவார். ரப்பே! ஜிப்ரயீல்,மீக்காயீல்,இஸ்ராபீல் மற்றும் அர்ஷை சுமக்கும் மலக்குகள் இவர்கள்தான் மீதம் என்பார். பிறகு அவர்களின் ரூஹ்களும் வாங்கப்படும். பிறகு அல்லாஹ் கேட்பான். இன்னும் யாரிருக்கிறார்கள்? மலக்குள் மவ்த் கூறுவார். ரஹ்மானே! நீயும்,நானும் மட்டுமே என்பார். 
 ثم  يأمر الله تعالى إسرافيل عليه السلام أن ينفخ نفخة الصعق، فينفخ، فيموت من فيها كما قال الله تعالى: "ونفخ
 فيالصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله". يعني سبحانه وتعالى جبرائيل و ميكائيل و إسرافيل وملك الموت وحملة العرش. فيأمر الله تعالى ملك الموت بأن يقبض أرواحهم، فيقبض أرواحهم. ثم يقول الله تعالى يا ملك الموت من بقي من خلقي ؟  فيقول: يا رب، بقي العبد الضعيف، ملك الموت. فيقول الله تعالى: يا ملك الموت، ألم تسمع قولي: "كل نفس ذائقة الموت" ؟ اقبض روح نفسك. فيجيء ملك الموت إلى موضع بين الجنة والنار وينزع روحه. فيصيح صيحة، لو كان الخلق كلهم أحياء لماتوا من صيحته، فيقول: لو علمت ما للموت من الشدة و الألم ما قبضت أرواح المؤمنين إلا بالرفق، ثم يموت، فلا يبقى أحد من الخلق. فتبقى الأرض خرابا أربعين سنة،

மரணத்திற்குப் பிறகும் அல்லாஹ்வின் அருள் வேண்டும்:
நபியவர்கள் கூறினார்கள், எவரும் தங்களின் அமலைக் கொண்டு சுவர்க்கம் செல்ல முடியாது. அல்லாஹ்வின் அருள் இருந்தால்தான் சுவர்க்கம் செல்ல முடியும் என்றார்கள். நபியே! இந்த நியதி உங்களுக்கும் பொருந்துமா?! என்றபோது, ஆம்! அல்லாஹ் தன் அருளால் என்னைப் போர்த்த வில்லையென்றால் நானும் அப்படித்தான் என்றார்கள். 
அல்லாஹ் தன் அருளால் நம் அனைவரையும் போர்த்திக் கொள்வானாக!
       












Friday 23 August 2013

தொங்கும் தோட்டம்.......!



தாருல் உலூம் யூசுபிய்யாவில் கடந்த 18.05.2013 அன்று  {அப்னாயே யூசுபிய்யா}  முன்னால் மாணவர்களின் சந்தித்தல்-சிந்தித்தல் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெற்றது. அதில் அடியேன் {சு}வாசித்த வரிகள்:

திண்டுக்கல் மாநகராட்சிக்கு
ஒரே சாட்சி எங்கள் யூசுபிய்யா!

அறிவை அள்ளித் தரும்
வெள்ளை மாளிகை
எங்கள் யூசுபிய்யா!

பிஞ்சுக் குழந்தைகளை
நெஞ்சில் தாங்கும்- தொங்கும் தோட்டம்
எங்கள் யூசுபிய்யா!

இந்த ஈபிள் டவருக்கு
வருகை தந்த யூசுபிகளே வருக!

இறையருள் கொண்டு, இறைவழி கண்டு
இகமெங்கும் தீன் பணி செய்யும்
யூசுபிகளே வருக!

பொருள் தேடும் உலகில்
இறையருள் தேடும்
பொன்னான யூசுபிகளே வருக!

காலம் மாறினாலும்
கோலம் மாறாத
கொள்கை யூசுபிகளே வருக!

வேலைக்கு ஓய்வு கொடுத்து
தீர்ப்பாய்வுக்கு வருகை தந்த
யூசுபிகளே வருக!

வீதிஉலா வரும் வெள்ளி நிலா போல்
ஜோதிஉலா வரும்
ஆதி (பழைய) யூசுபிகளே வருக!

இடர் கண்டு கலங்காமல்
அறிவுச் சுடர் கொண்டு
அகிலம் காக்கும் யூசுபிகளே வருக!

நதியாய் ஓடி, ராஜாளியாய் பறந்து
தேசமெங்கும் வாசம் செய்யும்
பாசமிகு யூசுபிகளே வருக!

சங்கையாடும் யூசுபிய்யாவிற்கு
லங்கையிலிருந்து வருகை தந்த
சங்கையான யூசுபிகளே வருக!

அயலகம் போனபின்னும்
தாயகம் மறவா போராளி போல்
நாயக வார்த்தைகளால் நானிலம் காக்கும்
யூசுபிகளே வருக!

புகுந்த வீடு புகுந்த பின்னும்
பிறந்த வீட்டுச் சுகம் தேடும்
புதுப் பெண் போல்,
தாய்வீடு மறவாத தரமான
யூசுபிகளே வருக!

சிங்கார யூசுபிகளே!  செய்தியொன்று
சொல்வேன் கேளுங்கள்,

இங்கிருந்த கலங்கரை விளக்கொன்று
காணாமல் போய்விட்டது!

இங்கோடிய கடலொன்று
உடல் வற்றிப் போய்விட்டது!

திசைகாட்டி ஒன்று
விசையிழந்து வீழ்ந்து விட்டது!

நீண்டு வளர்ந்த நிழல் மரமொன்று
உரமின்றி உலுத்துப் போய்விட்டது!

