Thursday 20 June 2013

வாங்கும் கடனும், திருப்பிக் கொடுக்கும் கடமையும்...!


                                                     கான மயிலாட கடன் வந்து மேலாட :
                                                     வாங்கியவன் கொண்டாட நானிங்கு திண்டாட :
இந்த வரிகள் நமது நாட்டின் தேசிய கீதம் போல் பல கடைகளில் எழுதப்பட்டிருக்கும். செருப்பு தைப்பவன் முதற்கொண்டு அதை உற்பத்தி செய்பவன் வரை கடனில்லாதவர்கள் இல்லை. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தங்களது வாழ்வை முடித்துக் கொண்டவர்கள் உண்டு.  கடனை நிறையக் கொடுத்து திரும்ப பெறமுடியாமல் போண்டியாகி தற்கொலை செய்தவர்களும் உண்டு. காரணம் இஸ்லாம் போதிக்கும் அணுகுமுறை இரு தரப்பிலும் இல்லையென்பதுதான் உண்மை.

நப (ஸல்) அவர்கள் கூறினார்கள்,  மரணத்திலேயே கெட்ட மரணம், கடனோடு மரணிப்பது தான்  என்றார்கள்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள், எவ்வளவு கடுமையான எச்சரிக்கை, எவ்வளவு கடுமையான எச்சரிக்கை, என்று மூன்று முறை கூறிவிட்டு நபி கூறினார்கள். ஒரு போராளி மார்க்கப் போரில் கலந்து ஷஹீதாகி, மறுபடியும் உயிர்பெற்று, மறுபடியும் ஷஹீதாகி, மறுபடியும் உயிர் பெற்று, மறுபடியும் ஷஹீதாகிப் போனாலும் அவர்மீது கடன் இருந்தால் அவர் சுவனம் செல்ல முடியாது, என்றார்கள்.

அல்லாஹ்விற்கு செலுத்த வேண்டிய கடமைகள் அனந்தம் இருக்கிறது, அவைகளில் அடியார்கள் குறைவு ஏற்படுத்தினால் அல்லாஹ் அதை பெரிது படுத்துவதில்லை.  நபியவர்களிடம் ஆயிஷா (ரலி) ஒரு தாயின் பரிவு பற்றி பேசினார்கள். அவளுக்கு கொடுத்த பேரித்தம் பழத்தை தன் பிள்ளைகளக்கு சமமாக பிரித்துக் கொடுத்து விட்டு தான் சாப்பிடாமல் இருந்து விட்டாள். என்றார்கள். ஆம்! இறைவனும்  அடியார்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகளில் கூடுதல் குறைவு ஏற்படுத்தினால் அல்லாஹ் அரை நொடி அளவு கூட பொறுப்படுத்தாமல் இருப்பதில்லை. தன் விஷயத்தில் பொறுமை காக்கும் தாய்போல, இறைவனும் அவன் விஷயத்தில் பொறுத்துக் கொள்கிறான். அடியர்களுக்கு மத்தியில் சமநீதியை எதிர்பார்க்கிறான்.

 குறிப்பாக, கடன் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தும் இஸ்லாம், திருப்பிச் செலுத்தும் விஷயத்திலும் அந்த கண்டிப்பை மறக்கவில்லை. தகப்பன் செத்தவுடன் சொத்தை   சூறையாடத் துடிக்கும் பிள்ளைகளுக்கும், செத்துவிட்டால் கடன் தொல்லையில்லை என்று தற்கொலை செய்து கொள்ளும் தகப்பனுக்கும் கீழ்வரும் சம்பவம் எவ்வளவு பெரிய எச்சரிக்கையை தருகிறது பாருங்கள்.

நபியவர்கள் ஒரு ஜனாஸாவில் கலந்து தொழவைக்க முற்படும்பொழுது வழக்கமாக கேட்கும் கேள்வியொன்றை கேட்டார்கள். இந்த மய்யித்தின் மீது கடன் ஏதும் இருக்கிறதா? என்றார்கள். ஆம் இரண்டு தீனார் கடன் இருக்கிறது என்று பதில் சொல்லப்பட்டது. இவரது கடனுக்கு யாரும் பொறுப்பேற்பவர் உண்டா என்றபோது கதாதா (ரலி) என்ற நபித்தோழர் அவரது கடனுக்கு பொறுப்பேற்றார். பிறகு நபியவர்கள் தொழுகை நடத்தினார்கள். நபியவர்கள் மறுநாளே கதாதாவிடம் சென்று அந்த இரண்டு தீனாரை கொடுத்துவிட்டீரா? என்றார்கள். நபியே! நேற்றுதானே   பொறுப்பெடுத்தேன்  அடைத்து விடுகிறேன் என்றார். எப்பொழுது கடனை அடைத்து விட்டேன் என்று சொன்னாரோ அப்பொழுது நபியவர்கள் கூறினார்கள். இப்பொழுதுதான் (அந்த மய்யித்தின்) உடல் குளிர்ந்தது என்றார்கள்.

عَنْ جَابِرٍ ، قَالَ : " مَاتَ رَجُلٌ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَعَلَيْهِ دَيْنٌ ؟ " ، قُلْنَا : نَعَمْ ، دِينَارَانِ ، فَقَالَ عَلَيْهِ السَّلامُ : " صَلُّوا عَلَى صَاحِبِكُمْ " ، فَتَحَمَّلَهُمَا أَبُو قَتَادَةَ ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " حَقُّ الْغَرِيمِ عَلَيْكَ ، وَبَرِيءَ مِنْهُمَا الْمَيِّتُ ؟ " ، قَالَ : نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَصَلَّى عَلَيْهِ ، فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ ، قَالَ عَلَيْهِ السَّلامُ لِأَبِي قَتَادَةَ : " مَا فَعَلَ الدِّينَارَانِ ؟ " ، قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّمَا دَفَنَّاهُ أَمْسِ ، ثُمَّ أَتَاهُ بَعْدُ ، فَقَالَ لَهُ : " مَا فَعَلَ الدِّينَارَانِ ؟ " ، قَالَ : قَضَيْتُهُمَا يَا رَسُولَ اللَّهِ ، قَالَ : " الْآنَ بَرَّدْتَ عَلَيْهِ جِلْدَهُ ".

