Thursday 25 April 2013

நிழல் மனிதர்கள்.....!

                                                      

                        இந்த உலகம் பொய், இங்குள்ள வாழ்க்கை பொய். 
                        பணம் பொய், பதவிகள் பொய்.
                        பட்டங்கள் பொய்,  சட்டங்கள் பொய்,
அழகு பொய், அசிங்கம் பொய்,
சுகம் பொய், துக்கம் பொய்.
 மன்னவனும்,மாநபியும் போதித்த மறுமை மட்டுமே மெய்.
அங்குள்ள சுகம் மெய், துக்கம் மெய்.
துன்பங்கள் மெய், இன்பங்கள் மெய்.
சொர்க்கம் மெய், நரகம் மெய்.
நல்லவர்களுக்கான பட்டங்கள் மெய், 
தீயவர்களுக்கான தண்டனைகள் மெய். 
இவை அனைத்தும் நம்மிடம் இருக்க வேண்டிய இறைநம்பிக்கை.


மறுமையின் கடுமையை உணர்த்தும் இறை செய்திகள்;
                                                                                           يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه 
 وخرجا من حديث أبي هريرة عن النبي صلى الله عليه وسلم ، قال : يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهمفي الأرض سبعين                    ذراعا ، ويلجمهم حتى يبلغ آذانهم ولفظه للبخاري    ..  

அதி பயங்கரமான மறுமையில் சில மனிதர்கள் மட்டும் இறையருள் பெற்று அவனது அர்ஷுக்கு கீழ் நிழல் பெரும் பாக்கியம் பெறுவார்கள். 

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : " سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ، إمام عادل وشاب نشأ في عبادة الله ، ورجل قلبه معلق بالمساجد ، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله . ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ، ورجل ذكر الله خالياً ففاضت عيناه " متفق عليه

நமது நமது ஜும்ஆ பேருரையின் நோக்கமும் நிழல் பெரும் மனிதர்களை மையமாகக் கொண்டே உருவாக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களை வரிசைப் படுத்துவோம்.


  1.  மான்புணர்ந்து நோன்பிருந்தவர்கள் மறுமையின் நிழல் மனிதர்கள்!      
மறுமையில் அர்ஷின் நிழலுக்கு கீழ் ஒரு விரிப்பு விரிக்கப் பட்டிருக்கும், அதில் சில மனிதர்கள் அமர்ந்து சாப்பிட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்க்கும் மனிதர்களில் சிலர் நாங்கள் பசியிலும்,பயத்திலும் இருக்க இவர்கள் மட்டும் உல்லாசமாக சாப்பிட்டுக் கொண்டிருக் கிறார்களே இவர்கள் யாரென்று கேட்பார்கள்? இவர்கள்தான் உலகில் வாழும்போது காலை முதல் மாலை வரை அல்லாஹ்விற்காக தங்களின் ஆசைகளையும்,உணர்வுகளையும் கட்டுப்படுத்தி நோன்பு நோற்றவர்கள் என்று பதில் சொல்லப்படும்.  ‌خطبات منور


2. நீதி வழுவா  மன்னர்கள் தீர்ப்பு நாளின்  நிழல் மனிதர்கள்:                                                                                                                                                                  إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها   
      (4:58) وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصير

இன்றைய அரசியல் வட்டாரங்களில் அழிந்துபோன பல நல்ல விஷயங்களில் நீதியும் ஒன்று. செல்வமும், செல்வாக்குமுள்ளவர்கள் வெற்றி பெறுவதும், ஏழைகள் தோற்பதும் நீதிமன்றங்களில் வாடிக்கையாகி விட்டது. கெஞ்சி, கூத்தாடி இந்த ஒருதடவை எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று காலில் விழாத குறையாய் ஓட்டு வாங்குபவர்கள், நாற்காலி கிடைத்ததும் ஒட்டாளிகளை ஓட்டாண்டிகளாக்கி விட்டு நான்குகால் பாய்ச்சலில் ஓடி ஒளிந்து விடுகிறார்கள். தன் குடும்பம்,தன வட்டம்,தன்னலம் என்ற குறுகிய மனப்பான்மையிலேயே பிறர்நலம் பற்றிய அக்கறையில்லாமல் இன்றைய தலைவர்கள் மாறிவிட்டார்கள்.    

ஆட்சிக்கு ஓர் அபூபக்கர் (ரலி):
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு தனது வியாபார பொருட்களை எடுத்துக் கொண்டு கடைவீதிக்குப் புறப்பட்ட அபூபக்கரை உமர்(ரலி) நிறுத்திக் கூறினார்கள். நீங்கள் இப்பொழுது முஸ்லிம்களின் தலைவர், நீங்கள் பொறுப்பிலிருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பைத்துல்மாலிலிருந்து குறிப்பிட்ட தொகையை சம்பளமாக நிர்ணயிக்கலாம் என்றுகூறி அபூபக்கரை பைத்துல்மால் பொறுப்புதாரி அபூஉபைதா (ரலி) அவர்களிடம் அழைத்துச் சென்றாகள்.
அங்கு அவர்களுக்கு  சம்பளம் நிர்ணயிக்கப் பட்டது. இவர்களது சம்பளத்திலிருந்து அபூபக்கரின் மனைவி சிறிது தொகையை சேமித்து வைத்தபோது அதையும் அன்னாரிடமிருந்து வாங்கி பைத்துல்மாலில் சேர்த்து விட்டார்கள். மேலும் தன சம்பளத்தை குறைக்குமாறும் கேட்டுக் கொண்டார்கள்.  இஸ்லாமிய ஜனாதிபதியின் நிலை பார்த்தீர்களா!  