உலகெங்கும் ஒலித்த குரலொன்று
ஓசையற்றுப் போய்விட்டது!

ஆம்! பிறந்த ஊரு (கீரனூரு)க்கே மறுபடியும்
உறங்கப் போய்விட்டது!

மாநபியின் மறைவிற்குப் பிறகு,
மாமனிதர் பிலாலின் பாங்கோசை கேட்டு,
மதினத்துச் சிறுமியொருத்தி கேட்டாளாம்:
மாயமாகிப் போன பிலால் வந்து விட்டார்:
மறைந்துபோன மாநபி எப்போது வருவாரென்று?!

அதே ஏக்கத்தில் أبناء எல்லாம் கூடியிருக்கிறோம்
எங்கள் أب வைக் காணவில்லை!

மணமேடையில் மணாளனைத் தொலைத்த
மணப் பெண் போல்

நூலாம்படையில் விழுந்த
நூற்பூச்சி போல்

வேடன் அம்பு சிக்கிய
வேட்டை பிராணி போல்

வேங்கை நகம் சிக்கிய
சின்னக் கன்று போல்

வேதனைத் தீயில் வெம்பித் துடிக்கிறோம்
எங்கள் أب    வைக் காணவில்லை.


மஞ்சனத்தின் கடைசி நிமிடத்தில்
எங்கள்  أب வின் சிந்தனைகள்
இதுவாய் இருக்குமோ!

காலிங் பெல்லை அழுத்த நினைத்தாரோ!

கணக்குப் பிள்ளையை அழைக்க நினைத்தாரோ!

கடல் ஏழையும் கடக்க நினைத்தாரோ!

சதிகள் அழிக்கும் வழிகளை
ஹழ்ரத் அலிக்கு சொல்ல நினைத்தாரோ!

சிம்மக்குரல் கொண்டு செம்மைக்குரல் கொண்ட
ஹழ்ரத் ஜாபிரை நினைத்தாரோ!

உடல்வலி மறந்து சையதுவலி ஹழ்ரத்தை
சைக்கினை செய்ய நினைத்தாரோ!

மத்ரஸாவின் நிஜாமை ஹழ்ரத் நிஜாமிற்கு
கற்றுத்தர நினைத்தாரோ!

இறையருள் பெற்ற சீமானே!
உங்களை நினையா நாளில்லை!
உங்கள் சிந்தனையில் இணையா “நா” இல்லை!
உங்கள் எழுத்தில் நனையா “பேனா” இல்லை!

பணம்- வெறும் பிணம்,
குணம்- மணம் என்றீர்கள்!

பாலமாய் இருக்கச் சொன்னீர்கள்!
யாருக்கும் பாரமாய் இருக்காதீர் என்றீர்கள்!

கொடுத்து வாழச் சொன்னீர்கள்; யாரையும்
கெடுத்து வாழாதீர் என்றீர்கள்!

பணக்காரர்களுக்கு குட்பை சொன்னபோதும்;
பணத்தை குப்பையில் போட்ட போதும்
நீங்கள் இருபத்தோராம் நூற்றாண்டின்
ஹாத்திம் தாயாய் மிளிருகிறீர்கள்.!

உங்கள் கப்ருக்கு ஒரு கடிதம் வருகிறேன்;
உங்களுக்குப் பிறகு – உங்களிடத்தில்
ஒரு தலைப்பாகை இளைப்பாற ஆரம்பித்திருக்கிறது.

தன் முகக் கண்ணாடியில் அகக் கண்ணாடி
பொருத்தியிருக்கிறது.

சாந்த குணம் கொண்டு சாதிக்கத் துவங்கி இருக்கிறது,
தங்களின் வழியே தஃவத்திற்கும்
பொறுப்பேற்றுக் கொண்டது.

பிறந்த வீடு துறந்து, புகுந்த வீட்டுக்கு
பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

ஊர் நெல்லை என்றாலும் – இவர்
இரண்டாம் கீரனூரி!

ரஹ்மானே! நாங்கள் யூசுபிய்யாவின்
பால்குடிச் சகோதர்கள்,
எங்களுக்குள் சண்டைகளுண்டு; சதிகளில்லை.
அடிதடிகள் உண்டு; அடாவடிகள் இல்லை.

அதனால் எங்களுக்கு பெருமை உண்டு;
யார்மீதும் பொறாமை இல்லை.

உலகம் அழிந்தாலும், உன் கல்வி வழிந்தோடும்
யூசுபிய்யாவையும், யூசுபிகளையும், அவர்தம்
உஸ்தாத்களையும்
ரப்பே! காக்க வேண்டியது உன் பொறுப்பே!










Thursday 22 August 2013

இறைச்சாபமே இயற்கையின் சீற்றம்!

                                

فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ ۖ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ  وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا ۚ وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَٰكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ
உலகில் எதாவது ஒரு வகையில், எங்காவது ஒரு இடத்தில், பூகம்பம், சுனாமி, சூறாவளி, மண்சரிவு என்று ஏதேனும் ஒரு விபத்து நடந்து கொண்டுதானிருக்கிறது. இவைகளுக்கு உலகம் இயற்கை சீற்றம் என்று பெயர் வைத்திருக்கிறது. உலக மக்கள் தொகையில் 800 கோடிபேரில் 680 கோடிபேர் இவைகளை இயற்கை சீற்றம் என்று சொன்னாலும் 180 கோடி முஸ்லிம்களின் சிந்தனயும் இச்சிந்தனையிலிருந்து மாறுபட்டிருக்க வேண்டும். இது இயற்கை சீற்றமல்ல, இறைச் சாபம்.

