Thursday 2 May 2013

நிழல் மனிதர்கள்....II



மறுமையில் வெறுமையாய் யாருமின்றி ஒருமையாய் நிற்கும் சூழலில் மறையவனின் தீர்ப்பு எப்படி அமையுமோ! தகிக்கும் சூரியன் தலையில் விழுந்து விடுமோ! கொதிக்கும் பூமி புதைகுழியாய் மாறிவிடுமோ! என்ற பயத்திலும், துக்கத்திலும் மனிதசகமூகத்தின் மனங்கள் மாறிமாறி பயணிக்கும்போது நிழலில்லா பாலையில் நிற்கதியாய் நிற்கும்போது, இறையருள் பெற்ற சிலர் மட்டும் அர்ஷீக்கு கீழ் நிழல் பெற்று நிம்மதியாய் இருப்பார்கள். அவரகளில் மூன்றாமவர்:

3. இறைவணக்கத்தில் (வஞ்சம் கலக்காது) திளைத்த வாலிபர்    நிலைத்த அர்ஷின் நிழல் மனிதன்: 
இன்றைய இளைய சமூகத்தின் பரிதாபம், ஓடும் வயதில் நடக்க சக்தியில்லாமல் திணறிக் கொண்டிருக்கிறது. புகைப் பழக்கம் தொட்டு, புகையிலைப் பழக்கம் தொட்டு, மது, மாதுப் பழக்கம் தொட்டு , மன்னவனின் கட்டளை விட்டு, மாநபியின் கட்டளை விட்டு, மறைபோதனை விட்டு மனித சமூகத்தில் மரியாதை கெட்டு அந்தோ பரிதாபம்! வருங்காலம் இளைஞர்கள் கையில் எனும் சொல்லாடல் மறந்து எதிர்காலமே இளைஞர்களுக்கு இல்லை எனும் நிலை உருவாகி விட்டது. நண்பனுக்காக பெற்றோரைப் பழிக்கும் பேறுகெட்ட பிள்ளைகளை பெற்றெடுத்து விட்ட கற்பங்கள், கதறியழும் ஓசைகள் ஈட்டியாய் காதுகளில் பாய்கிறது.

அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு வழக்கு! தன் மகனுக்கு எதிராய் பெண்ணொருத்தி வழக்கு தொடுக்கிறாள். நீதிபதி அவர்களே! என் கணவர் மரணித்து விட்டார், எனக்கு ஒரு மகன், நான் அவனை வளர்க்கிறேன்: அவன் ஒரு நாயை வளர்கிறான். அந்த நாயிக்காக தினமும் நான்கு மணிநேரம் செலவிடுகிறான், எனக்காக ஒருநிமிடம் கூட செலவழிப்பதில்லை. தனிமையின் வெறுட்சி என்னை வாட்டுகிறது. என்று கதறியழுதாள் அந்த பாசத்தாய். 
வழக்கை விசாரித்த நீதிபதி கூறினார்: உன் மகன் மேஜர். உன்னை பராமரிக்கவோ, உன்னிடம் பேசவோ அவனை நிர்பந்திக்கக் கூடாது. தனிமையில் இருக்க பிடிக்க வில்லையென்றால் நீங்கள் முதியோர் காப்பகத்தில் சேர்ந்து கொள்ளுங்கள், அரசு உங்களுக்கு உதவி செய்யும் என்றார். தீர்ப்பு எவ்வளவு அற்புதம் பார்த்தீர்களா!
பெற்றோரை திட்டுவதே பெரும் பாவம் என்றது இஸ்லாம்:
حدثنا أحمد بن يونس حدثنا إبراهيم بن سعد عن أبيه عن حميد بن عبد الرحمن عن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أكبر الكبائر أن يلعن الرجل والديه قيل يا رسول الله وكيف يلعن الرجل والديه قال يسب    الرجل أبا الرجل فيسب أباه ويسب أمه


 பிள்ளைகள் வணக்கசாலிகளாக வளரவேண்டும் என்று பிரியப்படும் பெற்றோர்கள் முதலில் தங்களை வணக்கசாலிகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். சுயஒழுக்கமின்றி உங்கள் பிள்ளைகளை நல்லவர்களாக வளர்க்க முடியாது. என்று இமாம் ஸஃதி (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்.

