Wednesday 20 November 2013

மா (நா ) றி வரும் நட்புகள்!


{الْأَخِلَّاء يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ} : قوله تعالى
    
  மனித வாழ்வை மாற்றியமைக்கும் ஆற்றல் நட்புக்கு உண்டு.
எதிர் காலத்தை சிறப்பாகவும், சீரழிக்கவும் செய்யும் சக்தி நட்புக்கு உண்டு. நல்ல நட்பு, நல்ல எதிர்காலத்தையும், தீய நட்பு, தீய எதிர்காலத்தையும் 
ஏற்படுத்தும்.


உதாரணமாக: வானிலிருந்து பொழியும் மழைத்துளி கடலில் விழும்போது உப்பாக மாறுகிறது, கடலில் விழுந்த நீர் சிப்பிக்குள் நுழைந்தால் முத்தாகி விடுகிறது, அதே நீர், சாக்கடையில் விழுந்தால் நஜீஸாகி விடுகிறது. சகவாசம் எப்படியோ அப்படியே வாழ்க்கையும் மாறிவிடுகிறது.

என் குடும்பத்தில் யாருக்குமே இல்லாத பழக்கம் உனக்கு மட்டும் எப்படி வந்தது, என்று கண்டிக்கும் போதே  நமது பிள்ளைகளின் நண்பர்கள் வட்டம் நாறி வருகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

பிள்ளைகளின் ஆடைகளை தெரிவு செய்வதிலும், வாகனங்களைத் தெரிவு செய்வதிலும், உண்ணும் உணவு, படிக்கும் பள்ளி, இவைகளை தெரிவு செய்வது போன்றே நண்பர்களையும் நாமே தெரிவு செய்ய வேண்டும்.

ஈஸா நபி கூறினார்கள்: யாரைப் பார்த்தால் அல்லாஹ்வின் நினைவு வருமோ, யாருடையப் பேச்சு அல்லாஹ்வின் திக்ரை நினைவூட்டுமோ, யாரின் மெளனம், சிந்தனையாக இருக்குமோ அவனோடு நட்பு கொள் என்றார்கள்.

லுக்மானுல் ஹகீம் தன் மகனுக்கு ஏற்படுத்தும் நண்பர்களைப் பாருங்கள்:
·         يا بني ! جالس العلماء وزاحمهم بركبتك، فإن الله ليحيي القلوب الميتة بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل السماء.
மகனே! காய்ந்த பூமியை மழைநீர் செழிப்பாக்குவது போல, மாண்ட உள்ளத்தை ஆலிம்களின் அறிவுரைகள் செழிப்பாக்கும் என்றார்கள்.
அதுமட்டுமல்ல!

قال علقمة العطاردى وهو يوصي ابنه حين حضرته الوفاة قال: يا بني إذا عرضت لك إلى صحبة الرجال حاجة فاصحب من إذا خدمته صانك وإن صحبته زانك وإن قعدت بك مؤنة مانك اصحب من إذا مددت يدك بخير مدها، وإن رأى منك حسنة عدها، وإن رأى سيئة سدها اصحب من إذا سألته أعطاك وإن سكت ابتداك وإن نزلت بك نازلة واساك، اصحب من إذا قلت صدق قولك وإن حاولتما أمرا أمرك وإن تنازعتما آثرك

தன் மரண நேரத்தில் அல்கமா தன் மகனிடம் கூறியவை:
மகனே! உன் நண்பனுக்கு இருக்க வேண்டிய பண்புகள்,
 1.   நீ அவனக்கு பணிவிடை செய்தால், அவன் உன்னையும் பாதுகாப்பான்
 2.   அவனது நட்பால் உனக்கு கண்ணியம் கிடைக்க வேண்டும்.
 3.   உனக்கு உதவி செய்பவனாக இருப்பான்
 4.   நீ கொடுத்தால் அவனும் கொடுப்பான்
 5.   நீ செய்யும் நல்ல காரியத்திற்கு துணை நிற்பான்
 6.   தீயவைகளை, குறைகளை மறைப்பான்
 7.   கேட்டால் கொடுப்பான், கேட்காமலும் கொடுப்பான்
 8.   உன்னை உண்மை படுத்துவான். இந்த பண்புள்ளவனோடு பயணி, இல்லையென்றால் விலகிவிடு என்றார்கள்.                              

  நண்பர்கள் மூன்று வகை:
  ابن قيم رحمه الله  الأصدقاء ثلاثة: أحدهم كالغذاء لا بد منه،والثاني كالدواء يحتاج إليه في وقت دون وقت، والثالث كالداء لا يحتاج إليه قط

 1.   உணவைப் போன்றவர்கள், இவர்கள் எப்போதும் தேவை.
 2.   மருந்தைப் போன்றவர்கள், இவர்கள் எப்போதாவது தேவை.
 3.   நோயைப் போன்றவர்கள், இவர்கள் எப்போதும் தேவைப்படாதவர்கள்.