உலகில் முதன்முதலாக இறைச் சாபத்தைப் பெற்றவர்கள் நபி நூஹ் அவர்களின் சமுதாயத்தவர்கள்.
950 வருடங்கள் சமுதாயப் பணி செய்து இறைவனைஅஞ்சுங்கள் என்று சொன்னதற்காக சொல்லொணா துயரங்களை சந்தித்தவர்கள் நூஹ் நபியவர்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, 
  1. وَقَالَ نُوحٌ رَّبِّ لا تَذَرْ عَلَى الأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا 
  2. إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّوا عِبَادَكَ وَلا يَلِدُوا إِلاَّ فَاجِرًا كَفَّارًا            
 இறைவா! இவர்களை விட்டு விடாதே! ஏனெனில் இவர்கள் உன் அடியார்களையும் வழிகெடுத்து விடுவார்கள். இவர்களின் பிச்சளங்களையும் விட்டு விடாதே! அவர்களும் பாவிகளாகி விடுவார்கள். என்று துஆ செய்வார்கள்.  இந்த துஆ அந்தசமுதாயத்தில் மிகப்பெரும் விளைவை ஏற்படுத்தியது, நாற்பது வருடங்களாக இந்த சமுதாயத்தில் ஆண் குழந்தைகளே பிறக்கவில்லை, பல வருடங்களாக மழையே இல்லை. 
இறைக் கட்டளை இப்படி இறங்கியது.
 { وَقِيلَ يَا أَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَا سَمَاءُ أَقْلِعِي وَغِيضَ المَاءُ وَقُضِيَ الأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الجُودِيِّ وَقِيلَ بُعْداً لِّلْقَوْمِ الظَّالِمِينَ) }- هود : 44     வானமே கொட்டு! பூமியே கக்கு!
 இந்த வார்த்தைகுள்ளிருந்து வெள்ளம் பிரவாகமெடுத்தது. மக்கள் வெள்ளம் ஓடியது; மறையவனின் வெள்ளம் துரத்தியது, சீக்கிரமே காரியம் முடிந்து விட்டது. "இப்னு அப்பாஸ் அவர்களின் கருத்துப்படி வானிலிருந்து பொழிந்த ஒரு சொட்டு நீர், ஒருபெரிய தோல்துருத்தியை கவிழ்த்து விட்டால் எவ்வளவு தண்ணீர் கொட்டுமோ அந்தளவு ஒருசொட்டு நீர் என்றார்கள்". மேலும் பூமியின் மட்டத்திலிருந்து என்பது மைல் உயரம் இருந்தது. இந்த பிரளயத்தில் செத்துப் போனவர்களின் எண்ணிக்கையை குறித்து வைக்கக்கூட ஆட்களில்லை. உத்ராஞ்சலில் பெய்த கனமழை அந்த மாநிலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது, என்றாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை. நூஹ் நபிகாலத்து வெள்ளத்தில் படைப்பினங்களின் ஒவ்வொரு ஜோடியை மட்டும் வைத்து விட்டு எல்லோரையும் மொத்தமாக இறைவன் அளித்து விட்டான்.
பிரளயகச் சோகம் ஒன்று: இந்த வெள்ளத்திலிருந்து தன் பச்சிளங் குழந்தையை பாதுகாக்க எண்ணி தாயொருத்தி தன் குழந்தையோடு மலை உச்சிக்கு ஏறினாள். அவளது காலைத் தொட்ட தண்ணீர், கழுத்தையும் தொட்டது: கையிலிருந்த குழந்தையையும் தொட்டது, கண்மூடி விழிப்பதற்குள் தாயிற்கும், சேயிற்கும் காரியமே முடிந்து விட்டது.
ஆம்! பிச்சளங்களையும் விட்டு விடாதே! என்ற நூஹ் நபியின் துஆவிற்கு இறைவன் கொடுத்த மரியாதை அது.
இவர்களின் குற்றம் என்ன?            أَنِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ وَأَطِيعُونِ 
இறைவனை வணங்குங்கள், அஞ்சுங்கள்,,வழிபடுங்கள் என்ற நூஹ் நபியின் போதனைக்கு மாறு செய்து இணைவைத்தார்கள்.    
2. மவ்த்தாகும்போது ஒவ்வொரு தகப்பனும் தன் பிள்ளைகளை அழைத்து நான் இருந்தாலும், இறந்தாலும் நூஹை எப்பொழுதும் பின்பற்றி விடாதீர்கள் என்று வஸிய்யத் செய்வார்களாம்.