 பெற்றோருக்காக துஆ செய்யும் பிள்ளைகளை உருவாக்க வேண்டும்.
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال " إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلامن صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له " رواه مسلم 
1.       மக்கள் பயன் பெறும்வகையில் ஏதேனும் அறச்செயல் செய்வது. இது மரணத்திற்கு பிறகும் நன்மையை சேர்க்கும். மரம் நடுதல், பாதசாரிகளுக்கு பயன் பெறும் வகையில் நிழற்குடைகள் அமைத்தல், ஆறு, குளம் வெட்ட சக்தியில்லையென்றாலும் சின்டெக்ஸ் டேங்க் மூலமாகமாகவாவது மக்களின் தாகத்தை தீர்க்குதல். போன்றவைகள் சதக்கத்துல் ஜாரியாவில் சேரும்.
        إلامن صدقة جارية                     
   ஒரு மனிதன் மரம் நட்டான், பிறகு கொஞ்சநாளில் இறந்து விட்டான். அந்த மனிதனை கனவில் ஒருவன் கண்டான். அல்லாஹ் உன்னோடு எப்படி நடந்து கொண்டான் என்று கேட்டபோது நான் நட்டுவைத்த மரத்தால் என் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். ஒரு மனிதன் அந்த மரத்துக்கு கீழே இளைப்பாறிவிட்டு இறைவா! இந்த மரத்தை நட்டவரின் பாவங்களை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தான். அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் என்றான்                   (اخلاق محسني)
 أو علم ينتفع به 
 பயனுள்ள கல்வி. இன்றைய கல்விமுறை பயன்தருவதற்கு பதிலாக பிள்ளைகளை பாழாக்கிக் கொண்டிருக்கிறது. போதைக்கு அடிமையாகும் மாணவர்கள், அழகியை கொலைசெய்த +2 மாணவர்கள். இப்படி ஏராளமான செய்திகள்.
 أو ولد صالح يدعو له 
 ஐந்தில் போதித்தால் தான் இருபத்திஐந்தில் ربي ارحمهما كما ربياني صغيرا என்று துஆ செய்யும் பிள்ளைகளைப் பார்க்க முடியும். அந்த போதனைகள் தான் அர்ஷின் நிழலைப் பெற்றத் தரும்.

4. உள்ளத்தால் இறையில்லத்தை விரும்பும் மனிதன் மறுமையின் நிழல் மனிதன்:                                                               ورجل قلبه معلق في المساجد
உலகின் மீதான மோகம் பள்ளிச் சிந்தனையை விட்டும் நம்மை வெகுதூரத்திற்கு இழுத்துச் சென்றவிட்டது. அப்படியே நினைவு வந்தாலும் காலில் சுடுநீரை ஊற்றிக் கொண்டு அவசரகதியில் ஓடிவருகிறோம். பள்ளிக்கு வரும் பக்குவத்தையும் நபியவர்கள் இப்படிச் சொன்னார்கள்,  عليكم بالسكينة والوقار

அவசரமாய் செய்ய வேண்டிய காரியங்கள்
1. தொழுகையின் நேரம் வந்து விட்டால் நிறைவேற்றுவதில் அவசரம் காட்ட வேண்டும்
2. செய்த பாவத்திற்கு தவ்பா செய்வதில் அவசரம் காட்ட வேண்டும்.
3.மரணமானவரை அடக்கம் செய்வதில் அவசரம் காட்ட வேண்டும்.
4.வயது வந்த பிள்ளைகளின் திருமண ஏற்பாடுகளில் அவசரம் காட்ட வேண்டும்
5.விருந்தாளிகளை கவனிப்பதில் அவசரம் காட்ட வேண்டும்.
6. வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் அவசரம் காட்ட வேண்டும்.
சமுதாயம் இந்த ஆறு காரியங்களிலும் எவ்வளவு அசட்டையாக இருக்கிறது.
குறிப்பாக பள்ளித் தொடர்பென்பது கூட சொல்லும் அளவிற்கு இல்லை.

5. இறைவனுக்காக இணைந்து இறைவனுக்காக பிரிந்த நண்பர்கள் நிஜ உலகின் நிழல் மனிதர்கள்: 
                                   ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه 
சிங்கிள் டீயில் ஆரம்பித்து குவாட்டரில் முடிந்தவிடுகிற நட்புகள் இன்று ஏராளம்! மாநபியின் வார்த்தைகள்             الحب في الله والبغض في الله
ஹூதைபா என்றொரு நபித் தோழர். தன் சகோதர மகன் சிறுகற்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து நபியவர்கள் இந்த காரியத்தை தடை செய்துள்ளார்கள். எனவே கற்களை வைத்து விளையாடாதே! என்றபோது சிறுவர் விளையாடுவதை விடவில்லை. உடனே ஹூதைபா நபியின் சொல்லுக்கு மதிப்பளிக்காத உன்னோடு பேசமாட்டேன் என்று கூறி அவரோடு பேசாமல் இருந்து விட்டார்கள்.  الحب في الله والبغض في الله என்ற இந்த வார்த்தைக்கு அர்த்தம் புரிகிறதா!
  حدثني عبدالأعلى بن حماد. حدثنا حماد بن سلمة عن ثابت، عن أبي رافع، عن أبي هريرة،
عن النبي صلى الله عليه وسلم؛ "أن رجلا زار أخا له في قرية أخرى. فأرصد الله له، على مدرجته، ملكا. فلما أتى عليه قال: أين تريد؟ قال: أريد أخا لي في هذه القرية. قال: هل لك عليه من نعمة تربها؟ قال: لا. غير أني أحببته في الله عز       وجل. قال: فإني رسول الله إليك، بأن الله قد أحبك كما أحببته فيه".
நமது நட்பிலும் இறைபொருத்தம் எவ்வளவு அவசியம்!

நிழல் மனிதர்கள் தொடர்ந்து வருவார்கள்

  

No comments:

Post a Comment