وَبِخَبَرَيْنِ آخَرَيْنِ لَا يَصِحَّانِ : أَحَدُهُمَا : " نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ ".
அபூபக்கர் சித்திக் (ரலி) மிகச் சாதாரணமாக வாழ்ந்தவர்கள். தங்களின் பிரதான மந்திரியாக நபியால் நம்பிக்கைக்குரியவர் என்று அடையாளங் காட்டப்பட்ட மஃகப் துவைஸி பைத்துல்மால் பொறுப்புதாரியாகவும் இருந்தார்கள். அபூபக்கர் (ரலி) துவைஸியிடம், நான் நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறேன். இந்த நோயிலிருந்து நான் மீளுவேன் எனும் நம்பிக்கையில்லை. நான் ஏதேனும் உங்களிடம் கடன் பெற்றிருந்தால் சொல்லுங்கள். அதை அடைத்து விடுகிறேன். அல்லாஹ்வை கடனோடு சந்திக்க விரும்பவில்லை. என்று பலமுறை வற்புறுத்திய பிறகு வெறும் 25 திர்ஹம்தான் தரவேண்டும் என்றார்கள். உடனே அபூபக்கர் (ரலி) தன் மகள் ஆயிஷாவிடம் அந்தக் கடனை   அடைக்குமாறு பணித்தார்கள்.  حسنات البرار سئات المقربين எனும் வார்த்தைக்கேற்ப வல்லவனுக்கு (அல்லாஹ்) மட்டும் நல்லவர்களாய் வாழ்ந்த பெருமக்கள் வாழும்போதும், வாழ்ந்த பிறகும் படைத்தவனை பரிசுத்தமாக சந்திக்க நினைத்தார்கள்.

கடன் வாங்கும் தகுதியை மார்க்கம் மூன்று சந்தர்ப்பங்களில் அனுமதிக்கிறது.
1. கடன் வாங்குபவனுக்கு சொத்துகள் இருந்தால். சொத்தைவிற்றாவது கடனை அகை்க வேண்டும். பெரும்பாலும் இன்றைய சொத்துக்கள் அவர்கள் இருக்கும்போதே   ஜப்தியாகி விடுகிறது. இறந்த பிறகு பாவப்பட்ட வாரிசுகளுக்கு பரிசாகிவிடுகிறது. கடன் பட்டவர்களின் சொத்துக்களும் உடன்கட்டை ஏறிவிடுகின்றன.
2. வாரிசுகள் இருந்தால்,  தகப்பனின் கடனை அடைக்காமல் சொத்தைமட்டும் சொந்தம் கொண்டாட நினைப்பது வாரிசுகளுக்கு உரிமையில்லை.
3. لو اقسم علي الله لابره  எனும் வார்த்தைக்குச் சொந்தக்காரர்கள். ஆம் சஹாபிகள் தான்.
அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, இது நடக்கும் என்றால் அதை அல்லாஹ் நடத்தி வைப்பான் அப்படிப்பட்ட இறையன்பு கொண்டவர்கள்.

زبير بن عوام  என்ற நபித் தோழர். அமானிதங்களைக் கூட கடனாக வாங்கி தர்மம் செய்பவர்கள்.
இவர் தனது கடைசி நேரத்தில் தன்மகன் عبد الله بن زبير ஐ அழைத்து சொன்னார்கள். என் மரணத்திற்குப் பிறகு மூன்றுவருடம் தொடர்ந்து மினாவிற்குச் சென்று என் தந்தைக்கு யாராவது கடன் கொடுத்திருந்தால் அவர் என்னிடம் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்ய வேண்டும். யாராவது வந்து கேட்டால் காரணம் கேட்காமல் அவரது கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். என்றார்கள். கடனை அடைக்கும் சக்தி இல்லையென்றால்  அல்லாஹ்விடம் اللهمرب الزبير واقضي دينه என்று துஆச் செய், என்றார்கள். மகனும் அறிவிப்புச் செய்தார். நீண்ட நாட்களுக்கப் பிறகு ஒருவர் வந்து  زبير بن عوام எனக்கு பத்து லட்சம் தரவேண்டும் என்றார். மகனுக்கு தலைகால் புரியவில்லை. அல்லாஹ்விடம் துஆச் செய்தார். பிறகு முஆவியா (ரலி) ஒருநாள்    عبد الله بن زبير  அவர்களிடம் வந்து உன்தகப்பனாரின் இடம் ஒன்று உள்ளது. அதை கிரயத்திற்கு எனக்கு  கொடு   என்றார்கள். பிறகு அந்த இடம் ஏலத்திற்கு விடப்பட்டது. உஸ்மான் (ரலி) 25லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்கள். இதனால் கடனும் அடைந்து கடன்பட்டவரும் பயன் அடைந்தார்.
http://www.saaid.net/rasael/322.htm ஆதாரத்திற்கு இந்த அட்ரஸில் பார்க்கவும்.
கடனில்லாமல் மரணிக்கும் பாக்கியத்தை நம்மனைவருக்கும் அல்லாஹ் தருவானாக!



No comments:

Post a Comment