இன்றைய பாரதப் பிரதமரின் சம்பளம் என்ன தெரியுமா?!

*salary:          Rs,      50,000
*sumotuary:    Rs,       3000
*D.A:              Rs       62,000
*constituency: Rs       20,000
நமது பிரதமரின் மாதச் சம்பளம்:  1,35,000
ஆண்டு வருமானம்                        16, 20000
சட்டமன்ற உறுப்பினர்களின்  தொகுதிப் படி உட்பட மாதச் சம்பளம்: 55,000
இந்த போதாத சம்பளத்தை வைத்துக் கொண்டு நீதமாக நடக்க முடியுமா? மானங்கெட்ட தலைவர்களுக்கு இந்த சம்பம் போத வில்லையாம்!    

இவ்வளவு போதாதென்று லஞ்சம், ஊழல்,மோசடி வேறு. ஒரு கவிஞன் கூறினான், 
          வீட்டில் ஊழல், காட்டில் ஊழல்,
          பீரங்கியில் ஊழல்,ராணுவத்தில் ஊழல், 
         வீரப்பன்னிலும் ஊழல், வங்கியிலும் ஊழல், 
         சாகலாம் என்றால் சவப் பெட்டியிலும் ஊழல்.
இந்த ஊழல் பெருச்சாளிகளிடம் எப்படி நீதம் இருக்கும்?!

உண்மைக்கு ஓர் உமர் (ரலி):
அபூபக்கரின் மறைவிக்குப் பிறகு உலகமே வியக்குமளவிற்கு ஆட்சி புரிந்தவர்கள் உமர் ரலி. இவர்களது ஆட்சியில்தான் அனாதைகள், ஆதரவற்றோர், முதியோர்கள், விதவைகள், வறுமையில் வாடியவர்களுக்கெல்லாம் அரசு உதவித் திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டது. உமரின் ஆட்சியில் தான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் எல்லைகள் விரிய ஆரம்பித்தன.ஆங்கிலேய ஆட்சிமுறைகள் அனைத்தும் உமரைப் பார்த்து காப்பியடிக்கப் பட்டவை தானே!
உமர் ரலியின் வாழ்வில் ஒருநாள், யுத்தப் பொருட்கள் பங்கீடு செய்யப்பட்டன. அதில் யுத்தத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் தலா ஒரு போர்வை கிடைத்தது. ஒருநாள் உமர் ரலி அவர்கள் ஜும்ஆ தொழ வைப்பதற்காக பள்ளிக்கு வந்தார்கள், அவர்களது மேனியில் இரண்டு போர்வை இருந்து. இதைப் பார்த்த சஹாபிகளில் ஒருவர், உமரே! நில்லும், எல்லோருக்கும் தலா ஒரு போர்வைதானே  கிடைத்தது, உங்களுக்கு மட்டும் எப்படி இரண்டு போர்வை கிடைத்தது? இதற்கு நீங்கள் பதில் சொல்ல வில்லையானால் உங்கள் பின்னால் இன்று நாங்கள் தொழப் போவதில்லை என்றார். 
இதைக் கேட்டதும் உமர் ரலிக்கு கோபம் கொப்பளிக்க வில்லை, பழிவாங்கும் எண்ணம் துளிகூட இல்லை,கண்ணியக் குறைவை ஏற்படுத்தும் பெண்ணியச் சிந்தனை  இல்லை.
அமைதியாய் இதற்கு என்மகன் பதில் சொல்வார் என்றார்கள். உடனே அப்துல்லா ஹிப்னு உமர் (ரலி) கூறினார்கள்.அன்பரே!நானும் அந்த யுத்தத்தில் கலந்து கொண்டேன்,என்பங்கிற்கும் ஒரு போர்வைக் கிடைத்தது.   
அதை என் தந்தைக்கு கொடுத்து விட்டேன் என்றார். அதன் பிறகுதான் தொழுகை நடத்தப் பட்டது.                                                                           ‌خطبات منور 
பசியால் ஒரு நாய் இறந்தால்கூட அதற்கும் இந்த உமர் நாளை பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்றார்கள். நீதம் தவறாத உமர் ரலி அவர்கள்.
இது போன்ற நீதவான்களுக்கு மாநபியின் மணிமொழி :  
      ان المقستين عند الله عند الله منابرمن نور الذين يعدلون في حكمهم واهليهم وما ولو رواه مسلم
     
நிழல் மனிதர்களில் மூன்றாமவர் இன்ஷா அல்லாஹ்  வரும்வாரம்.
                                      

No comments:

Post a Comment