Thursday 4 April 2013

சுகம் தரும் சுத்தம் ...!

ஏப்ரல் 7 உலக சுகாதார தினம்


உலகமே ஒரு குப்பைதொட்டியோ என்று வியக்குமளவுக்கு ஆகாயம் முதல் அதல பாதாளம் வரை குப்பையும் கூழமும்நிறைந்து வழிந்துகொண்டிருக்கும் நிலையில் குப்பைக்கு 'குட்பை 'சொல்ல மக்கள் தாங்களாகவே தயாராக வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் திரைப் பட நடிகர் ஒருவர் பேட்டி கண்டபோது கலாம் கூறினார்,மேலை நாடுகளில் சுகாதாரம் சரியாய் பேணப்படுகிறது!ஒருவன் குப்பயைப்போட்டுவிட்டு அவனே இறங்கி சுத்தம் செய்கிறான்.முன்னால் சென்ற காரிலிருந்து விழுந்த குப்பையை பின்னால்காரில் வந்தவன் எடுத்து குப்பை தொட்டியில் போடுகிறான் இது போன்று தமிழக மக்கள் மாறவேண்டும் என்றார். சுகாதார கேடு விளைவிப்பவர்கள் மீது அரசு தண்டனைச் சட்டங்களை வலுப் படுத்தினால் மட்டுமே தமிழகத்தை சுகாதார சீர்கேட்டிலிருந்து பாதுகாக்க முடியும். பறந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி எம்பெருமானார் (ஸல்)அவர்கள் காலத்தில் தொழ வைத்துக்கொண்டிருந்த ஒரு தோழர் முன்பக்கமாக எச்சில் துப்பியதற்காக இனிமேல் இவர் உங்களுக்கு தொழுகை நடத்தக் கூடாது என்று நபியவர்கள் கண்டித்தார்கள்.

 இஸ்லாமும் சுகாதாரமும்
எல்லாத்துறைகளிலும் நிறைவாய் தடம் பதித்து வழிகாட்டிய  இஸ்லாம் சுகாதாரத்தை மட்டும் விட்டிருக்குமா? மலம்,ஜலம் கழிக்கும் முறையைக்கூடவா உங்கள் நபி கற்றுக் கொடுக்கிறார்; என்று கேவலமாக கேட்டவரிடம் சல்மான் பார்ஸி (ரலி) ஆம்! என்ற ஒற்றை வார்த்தையால் தொழுகை,நோன்பு மட்டுமல்ல: முறையாகச் செய்தால்சிறு நீர் கழிப்பதும் புனிதத்தைத் தேடித் தரும் என்பதை உணர்த்தினார்கள். "சுத்தம் ஈமானில் பாதி"என்ற நபிமொழி சுகாதாரத்தின் உயர்வையும்,மதிப்பையும் பறைசாற்றவில்லையா?   

அல்லாஹ் தூய்மையானவன்;தூய்மையையே விரும்புகிறான்.எனவே உங்கள் வீட்டுத் திண்ணைப் பகுதிகளையும் மூலைகளையும் சுத்தமாக வைத்திருங்கள், யூதர்களுக்கு ஒப்பாகிவிடாதீர்கள் என்ற நபிமொழி சுகாதாரத்தின் உயர்வையும்,மதிப்பையும் மறுபடியும் பறைசாற்ற வில்லையா?

சுத்தத்திற்கும்,சுகாதாரத்திற்கும் மேலை நாடுகளை மேற்கோள் காட்டும் மேதாவிகளே! எங்கள் மாநபிவாழ்ந்த காலங்களில் மதினமா நகரில் குப்பை கொட்டுவதற்கென்றே தனி இடம் இருந்திருக்கிறது என்பதை எப்போது நீங்கள் அறிவீர்கள்!

"குப்பை கொட்டும் இடங்களில் இறைவணக்கம் செய்யாதீர்கள்"என்ற நபிமொழியும், அழுக்காடை அணிந்த மனிதரைப் பார்த்து துவைக்கக்கூடவா வழியில்லை?! என்று கடிந்து கொண்ட வரலாறும் சர்வதேச சுகாதார தினத்துக்கே சாவுமணி அடிக்கவில்லையா?  

தனி மனித வாழ்க்கை தூய்மையானதாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திய இஸ்லாம், தன் போதனைகளையும் அவ்வாறே அமைத்துக் கொண்டதன் வெளிப்பாடுதான் "சுத்தம் ஈமானில் பாதி" என்ற சுந்தர நபிமொழி.

பாதசாரிகளுக்கு தொந்தரவு தருபவர்மீது இறைச் சாபம் உண்டாகும் என்ற நபிமொழி உணர்த்தும் பாடம் என்ன தெரியுமா? வெற்றிலைப் பாக்கை குதப்பிக் கொண்டும், வேகமாக ஓடும் பேருந்தில் ஜன்னல் வழியாகவும் எச்சில் துப்பியவர்கள்;நாம் துப்பிய எச்சில் கீழே விழுந்ததா?யார் மேலேயும் விழுந்ததா?என்று கவனிக்க வேண்டும்  என்பதை உணர்த்தவில்லையா?   

பள்ளிவாசலில் எச்சில்துப்புவது பாவம்!  (பிறருக்கு தொல்லை தராத வண்ணம்அதை மண்ணில் ) மூடிவிடுவதே அதற்கு பரிகாரம் என்பது நபிமொழி.

அவசரமாக எச்சில் வந்தால் (துப்புவதற்கு இடம் இல்லையென்றால்) அதை தன் ஆடையில் துப்பி வைத்துக் கொள்ளவும்.பிறகு சென்று கழுவிக் கொள்ளலாம். என்ற நபிமொழி பிறமனிதர்களுக்கு சுகாதாரக்கேடு விளைவிப்பதை கண்டிக்கிறது.   ஆம்! எச்சில் துப்புவதற்கும் இலக்கணம் தந்த ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான்.


இங்கே சிறுநீர் கழிக்காதீர்!

ஆத்திரத்தை அடக்கினாலும் சிறுநீரை அடக்க முடியாது! என்ற ஆதங்கத்தோடு பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள்,தங்கள் மறைவிடம் மறைக்கப்பட வேண்டியது என்ற சிந்தனயே இல்லாமல் "இங்கே சிறுநீர் கழிக்காதீர்!"என்ற அறிவிப்பு பலகைக்குக் கீழ் சிறுநீர் கழித்துக் கொண்டே சுகாதார தினத்தைக் கொண்டாடுவதில் பயன் என்ன இருக்கிறது?!

குடியிருக்க வீடு தேடி அலைந்தவர்களைப் பார்த்திருப்போம்; ஆனால்  மாநபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்க இடம் தேடிச் சென்றிருக்கிரார்கள்.

பாத்திரங்களில் சிறுநீரை சேமித்து வைக்கும் வீடுகளுக்கு வானவர்கள் வரமாட்டார்கள். (நபிமொழி)

ஓடும் தண்ணீரில் சிறுநீர் கழிக்காதீர்கள். (நபிமொழி)

ஆற்றங்கரையிலும்,பழம் தரும் மரத்தடியிலும் மலம் கழிக்காதீர்கள். (நபிமொழி)
இந்த நபிமொழிகள் சர்வதேச சுகாதாரத்தை எவ்வளவு அழகாய் உணர்த்துகின்றன. சுகாதரம் சம்பந்தமாக மேலும் நிறைவாய் தெரிந்து கொள்ள இதை அழுத்தவும்.



  























    






    

No comments:

Post a Comment