Thursday 18 April 2013

இறைசக்தியே நிறைசக்தி ! (அல்லாஹ்வே போதுமானவன்!)

உலகம் சோதனைக் களம்,இஸ்லாத்தின் பார்வையில் சிறைச்சாலை.இங்கு இன்பமும் , துன்பமும் மாறிமாறி வரும்.துன்பத்தின் போது மனிதனையோ,பிரசக்திகளின் மீதோ ஏன்  மலக்குகளின் மீதோ கூட நம்பிக்கை வைக்கக்கூடாது.இறை சக்தியின் மீது மட்டுமே நம்பிக்கை வைக்கவேண்டும்.இறைசக்தி என்பது மனித சக்திகளோடு ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரு அபார சக்தி.

டைட்டானிக் கப்பலை அறிமுகப்படுத்தும் போது இந்தக் கப்பல் நீரில் மூழ்காது,உடையாது என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அறிமுகத்தில்கூட அவ்வளவு பிரபல்யமாகத கப்பல் இரண்டுதுண்டாக உடைந்து நீருக்கு அடியில் மூழ்கிய பிறகுதான் அவ்வளவு பிரபல்யமானது. மனித சக்தியை நீரின் சக்தி மூழ்கடித்துவிட்டது. அதற்காக நீரின் சக்தியை இறை சக்தியோடு ஒப்பிட முடியுமா? 

 {فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحاً صَرْصَراً} [فصلت:16].
 { كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ } 
இந்த ஆயத்துகள் காற்றின் சக்தியை தெளிவு படுத்துகிறது. நமக்கு முன் வாழ்ந்த பலசாலி சமூகத்தை எப்படி புரட்டிப் போட்டது! ஏன் "தானே" புயல் அமெரிக்காவை எப்படி துவம்சம் செய்தது. அதற்காக காற்றின் சக்தியை இறை சக்தியோடு  ஒப்பிடமுடியுமா?

காஷ்மீரில் நடந்த பூகம்பம் முதல் குஜராத் தொட்டு இந்தோனிஷியா வரை நடந்த பூகம்பங்கள், மண்ணின் சக்திக்கு முன்னால் மனித சக்தி வெறும் மண் என்பதை நிரூபித்ததே! அதற்காக மண்ணின் சக்தியை இறைசக்தியோடு ஒப்பிட முடியுமா?

ரஷ்யாவில் ஒரு இடத்தில் பெரும் ஜுவாலையொடு பல ஆண்டுகளாக ஒரு நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. அந்த நெருப்பை அணைத்தால் பல கோடி ரூபாய் தருவதாக ரஷ்யா அறிவிப்பு செய்திருக்கிறது. யாரும் அணைக்க முன்வரவில்லை.அதற்காக நெருப்பின் சக்தியை இறை சக்தியோடு ஒப்பிட முடியுமா? 

இந்த எல்லா சக்திகளைவிடவும் இறைசக்தி உயர்ந்தது. இறை சக்தி என்பது மனித சிந்தனைக்கு அப்பாற்ப்பட்டது. என்பதை எல்லோரும் விளங்க வேண்டும்.
எனவே என்துன்பங்களை முழுவதுமாக துடைத்து இன்பவெள்ளத்தில் என்னை புரளவைக்கும் ஒரே சக்தி, என்னிறைவனின் சக்தி என்ற எண்ணமும் உறுதியும் வேண்டும். இந்த எண்ணமும் உறுதியும்தான் நமக்கு வெற்றியை ஈட்டுத் தரும்.

"அலி(ரலி)யின் ஆட்சிகாலம். எதிரிகள் சூழ்ந்திருந்த நேரம். மக்களில் சிலர் அலிக்கு பாதுகாப்பாக வந்து நின்றபொழுது அலியவர்கள் கேட்டார்கள்; நீங்கள் தரும் பாதுகாப்பு வானத்தின் ஆபத்துக்கா? பூமியின் ஆபத்துக்கா? என் இறைவன் முடிவு செய்து விட்டால் எந்த ஆபத்தையும் யாரும் தடுக்க முடியாது. எனவே எனக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்."

"நிஹாவந்த் என்ற யுத்தத்திற்கு அலி (ரலி) புறப்படும்போது சில ஜோசியக்காரர்கள் வந்து அலியிடம் கூறினார்கள், நட்சத்திரம் ஒன்று திசைமாறி இருக்கிறது, எனவே யுத்தத்திற்கு செல்லவேண்டாம் என்று தடுத்தபொழுது எனக்கு இதன்மீது நம்பிக்கையில்லை; என் இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து செல்கிறேன் என்று புறப்பட்டு சென்று பெரும் வெற்றியோடு திரும்பின்னார்கள்."

عن أبي العباس عبد الله بن عباس رضي الله عنهما قال : كنت خلف النبي صلى الله عليه وسلم يوما ، فقال : ( يا غلام ، إني أُعلمك كلمات : احفظ الله يحفظك ، احفظ الله تجده تجاهك ، إذا سأَلت فاسأَل الله ، وإذا استعنت فاستعن بالله ، واعلم أن الأُمة لو     اجتمعت على أَن ينفعـوك بشيء ، لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ، وإن اجتمعوا على أن يضروك بشيء ، لم يضروك إلا             بشيء قد كتبه الله عليك، رفعت الأقلام وجفت الصحف ) رواه الترمذي وقال : حديث حسن صحيح .
இந்த ஹதீஸுக்கு இலக்கணமாய் சஹாபாக்கள் விளங்கினார்கள் என்பதற்கு அலி (ரலி) அவர்கள் மிகச்சரியான சான்றாய் அமைந்தார்கள்.

மாநபி (ஸல்) அவர்கள், பத்ரு யுத்தத்தில் இறைவனின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார்கள். இறைவன் கூறுவான், நீங்கள் அவர்களை கொல்லவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். ( فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى)

எனவே எந்த சூழலிலும் இறைசக்தியின் மீது முழுவதுமாக நம்பிக்கை கொண்டு வெற்றிபெறும் توفيق ஐ  அல்லாஹ் தருவானாக!



No comments:

Post a Comment