Monday 3 June 2013

மிஃராஜ், ஐயமும்- தெளிவும்

                            

மாநபியின் மிஃராஜ் பல ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்த அற்புத பயணம்.
1,24,000 நபிமார்களில் நமது நபிக்கு மட்டும் கிடைத்த அருமையான பயணம்.
உலக விஞ்ஞானிகள் கூட முட்டாள்த்தனமாக யோசித்து மாட்டிக்கொண்ட ஆச்சர்யமான பயணம்.
மெஞ்ஞானிகள் கூட தன்மானம் இழந்த தரமான பயணம்.
அரபுலகமே அதிர்ந்து போன அதிசய பயணம்.
பல்வேறு நபிமார்களுக்கு பலவிதமான முஃஜிஸாக்களை தந்த இறைவன் யாருக்கும் மிஃராஜ் எனும் முஃஜிஸாவைத் தரவில்லை.


II. நபி (ஸல்) அவர்களின் முஃஜிஸாக்களில் சில:

விரல் நுனியிலிருந்து தண்ணீர் வந்தது முஃஜிஸா.

நபியின் பரக்கத்தான கரம்பட்டதும் ஆட்டின் மடுவில் தானே பால் வந்தது முஃஜிஸா.

வெட்டுக் காயம்கூட பட்டுப்போகும் பெருமானாரின் எச்சில் ஒரு முஃஜிஸா.

சந்திரனைப் பிளந்தது முஃஜிஸா.

மரம் வேரோடு நடந்தது முஃஜிஸா.

இவ்வளவு முஃஜிஸாக்கள் இருந்தாலும் இதில் மிஃராஜ் போன்ற ஒரு முஃஜிஸா நபியின் வாழ்வில் வேறொன்றில்லை.


III. நபியின் மிஃராஜ் ஐயமும், தெளிவும்:
நபி {ஸல்} விண்ணுலகப் பயணத்தை தன் பூதஉடலோடு மேற்கொண்டார்களா? வெறும் உயிர் மட்டும் போய் வந்ததா?                    
                                                 
          1.     سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِنَ المَسْجِدِ الحَرَام    
  இதிலுள்ள   عبد என்ற வார்த்தை  உடலும் உயிருமுள்ள மனிதனுக்கு தான் சொல்லப் படும். 
       2. واوحينا الى موسي ان اسر بعبادي انكم متبعون   என் அடியார்களை அழைத்துக் கொண்டு, என்று மூஸாவிற்கு அல்லாஹ் இட்ட கட்டளையும் உடலும் உயிருமுள்ள மனிதர்களுக்குத் தானே!
       3.     وانه لما قام عبد الله  இதன் உள்ளர்த்தமும் தெளிவானது தானே! 
       4.  اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله   நமது ஈமானும் கூட நபியின்  ரூஹின் மீது மட்டும் அல்லவே!
எனவே நபியின் விண்ணுலகப் பயணம் என்பது உடலோடு நடந்தது தான் என்பது தான் சத்தியம்.

IV.  அல்லாஹ்விற்கு இருப்பது போன்றே திருநாமங்கள்  நபியவர்களுக்கும் இருக்க 
عبد, அடிமை என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்த வேண்டும்?
       1. லட்சத்தி இருபத்தி நான்காயிரம் நபிமார்களில் எவருக்கும் கிடைக்காத பெரும்பாக்கியம் எம்பெருமானாருக்கு கிடைத்ததால் அவரும் இன்னொரு இறைவனோ என்ற சிந்தனைகூட எவரின் உள்ளத்திலும் உதித்து விடக்கூடாது என்பதற்காகவே அடிமை என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தினான்.
       2. அதுமட்டுமல்ல, மிஃராஜின் போது அல்லாஹ் நபியிடம் உமக்க பிடித்த பெயரும் குணமும் என்ன என்று கேட்டபோது عبديةஎன்றார்கள்       خطبات منور
  இறைவன் நபிக்குப் பிடித்த பெயரையே தேர்ந்தெடுத்துக் கொண்டான்.


