Thursday 28 November 2013

நிலமெல்லாம் தண்ணீர் ! وجعلنا من الماء كل شئ حي


அகிலத்திற்கு வழிகாட்ட வந்த அல்குர்ஆன் இபாதத்துகளைப் பற்றிப் பேசியதை விட இறைவனின் வல்லமையைப் பற்றி, அருட்பாக்கியங்களைப் பற்றி நிறைய பேசுகிறது.

                        وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ,وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ      
وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ  
وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيم
لا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ  

வானம், பூமி மட்டுமல்ல, கடலையும், கப்பலையும் பற்றிகூட பேசுகிறது. 

وَآيَةٌ لَّهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونِ
உலகமே எதிர்நோக்கும் சவால் தண்ணீர். அதைப்பற்றியும் தெளிவாகப் பேசுகிறது.  இன்னும் பத்து வருடங்களில் தண்ணீர்ச் சண்டைதான் பெரிதாக வளரும் என்றும், 2025ல் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் தண்ணீர்ப் பிரச்சனையால் பலகீனப்பட்டுப் போவார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகிறது.

காலநிலை மாற்றங்கள், மக்கள் பெருக்கம், காடுகளை அழித்தல், மரங்களை வெட்டுதல் போன்ற காரியங்களால் தண்ணீர் தட்டுப்பாடு இன்று பரவலாகியிருக்கிறது, என்ற உலகச் சிந்தனையை ஒருபுறம் ஏற்றுக் கொண்டாலும், இறைமறை மிகத் தெளிவாக ஒரு செய்தியை முன்வைக்கிறது.
وَأَنزَلْنَا مِنَ السَّمَاء مَاء بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ
தண்ணீர் தேசம்:
பூமியின் உத்தேச மொத்த நீர்க்கொள்ளளவு (உலக நீர் வினியோகம்)   326,000,000மில்லியன் கன அடிகள்.

 இதில் 97.2% கடலில் உள்ளது, 0.9% நிலத்தடி நீர், 1.8% பனிப்பாறைகள்.
 0.02% ஏரிகள், நதிகளின் நன்னீராகும். 

நிலத்தடி நீரும், நன்னீரும் மனிதர்களுக்கு உபயோகமுள்ள அல்லது உபயோக சாத்தியமுள்ள நீராதாரங்களாகும்.

 அதாவது  326,000,000மில்லியன் கன அடிகளில் நமக்கு பயன்படுவது     வெறும்  60000 மில்லியன் கனஅடிகள் தான். 
கடல் நீரை நீக்கிவிட்டால் இரண்டரை சதவீதம் மட்டும்தான் நம்முடைய பயன்பாடு.

ஆக, உலகில் தேவைக்குப் போதுமான அளவு தண்ணீர் சப்ளையாகிக் கொண்டிருக்கிறது. மனித உடல் பருமனுக்கேற்றவாறு 60 முதல் 70நீரால் ஆனது. தாவரங்களில் 90 சதவீதம் நீருள்ளது. நன்கு வளர்ந்த ஜெல்லி மீன்களில் 98 சதவீதம் நீருள்ளது.

وَأَنزَلْنَا مِنَ السَّمَاء مَاء بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ

இந்த இறைவசனம் எவ்வளவு பெரிய தத்துவத்தை உணர்த்துகிறது.!




நீரின்றி அமையாது உலகுوجعلنا من الماء كل شيء حي                                                                                                                            



வீடு கட்ட முடியாது, விவசாயம் செய்யமுடியாது, ஜீவராசிகள்  வாழமுடியாது. “பூமி ஒரு நீர் உடம்புக்காரிஎன்பதுதான் உண்மை.