ஹூத்நபி – ஆத் கூட்டம்:
சராசரியாக நூற்றியிருபது அடி உயரம், பாலைவன மணலில் ஒருபக்கம் நடந்தால் இன்னொரு பக்கம் விரிசல் விழும், மலையை மிதித்தால் விவசாய பூமிபோல குழைந்துவிடும், மலைகளை குடைந்து வீடுகளைக் கட்டிக் கொண்டவர்கள். இவ்வளவு ஆற்றலும் மிக்கவர்கள் தான் ஆத் கூட்டத்தவர்கள். இவர்களும் இறைத்தூதுவருக்கு மாறு செய்தார்கள். மூன்றுவருடமாக மழை இல்லாமல் அவதிப் பட்டார்கள். இறுதியில் எழுபது நபர்களைதெரிவு செய்து கஃபத்துல்லாஹ்விற்கு மழைவேண்டி துஆ செய்ய அனுப்பினார்கள். துஆ செய்துவிட்டு திரும்பும்போது மழை மேகங்கள் ஒன்றுகூடியது. சிறிது நேரத்தில் ஜில்லென்று காற்று வீசியது. மக்கள் எல்லோரும் ஒரு பள்ளத்தாக்கில் ஒன்று கூடினார்கள். அதுமட்டுமல்ல! எங்கள் துஆவின் சக்தியால் மழையை பெறப்போகிறோம் என்று பெருமையும் அடித்தார்கள்.
ஜில்லென்று வந்த தென்றல் காற்று பயங்கர சூறாவளியாய் படமெடுத்தது. பெருமையடித்த ஆத் கூட்டத்தார், பேய்க் காற்றிலிருந்து பாதுகாக்க, தங்கள் உடம்பில் பாதியை மலைக்குள் புகுத்திக் கொண்டு மீதியை இறுகப் பிடித்துக் கொண்டார்கள். எந்த பலனும் இல்லை. 
 كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ (4) فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ (5) وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (6) سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ (7) فَهَلْ تَرَى لَهُمْ مِنْ بَاقِيَةٍ  ஏழு இரவு எட்டுப் பகல் அடித்த காற்றால் லட்சக்கணக்கான ஆத்கூட்டத்தார்கள் தலையில்லாமல் முண்டமாக செத்து மடிந்தார்கள். இவர்களை பற்றி அல்லாஹ் குர்ஆனில்: 

  1. فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ
எங்களைவிட சக்திவாய்ந்தவர்கள் யார்? என்று பெருமையடித்தவர்களை கண்ணுக்கு தெரியாத காற்றைக் கொண்டு அழித்தான்.
இவர்களின் குற்றம் என்ன?
கட்டிடங்கள் கட்டுவதிலும், பெருமையடிப்பதிலும் காலத்தைக் கழித்தவர்கள். பெருமை இறைவனின் ஆடையல்லவா? தன் ஆடையை இழுத்தவர்களை அல்லாஹ் சுருட்டிப் பிடித்தான். எங்களை வெல்ல யாரிருக்கிறார்?! என்றவர்கள், சொல்லாமல்கொள்ளாமல் செத்துப் போனார்கள்.
ஸாலிஹ் நபி:
மதீனாவிலிருந்து அறநூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மத்யன் எனும் நகரம். இங்குள்ளவர்களுக்கு நபியாக அனுப்பப்பட்டவர்கள் தான் ஸாலிஹ் அவர்கள். இந்த மக்களுக்கு இறைத்தூதுவத்தை எடுத்துச் சொன்னார்கள்.
அந்த மக்களோ நபிக்கு மாறு செய்தது ஒருபுறம் இருந்தாலும் உடனே இந்தப் பாறை பிளக்க வேண்டும், அதற்குள் இருந்து ஒரு ஒட்டகம் வரவேண்டும், ஒட்டகம் வந்த உடனே ஒரு குட்டியும் போடவேண்டும் என்றார்கள். ஸாலிஹ் நபி, தனது ரப்பிடம் கேட்டு தன் சமூகத்திற்கு அதைப் போன்றே ஒட்டகத்தை வரவளைத்தும் காட்டினார்கள்.
பிறகு ஸாலிஹ் நபியவர்கள், தன் சமூகத்தாரிடம் கூறினார்கள். மக்களே! இந்த ஒட்டகம் அருளாய் உங்களிடம் வந்திருக்கிறது.                                                وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ
 எனவே ஒட்டகத்திற்கு எந்த தீங்கும் செய்து விடாதீர்கள். நீங்கள் இதுவரை எந்த கிணற்றில் தண்ணீர் பருகி வந்தீர்களோ அந்த கிணற்றில், ஒருநாள் நீங்களும், மறுநாள் இந்த ஒட்டகமும் தண்ணீர் குடிக்க வகை செய்யுங்கள், எந்த நாளில் ஒட்டகம் தண்ணீர் அருந்துமோ அந்த நாளில் உங்களின் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் இந்த ஒட்டகம் வரும். தங்களுக்குத் தேவையான அளவு அது உங்களுக்கு பால் கொடுக்கும் என்றார்கள். காலங்கள் உருண்டோடின. தாயும் சேயுமாய் ஒட்டகமும் குட்டியும் ஊரை வலம் வந்து கொண்டிருந்தன. ஒருநாள் அனீசா என்ற அழகியொருத்தி குதார் என்ற ரவுடியை அழைத்து என்னை உனக்குத் தருகிறேன், நீ ஒட்டகத்தை கொலை செய் என்றாள். பெண்ணுக்காக பெற்ற குழந்தையை கொலைசெய்கிற கூட்டம், ஒட்டகத்திற்காக தயங்கவா போகிறார்கள். குதாரோடு சேர்த்து மொத்தம் ஒன்பது நபர்கள் ஒவ்வொருவீடாக சென்று ஆலோசனை செய்தார்கள். எல்லோரும் ஒட்டகத்தை கொள்வதில் ஒருமித்தக் கருத்தோடு இருந்தார்கள்.
ஒருநாள் புதன்கிழமை, ஒட்டகம் தன் குட்டியோடு வந்துகொண்டிருக்கும் பொழுது ஒருவன் ஒட்டகத்தின் கால் நரம்பைத் தரித்தான். இன்னொருவன் கழுத்தை அறுத்தான். கத்திக் கொண்டே ஒட்டகம், தன் குட்டியை எச்சரித்தது! குழந்தாய்! ஓடிவிடு. இங்கே சதிகாரர்கள் இருக்கிறார்கள். தாயின் எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு, ஓடிப்போய் தான் வந்த பாறைகுள்ளேயே குட்டி நுழைந்து கொண்டது.  தாய் ஒட்டகமோ கத்திக் கொண்டே கீழே சாய்ந்து உயிரை விட்டது.
வியாழன் காலை. தூங்கி எழுந்த மக்களின் முகமெல்லாம் மஞ்சள் நிறத்தில் இருந்து,
வெள்ளி காலை. தூங்கி எழுந்த மக்களின் முகமெல்லாம் சிவப்பு நிறத்தில் இருந்தது.
சனி காலை. தூங்கி எழுந்த மக்களின் முகமெல்லாம் கருப்பு நிறத்தில் இருந்தது. அன்று சூர்யோதத்தோடு பெரும் சப்தம் ஒன்றும் கேட்டது. அந்த சப்தத்தைக் கேட்ட எல்லோரும் காதில் ரத்தம் வடிய ஒட்டகம் போன்று கத்திக் கொண்டே செத்துப் போனார்கள்.
இவர்களின் குற்றம் என்ன?
இறைக் கட்டளையை மீறினார்கள். வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்ட போதும் எதேச்சையாக நடந்து கொண்டார்கள். ஒரேயடியாக அழிந்து போனார்கள்.
படிப்பினை: நூஹ் நபியின் சமுதாயம் போல் நம்மிலும் பலர் இணைவைப்பில் ஈடுபடுகிறோம், ஆனாலும் அவர்களைப் போன்று இன்னும் நாம் அளிக்கப்படவில்லை.
ஹூத் நபியின் சமுதாயம் போல் நம்மிலும் பலர் பெருமையடிக்கிறோம், அவர்களைப் போன்றே வீடு கட்டுவதில் நேரத்தை வீணடிக்கிறோம்,ஆனாலும் அவர்களைப் போன்று இன்னும் நாம் அளிக்கப்படவில்லை.
ஸாலிஹ் நபியின் சமுதாயம் போல் நம்மிலும் இறைக்கட்டளையை மீறுபவர்கள் உண்டு. ஆனாலும் அவர்களைப் போன்று இன்னும் நாம் அளிக்கப்படவில்லை.