ஒருவனுக்கு கூட்டாளிகள் எப்படிப்பட்டவர்களாக இணைகிறார்கள்.
பாவக் கூட்டாளிகளாக, பணக் கூட்டாளிகளாக, மது, மாதுக் கூட்டாளிகளாக. ஏன்! நாளிதழ்களில் வரும் செய்திகளில், கூட்டுக் குற்றங்களனைத்தும் கூட்டாளிகள் செய்கிற குற்றங்கள் தானே!


நட்பின் ரகசியம்:
وفي حديث الطبراني عن ابن عباس: قال: قال ((أوثق عرى الإيمان الموالاة في الله والمعاداة .... قال مالك بن دينار: (لا يتفق اثنان في عشرة إلا في أحدهما وصف من الآخر يناسبه

ஒரே குணமுள்ளவர்கள் தான் ஒன்று சேருவார்கள்,என்ற வார்த்தை எவ்வளவு பெரிய உண்மையை வலியுறுத்துகிறது.

குளக்கரையொன்றில் புறாவும், காகமும் நண்பர்களாய் இருக்கக் கண்டேன். சம்பந்தமில்லாமல் இந்த இரண்டும் எப்படி நண்பர்களாயின, என்று வியந்தேன். பிறகு தான் தெரிய வந்தது, புறாவும் நொண்டி, காகமும் நொண்டியென்று. இந்த ஊனம்தான் இருவரையும் நண்பர்களாக்கியிறக்கிறது. என்பதை உணர்ந்தேன் என்கிறார்கள், இமாம் கஜ்ஜாலி (ரஹ்).
          لا يتفق اثنان في عشرة إلا في أحدهما وصف من الآخر يناسبه

ஒருதடவை ஆயிஷா நாயகியைப் பார்க்க மக்காவிலிருந்து ஒரு பெண் வந்தாள். மிகவும் நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் பேசும் பழக்கமுடையவள். அவளிடம் ஆயிஷா, மதினா வந்த நோக்கத்தை விசாரித்தார்கள். மதினாவிலிருக்கும் என் தோழியைப் பார்க்க வந்தேன் என்றாள். அவளும் நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் பேசும் பழக்கமுடையவள். இந்த குணம்தான் இவ்விருவரையும் ஒன்று சேர்த்திருக்கிறது. صدق رسول الله صلي الله عليه وسلم  என்றார்கள்.

நட்புக்குத் தகுதியில்லாதவர்கள்:
عن أبى عبدالله، عن أبيه قال: قال لي أبي علي بن الحسين (عليهم السلام): يا بني انظر خمسة فلا تصاحبهم ولا تحادثهم ولا ترافقهم في طريق، فقلت: يا أبه، من هم عرّفنيهم؟

 قال: إياك ومصاحبة الكذاب فإنه بمنزلة السراب يقرب لك البعيد، ويبعد لك القريب،
   1.    பொய்யன்: அருகிலிருப்பதை தூரமாகவும்,    தூரத்திலிருப்பதை அருகிலும் காட்டுவான்

      وإياك ومصاحبة الفاسق فانه بائعك بأكلة، وأقل من ذلك،
2. பாவி: கவள சோற்றுக்காக, ஏன் அதைவிட குறைந்ததுக்கும் கூட உன்னை விற்று விடுவான்.

وإياك ومصاحبة البخيل فانه يخذلك في ماله أحوج ما تكون إليه،
3.கஞ்சன்: உன் தேவைக்கு உனக்கு உதவ மாட்டான்.

 وإياك ومصاحبة الأحمق فانه يريد أن ينفعك فيضرك،
4.முட்டாள்: உனக்கு நல்லது செய்ய நாடுவான், அது உனக்கு தீமையாய் முடியும்.

 وإياك ومصاحبة القاطع لرحمه فإني وجدته ملعونا في كتاب الله في ثلاثة مواضع قال الله عزّ وجّل:
1.    உறவை முறித்தவன்: இவனை, அல்லாஹ் மூன்று இடங்களில் சபித்துள்ளான். எனவே இந்த ஐவரோடு எப்போதும் நட்பு கொள்ளாதே!

(فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم * اولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم)  وقال: (الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض اولئك لهم اللعنة ولهم سوء الدار)  وقال: في سورة البقرة: (الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون

நட்புக்கு இலக்கணம் தந்த தாஹா நபி:
நபியும்,இப்னு உமரும் ஒரு தோட்டத்திற்குச் சென்றார்கள், அங்கே நபியவர்கள் இரண்டு குச்சிகளை உடைத்து, கோனலான குச்சியை தான் வைத்துக் கொண்டு, நேரான குச்சியை இப்னு உமருக்குக் கொடுத்தார்கள். உடனே இப்னு உமர், நபியே! நேரானதை நீங்கள் வைத்துக் கொள்வதுதான் சரியென்றார்கள். நபியோ! இல்லை, இல்லை,
உள்ளதில் நல்லதைக் கொடுத்து நமது நட்பை தொடர விரும்புகிறேன் என்றார்கள்.

எனவே நாகரீக காலத்தில் மா (நா) றிவரும் நமது நட்புகளை சுயப் பரிசோதனை செய்து சுவனத்து நண்பர்களைச் சொந்தமாக்குவோம்.



No comments:

Post a Comment