நீரின் மகத்துவம்: தண்ணீர் ஒன்று, பாக்கியங்கள் ஆயிரம்.
أَنَّا صَبَبْنَا الْمَاء صَبًّا, ثُمَّ شَقَقْنَا الأَرْضَ شَقًّا, فَأَنبَتْنَا فِيهَا حَبًّا, وَعِنَبًا وَقَضْبًا, وَزَيْتُونًا وَنَخْلا, وَحَدَائِقَ غُلْبًا, وَفَاكِهَةً وَأَبًّا, مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ.தண்ணீரை பாக்கியமாகவே இறக்கி வைக்கிறோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
                                           وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيد  இறைவனின் பாக்கியங்களும், வல்லமையும் வெளிப்படும் போது கேட்கப்படும் துஆக்கள் கூட இறைவனால் அங்கீகரிக்கப்படும்
குறிப்பாக மழை பொழியும்போதும்.
:فيستحب للإنسان أن يكثر فيها من الدعاء فقد جاء في حديث حسن عن النبي  صلى الله عليه وسلم  أنه قال : ( اطلبوا إجابة الدعاء عند التقاء الجيوش وإقامة الصلاة ونزول المطر )மழை பொழியும்போது  اللهم صيبا النافعةஎன்று துஆ செய்யும் போது, பெய்யும் மழை பயனுள்ளதாக அமைகிறது.
ஜப்பானைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர். The message from water எனும் புத்தகத்தில் தண்ணீருக்கு முன்னால் பேசப்படும் நல்ல வார்த்தைகள் தண்ணீரிலும் பிரதிபலிக்கிறது. என்கிறார்.
21ம் நூற்றாண்டின் சக்கரவர்த்தி, சர்தாரே ஆலம், (ஸல்) அவர்களின் வார்த்தைகள்  ( اطلبوا إجابة الدعاء عند التقاء الجيوش وإقامة الصلاة ونزول المطر )தான் The message from water போன்ற புத்தகங்களுக்கே மூலம் என்பது புரிகிறதா!?


நீர்ச் சிந்தனை:



குடிக்கும் நீரைச் சிந்திக்க மாட்டீர்களா?!              أَفَرَأَيْتُمُ الْمَاء الَّذِي تَشْرَبُونَ 

நீயா? நானா?                                       أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُون  மேகத்திலிருந்து இறக்கும் தண்ணீருக்கு நானே பொறுப்பு என்று அல்லாஹ் உலகுக்கே சவால் விடுகிறான்.

நன்றி மறப்பது கேடு:    

لَوْ نَشَاء جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلا تَشْكُرُونَ                  

சூப்பராய் சமைத்த மனைவியை பாராட்டும் மனிதா! அருசுவை உணவு சமைத்தவனை அன்போடு பாராட்டும் மனிதா! குடிக்க நீரில்லையென்றால் செத்துப்போய்விடுவாயே, அந்த நீரைக் கொடுப்பவன் நான். எனக்கு நீ நன்றி செலுத்த வேண்டாமா? நன்றி செலுத்தவில்லையென்றால், நீ பயன்படுத்தும் இரண்டரை சதவீத நீரையும் உப்பாக்கி விடுவேன் என்று உலகையே அல்லாஹ் மிரட்டுகிறான்.


நிலத்தடி நீர் வற்றிப் போகும்: قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِيكُم بِمَاء مَّعِينٍகுடிநீருக்காக கோர்ட்டை அவமதித்த காவிரியர்களே! கடல்நீரைக் குடிநீராக்கப் புறப்பட்டக் கலைக் கூத்தாடிகளே! சேது சமுத்திரத்தை அரசியலாக்கி ஆதாயம் தேடியவர்களே! நிலத்தடி நீருக்கே நான் ஆப்புவைத்தால், உங்கள் கோடிகளால் அந்நீரை கொண்டுவர முடியுமா? என்று அல்லாஹ் கர்வம் கொள்கிறான்.


நன்மை தரும் டிப்ஸ்:
நீர் அருந்தும் போது, தாகித்ததும் தண்ணீர் குடிக்கும் மிருகம்போன்றிலல்லாமல், இதுவும் இபாதத் எனும் சிந்தனையோடு நீரருந்த வேண்டும்.
பிஸ்மில்லாஹ் கூறிக் கொள்ள வேண்டும்தண்ணீரைப் பார்த்துக் குடிக்க வேண்டும்

மாசுபட்ட தண்ணீரைக் குடிப்பதால் வருடத்திற்கு 5மில்லியன் குழந்தைகள் இறப்பதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.
வலது கையால் குடிக்க வேண்டும்இடதுகை நாகரீகம், நபியின் சுன்னத்தை மாற்றிவிடக் கூடாது.
அமர்ந்து குடிக்க வேண்டும்: 

 عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم                                     لا يشربن أحد منكم قائماً، فمن نسي فليستقئ                                               

நின்று குடித்தால், வாந்திகூட எடுத்து விடுங்கள். என்று நபிமொழி அறிவுருத்துகிறது.
நன்றியுணர்வோடு குடியுங்கள், குடித்த பிறகு    الحمد لله الذي جعله عذبا فراتا برحمته و لم يجعله ملحاً أجاجاً بذنوبناஎன்ற துஆவை ஓதுங்கள்.




No comments:

Post a Comment