اللَّهُمَّ لا تَقْتُلْنَا بِغَضَبِكَ ، وَلا تُهْلِكْنَا بِعَذَابِكَ ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ 







   



Thursday 15 August 2013

சுதந்திரம் யாருக்குச் சொந்தம்?


 இன்று முஸ்லிம்கள் பற்றிய ஒரு பிழையான கண்ணோட்டம் பிற சமூகத்தார் மத்தியில் பறவி வருவதையும், அதனால் பற்பல விபரீதங்கள் ஏற்பட்டு வருவதையும் நாம் அறிவோம். இவைகளுக்கான பிரதான காரணங்களில் ஒன்று “நாட்டுப் பற்று” என்ற விவகாரமுமாகும்.  முஸ்லிம்களுக்கு நாட்டுப்பற்று இல்லை. இவர்கள் தேசத் துரோகிகள், பயங்கரவாதிகள் என்றெல்லாம்  சொல்லக் காரணம் என்னவெனில் நாம் எந்த இடத்தில் நாட்டுப்பற்றை காட்ட வேண்டுமோ அந்த இடத்தில் நாம் நாட்டுப் பற்றைக் காட்ட தவறி விட்டோம். நமக்கும் இந்த நாட்டுக்கும் சம்பந்தமே இல்லாதது போன்றும் நடந்து கொள்கின்றோம். உண்மையில் இது ஒரு தவறான நிலைப்பாடாகும்.
இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்கள் என்ற வகையில் நாம் இந்த நிலையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றிய சரியான நிலைப்பாடு நமக்கு இருக்க வேண்டும். நாம் இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறிகளால் வழி நடாத்தப்படுகின்ற ஒரு தனித்துவமிக்க சமூகம். நமக்கு சகல விஷயங்களிலும் வழி காட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஒரு முஸ்லிம் தான் பிறந்த தேசத்தை எவ்வாறு நேசிப்பது என்பது பற்றியும் சொல்லித் தந்திருக்கிறது.
இஸ்லாம் தேசப் பற்றையும், தேசபிமான உணர்வுகளையும் ஆதரிக்கிறது. அதனை மனிதனின் ஒரு இயல்புப் பண்பாகப் பார்க்கிறது. ஒருவன் தான் பிறந்த தேசத்தையும் நாட்டையும் நேசிப்பதை அனுமதித்து இருக்கிறது. இது விஷயத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்வில் பல எடுத்துக் காட்டுக்கள் இருக்கின்றன.
நபி (ஸல்) அவர்களின் தேசப் பற்று:
நபி (ஸல்) அவர்கள் தாம் பிறந்த தேசத்தை விட்டும் ஹிஜ்ரத் சென்ற நிகழ்வு பற்றி இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் மக்காவை நோக்கி “ நீ எவ்வளவு மனமான தேசமாக இருக்கிறாய். நீ தான் எனக்கு மிக விருப்பமான (பூமியாக) இருக்கிறாய். நிச்சயமாக எனது சமூகத்தார் என்னை வெளியேற்றி இருக்கா விட்டால் நீ அல்லாத ஒரு பூமியில் நான் வசித்திருக்க மாட்டேன் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். (நூல் : திர்மிதி)
நபியவர்கள் யுத்தங்களுக்காகவோ அல்லது வேறு தேவைகளின் நிமித்தம் மதீனாவை விட்டும் வெளியே சென்றாலும் அவர்கள் உள்ளம் தமது தேசத்தின் சிந்தனையிலேயே லயித்திருக்கும். மீண்டும் திரும்பி வரும் போது மதீனாவின் எல்லையை நோக்கி தமது வாகனத்தை விரைவு படுத்துவார்கள் என அபூ அப்துல்லாஹ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : புகாரி )
ஹாரீஸ் பின் உமரின் மேலுமொரு அறிவிப்பின் படி தமது வாகனத்தை தமது தேசத்தின் பற்றினாலேயே (தாம் மிக அவசரமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக) விரைவு படுத்துவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விரிவுரை எழுதும் அல்லாமா இப்னு ஹஜ்ர் இமாம் அல்-அய்னீ மற்றும் முபாரக் பூரி போன்றவர்களின் கூற்றாவது: மேற்படி நபியவா;களின் நடைமுறையிலிருந்து மதீனாவின் சிறப்பு மற்றும் தேசப்பற்று மார்க்கத்தில் உள்ளவை என்றும் அதன் மீது அன்புள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதும் தெளிவாகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். (நூற்கள்: ஃபத்ஹுல் பாரி உம்ததுல் காரி , துஹ்ஃபத்துல் அஹ்வதீ)