V.  பிறகு ஜிப்ரயீல், உம்முஹானியின் வீட்டிற்கு வழக்கத்திற்கு மாறாக நபியை படுக்கையில் வைத்து சந்தித்து ஹத்தீமுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு சுந்தர நபியின் இதயம் ஜம்ஜம் நீரால் கழுவப்பட்டது. இதை வைத்து நபிக்கு கொடுக்கப்பட்ட கவ்ஸர் எனும் தடாகத்தைவிட ஜம்ஜம் தான் சிறந்தது என்பதை மார்க்க வல்லுனர்கள் பதிவு செய்கிறார்கள். 
மேலும் நபியின் இதயத்தை கழுவ வேண்டியதன் அவசியம் என்ன?  
நீண்ட பயணங்களை மேற்கொள்பவர்கள் கூட தாங்கள் சேரவேண்டிய இடத்தின் சீதோஷ்ண நிலைக்கு தக்கவாறு ஊசி, மருந்து மாத்திரைகளை எடுத்துச் செல்வது வழக்கம்தானே. அதே போன்றுதான், நபியவர்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு தகுந்தார்போன்று உள்ளம் சுத்தப்படுத்தப்பட்டு ஞானத்தையும், அறிவையும் கொண்டு மருத்துவம் பார்க்கப் பட்டது.

VI.  புராக் ஓர் அற்புதம், ஜிப்ரயீல் ஒரு Tourist guide:
பிறகு மிஃராஜ் செல்வதற்காக புராக்கில் ஏறி பயணமானார்கள் நபியவர்கள், பயணத்தின் ஊடே ஜிப்ரயீல், மரங்கள் நிறைந்த பகுதியைக் காண்பித்து இங்கு தான் நீங்கள் ஹிஜ்ரத் செய்வீர்கள் என்றார்கள்.
பிறகு தூர்சீனா மலைப்பகுதியைக்காண்பித்து இங்கு தான் மூஸா நபி  அல்லாஹ்வோடு 
உரையாடினார்கள், என்றார் ஜிப்ரயீல்.
பிறகு بيت اللحم எனும் இடத்தைக் காண்பித்து இங்கு தான் ஈஸா நபி பிறந்தார்கள் என்றார் ஜிப்ரயீல். நபியவர்கள் அங்கு இரண்டு ரக்அத் தொழுதார்கள்.
இங்கிருந்து தான் நபியவர்கள் பைத்துல் முகத்தஸ் புறப்பட்டார்கள்.  பைத்துல் முகத்தஸ் சென்றதும் இதுவரை நபிமார்கள் எந்த கல்லில் தங்களது வாகனங்களை   கட்டி
 வைத்தார்களோ அதே கல்லில் புராக்கும் கட்டி வைக்கப்பட்டது. நபியவர்கள் பைத்துல் முகத்தஸ் நுழைந்தார்கள், ஜிப்ரயீல் பாங்கு சொன்னார்கள். 

VII.  பைத்துல் முகத்தஸ்:
அங்கே எல்லா நபிமார்களும் இருக்க தொழவைக்கும் பொறுப்பை யார் நிறைவேற்றுவது!? ஆதம் இருக்கிறார், இரண்டாம் ஆதம் நூஹ் இருக்கிறார், இப்ராஹீம் கலீலுல்லாஹ், மூஸா கலீமுல்லாஹ், ஈஸா ரூஹீல்லாஹ் இருக்கிறார். ஜிப்ரயீல் அல்லாஹ்விடம் கேட்டார். அல்லாஹ் கூறினான். யாரின் ஆன்மாவிற்கு கனம் அதிகமோ அவரை தொழ வைக்கச் சொல்லும் என்றான். நபி {ஸல்} தொழவைத்தார்கள். 

VIII.  மிஃராஜிற்காக பைத்துல் முகத்தஸ் வரவேண்டியதன் அவசியம்?
         1. مولنا احمد الله رح அவர்கள் கூறுகிறார்கள்: பூமியின் உயரமான பகுதி இது. இன்னும் சொல்வதானால் வானுக்கு இறைவன் ஏற்படுத்திய விமான நிலையம் இந்த பைத்துல் முகத்தஸ்.
          2. باركنا حوله அபிவிருத்திகள் நிறைந்த பசுமையான இடம்.
          3. பல நபிமார்கள் வாழ்ந்து மறைந்து அடக்கமான இடம்.
          4. அல்லாஹ் கூறினான்: அர்ஷிலிருந்து நைல், ஃபுராத் நதிகள் வரையுள்ள இடங்கள், எனக்கு பிடித்த இடங்கள். இந்த இடத்திற்கு எனக்குப் பிடித்தமானவர்களை நான் அனுப்புவேன் என்றான். அதன் அடிப்படையிலும் நபியவர்கள் பைத்துல் முகத்தஸ் கொண்டு வரப்பட்டிருக்கலாம்.                               خطبات منور                     

ஆக நபியின் மிஃராஜ் பயணம் சம்பந்தமாக எழுப்பப்படும் சந்தேகங்கள் இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையில்லாதது. இறைவன் விளங்கும் ஆற்றலைத் தருவானாக!



   
    




No comments:

Post a Comment