நபியவர்கள் ஹிஜ்ரத் சென்று சில நாட்களுக்குப் பின் அஸீலுல் கிப்பாரி (றழி) அவர்கள்; மதீனா நோக்கிப் பயணமானார்கள். (அந்நேரம் ஹிஜாபுடைய வசனம் இறக்கப்பட்டு இருக்கவில்லை) நேராக ஆயிஷா (றழி) அவர்ளிடம் சென்றார்கள், அப்பொழுது நீர் மக்கா எவ்வாறு இருக்கும் நிலையில் வந்தீர் என ஆயிஷா (றழி) அவர்கள் கேட்ட போது அஸீலுல் கிப்பாரி (றழி) அவர்கள்; மக்கா பற்றி வர்ணிக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது ஆயிஷா (றழி) அவர்கள் நபியவர்கள் வரும் வரை சற்று காத்திருக்குமாறு சொல்ல, சில வினாடிகளிலேயே நபியவா்களும் அவ்விடத்திற்கு வந்து, ஆயிஷா (றழி) அவா்கள் கேட்ட அதே கேள்வியைக் கேட்டு தமது தேசம் பற்றியே விசாரித்தார்கள். அவா்கள் முன்பு சொன்னது போலவே மதீனா பற்றி வா்ணிக்க ஆரம்பித்த போது நபி (ஸல்) அவர்கள்: போதும் போதும் மீண்டும் மீண்டும் அந்த மக்கா பற்றிக் கூறி) எம்மை கவலையில் ஆக்கிவிட வேண்டாம் என்றார்கள். (நூல்: அல்-இஸாபா பீ தம்யீஸிஸ் ஸஹாபா)
நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டும் மதீனாவுக்கு வந்த போதிலும் சதாவும் தாம் பிறந்த தேசத்தைப் பற்றிய கவலையுடனே இருந்திருக்கிறார்கள். ஆனால் காலப் போக்கில் மதீனா பற்றிய அன்பு தமது உள்ளத்தில் வர வேண்டும் என்ற அவாவும் அவர்களுக்குத் தோன்றியது. ஏனெனில் தமது தாவாப் பிரச்சாரம் வெற்றி பெறத் தளமாக இருந்த பூமி அந்த மதீனா மாபூமி தான். எனவே தான் தமக்கு மதீனாவின் மீது பற்றை உண்டாக்கும் படி அல்லாஹ்விடத்திலே கீழ் வருமாறு பிராத்தனையும் புரிந்தார்கள்.
யா அல்லாஹ்! எனக்கு மக்காவின் மீது எவ்வாறு அன்பு இருக்கிறதோ அதே போன்ற பற்றை மதீனாவின் மீதும் உண்டாக்குவாயாக. அல்லது அதை விட அதிகமான அன்பை உண்டு பண்ணுவாயாக. (நூல்: புகாரி )
ஒரு தடைவ நபி (ஸல்) அவர்கள் : உஹது மலையைப் பார்த்து “ இந்த மலை எம்மை நேசிக்கிறது நாமும் அந்த மலையை நேசிக்கிறோம்” எனக் கூறினார்கள் (நூல்: புகாரி , முஸ்லிம்)
இதுலிருந்து நபியவர்கள் தமது தேசத்தை எந்த அளவு பிரியம் கொண்டிருந்தார்கள் எனத் தெளிவாகிறது.
ஸஹாபாக்கள் வாழ்வில்:
அது போலவே இதற்குச் சான்றாக ஸஹாபாக்கள் வாழ்விலும் பல அழகிய சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கைக் குறிப்புக்களில் காணக் கிடைக்கின்றன. மக்காவை விட்டும் ஹிஜ்ரத் சென்ற ஹழரத் பிலால் (றழி) அவர்களின் பிராத்;தனை இவ்வாறு அமைந்திருந்தது.
“யா அல்லாஹ்! எம்மை இந்த ஷைபா பின் றபீஆ, உத்பா பின் றபீஆ, உமையா பின் கலஃப் போன்றோர் (எமது தேசத்தை விட்டும்) வெளியேற்றியது போலவே இவர்களையும் (உனது றஹ்மத்தை விட்டும்) வெளியேற்றுவாயாக” (நூல்: ஃபத்ஹுல் பாரி )
மட்டுமின்றி பிலால் (றழி) அவர்கள் மதீனாவில் இருந்து கொண்டு மக்காவையே நினைத்து கண்ணீர் வடிக்கிறார் மட்டுமின்றி தனது மன உலைச்சலை கவியாகப் பாடுறார்.
“இத்கிர் மற்றும் ஜலீல் என்ற பசுமையான புற் தரைகள் என்னைச் சூழ இருக்க மக்காவின் அந்தப் பள்ளத்தாக்கில் ஓர் இரவேனும் தூங்கும் நாள் எனக்குக் கிட்டாதா? ” “(மக்காவின்) மஜன்னாவின் நீரைப் பருகும் வாய்ப்பு ஒரு நாளேனும் கிட்டாதா?” “(மக்காவின்) ஷாமா, துஃபீல் என்ற இரு மலைகளும் எனக்குத் தென்படக் கூடாதா? “ “ஸலஃபுகள்”; எனப்படும் முன்னோர்களான நல்லவர்கள் வாழ்வில்:
ஸலபுஸ் ஸாலிஹீன்கள் வாழ்விலும் தேசப் பற்றின் அடையாளங்கள் காணப்பட்டன.
அபூ நுஐம் (றஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: இப்றாஹீம் பின் அத்ஹம் (றஹ்) அவர்கள் கூறினார்கள்: தமது தாயகத்தை விட்டும் பிரியும் கஷ்டத்தை விட வேறெந்தக் காரியமும் கடுமையானதாக இல்லை. (நூல்: ஹில்யத்துல் அவ்லியா)
பேரறிஞர் இப்னு பதூதா அவர்கள் தமது சுற்றுலாவுக்காக தமது தாய் நாட்டை விட்டும் வெளியேறிய நிகழ்வைக் குறிப்பிடும் போது:…சகல நாடுகளையும் விட என்னிடத்தில் சிறப்புப் பொறுந்திய நான் நேசித்த எனது நாட்டின் பிரிவை நினைக்கும் கஷ்டத்தினால எனக்கு மரணம் வந்து விடுமோ என எண்ணினேன். (நூல்: றிஹ்லத்து இப்னி பதூதா)
(தேசியக்) கொடி பறக்க விடல்:
அத்துடன் தேசியக் கொடியை பறக்க விடுவது தேசப் பற்றோடு சம்பந்தப்பட்ட மிகப் பிரதான விடயங்களில் ஒன்றாகும், இது பற்றி திருக் குர்ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ நேரடியாக குறிப்பிடப்படா விட்டாலும் இது பற்றிய ஒரு தெளிவும் எமக்கு இருந்தாக வேண்டும். ஏனெனில் போரின சமூகம் இந்த சம்பிரதாயத்தை மிகப் பெரிய காரியமாகவே நோக்குகின்றனர். சுதந்திர தினம் மற்றுமுன்டான தேசிய விவகாரங்களுடன் தொடர்புள்ள நிகழ்வுகளின் போது தேசியக் கொடியை ஏற்றி வைக்கின்றனர். ஆனால் எமது முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் அசமந்தப் போக்கையே கடைபிடிக்கின்றனர். இதனைக் குறித்தே முஸ்லிம்களுக்கு நாட்டுப் பற்று கிடையாது என்றும் கூறுகின்றனர். உண்மையில் நாம் ஷாரிஆவை அடிப்படையாகக் கொண்டு தவிர்ந்து கொள்ளும் இப்பழக்கம் ஷாரீஆவில் தடுக்கப்பட்ட ஒரு காரியமல்ல.
ஏனெனில் இந்தக் கொடியை பறக்க விடும் வழமை நபிகளாரின் காலத்தில் மட்டுமல்ல இஸ்லாத்திற்கு முன்பும் காணப்பட்டது. அறபிகள் தமக்குள்ளே பல்வேறுப்பட்ட கொடிகளை பாவித்து வந்துள்ளனர். அவைகளை தமது கோட்டைகளின் மீதும், தமது கோத்திரத்தார்கள் வாழும் இடங்கள், யுத்த நேரங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் பறக்க விடுவர். மட்டுமின்றி பாதை தவறிய பிரயாணிகள் சரியான இடங்களைக் கண்டு பிடிக்கவும் இதனைப் உபயோகப் படுத்தி உள்ளனர். அவர்களின் ஒவ்வொரு கோத்தினருக்கும் வெவ்வேறு கொடிகள் இருந்தன. அதனைக் கொண்டே பிற சமுதாயத்தினா; தம்மை இனம் கண்டும் கொண்டனர்.
குஸை பின் கிலாப் மக்காவில் குரைஷிகளின் தலைவராக இருந்தார். தற்போதைய பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்பான பெரும் பதவியையும் அவரே ஏற்றிருந்தார். அவரே தமது குலத்தின் கொடி விவகாரத்திற்கும் பொறுப்பாய் இருந்தார். அவர் அக்கொடியை ஏற்றி விட்டால் தமது உதவியாளர்கள் உற்பட ஏணைய அதிகாரிகள் எல்லோரும் “தாருன் நத்வா” என்ற தமது பாராளுமன்றத்தில் கூடி விடுவர்.
நபி (ஸல்) அவர்களும் அன்னாரது தோழர்களும் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த சமயம் அன்ஸாரிகளில் ஒருவர் தமது தலைப்பாகையை ஒரு ஈட்டியின் நுனியில் கட்டி நபி (ஸல்) அவா;கள் முன்னிலையில் அங்குமிங்கும் அசைத்து வரவேற்றார். இது தான் இஸ்லாம் தோன்றியதன் பின்னால் முதல் முதலில் கொடி ஏற்றப்பட்ட நிகழ்வாகும்.
பத்ர் யுத்தத்தின் போது முஸ்லிம்களுடைய கொடி வெள்ளை நிறமாக இருந்தது. அதனை குதிரைகளின் இரு பாகங்களிலும் மேலும் அதன் வால்களிலும் தொங்க விடப்பட்டிருந்தன. பத்ருடைய அந்த வருடம் முழுவதும் இந்த வெள்ளைக் கொடி தான் பாவிக்கப்பட்டு வந்தது. (இஸ்லாம் பரவிய) பிற்காலத்தில் நபியுடைய காலம் மற்றும் நான்கு கலீபாக்களுடைய காலத்தில் சிவப்பு நிறத்திலான கொடியையே தமது கொடியாக ஆக்கிக் கொண்டனர். பின்னர் உமையாக்களுடைய காலத்தில் வெள்ளை நிறக் கொடியும், அப்பாஸிய்யாக்களுடைய காலப்பகுதியில் கருப்பு நிறத்திலான கொடியையும் பாவித்ததாக வரலாறு கூறுகிறது.
பிற்காலத்தில் அப்பாஸிய்யாக்களில் சில கலீபாக்கள் தமது கருப்புக் கொடியில் தங்க நிறத்திலான ஒரு பிறையையும் சோ;த்துக் கொண்டதாக சில வரலாற்றுக் குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன. எகிப்தில் வாழ்ந்த ஃபாத்திமிய்யாக்கள் வெள்ளை நிற கொடியையே தமது பண்டிகைகள் மற்றும் யுத்த சந்தர்ப்பங்களில் அதிகமாகப் பாவித்து வந்துள்ளனர். இவர்கள் இந்த கொடி விவகாரத்திற்காவே “தாருல் புனூத்” (கொடிகள் இல்லம்) என்ற பெயரில் ஒரு மண்டபத்தையே ஏற்பாடும் செய்து வைத்திருந்தனா;.
(நூல்: தாரீகுல் அலமுல் வத்தனீ அல்-ஜஸாயிரீ )
இநத வரலாற்றுப் பின்னணியிலேயே இன்று வரை இந்த கொடியேற்ற விவகாரம் இருந்து வருகிறது.
 முஸ்லிம்களின் நிலைப்பாடு:
மேற்படி ஆதாரங்களின் அடிப்படையில் இஸ்லாத்தின் பார்வையில் தேசியக் கொடியைப் பறக்க விடுவதில் எவ்வித தவறுமில்லை. குறிப்பாக நாம் இந்திய நாட்டவர்கள், நாம் இந்த நாட்டிலே பிறந்தவர்கள், எமது பூர் வீகம் இந்த மண்ணேயாகும் என்ற அடிப்படைகளில் எமக்கும் நாட்டுப்பற்று வேண்டும்.
ஆனால் இன்று எமது மூதாதையர்கள் இந்நாட்டுக்கும் இந்நாட்டு  மன்னர்களுக்கும் செய்த உபகாரங்களை எல்லாம் இந்நாட்டு போரின சமூகம் அறியாத அளவு நாம் தூரமாகி விட்டோம். எதுவரைக்கெனில் இந்த நாடு எமக்குச் சொந்தமானதல்ல, முஸ்லிம்களின் நாடு அறபுநாடுகள் தான் என்று கூறி எமது உணர்வுகளை குழி தோண்டிப் புதைக்குமளவு சில அரசியல் லாபம் தேடியவர்கள் சொன்னதும் இன்னும் எமதுள்ளங்களை விட்டும் அகலவில்லை.
அக்காலங்களில் இந்திய மன்னர்களின் மிக நெருங்கிய நன்பர்களாக மட்டுமின்றி, அரசர்களின் வைத்தியர்களாக, அந்தரங்கச் செயலாளர்களாக, தமது இரகசியங்களைக் பாதுகாப்பவர்களாகக் கூட இருந்திருக்கிறார்கள்.
இந்தியாவிற்கு எதிரான சக்திகள் போர் தொடுக்க வந்த போதும் முஸ்லிம்கள் இத்தேசத்திற்கு பெரிதும் உதவி பரிந்துள்ளனர்.
இப்படி போரின சமூகத்துடன் நெருக்கமாக இருந்த எமது உறவு இன்று ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதற்குக் காரணம் யாது என சிந்திக்க வேண்டும்.
எனவே நாம் இந்நாட்டுக்குச் சொந்தமானவர்கள், இந்நாடு நமக்குச் சொந்தமானது என்ற உணர்வு எமக்குள் பிறக்க வேண்டும். சுதந்திர தினம் போன்ற நாட்களில் நாமும் தைரியமாக ஆர்வத்தோடு தேசியக் கொடிகளைப் பறக்க விட வேண்டும். பிற சமுதாயத்தினர் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணங்கள் உருவாக வழி செய்ய வேண்டும். நல்லெண்ணத்துடன் செய்யப்படும் இக்காரியங்களை சில வேளை அல்லாஹுதஆலா பொறுந்திக் கொண்டால் இதுவே நமது ஈடேற்றத்திற்குப் போதுமானதாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மைப் பொறுந்திக் கொண்டு, ஈருலக பாக்கியங்களையும் தந்தருள்வானாகவும். ஆமீன்… 
சிங்கள நாட்டுக்குத் தோதுவாக எழுதப்பட்ட கட்டுரை. நம் தேசத்திற்கு ஏதுவாக இருக்கும் என்று எடுத்தாழப் பட்டிருக்கிறது. 

மேலும் தகவலுக்கு:
http://cumbumusmani.blogspot.in/2013_08_11_archive.html