Thursday 12 September 2013

எதிர்பார்ப்பில்லா ஜீவன்கள்!


உலகில் நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளை இஸ்லாம் இந்த உம்மத்திற்கு மிகத்தெளிவாக போதனை செய்திருக்கிறது. அதற்கு حقوق العباد என்று பெயரும் வைத்திருக்கிறது. இந்த حقوق العبادல் முதல் இடத்தைப் பிடித்தவர்கள் நம்முடைய பெற்றோர்கள். அல்லாஹ்விற்கு செய்யவேண்டிய கடமைகளுக்குப் பிறகு மிக முக்கியமான கடமை பெற்றோர்களுக்கு செய்யவேண்டிய கடமைதான். பாவங்களில் குஃப்ருக்குப் பிறகு பெரிய பாவம் பெற்றோருக்கு மாறு செய்வதுதான்.
பிள்ளைகளின் வாழ்க்கை சீராகுவதும், சீரழிவதும் பெற்றோரின் துஆவிலும், சாபத்திலும் தான் இருக்கிறது.


வரலாற்றில் ஒருநாள்:  ஜுரைஜ் எனும் வணக்கசாலி, ஒருநாள் தொழுது கொண்டிருந்தார். அந்நேரத்தில் அவரின் தாய், மகனை அழைக்கிறார். மகனோ அல்லாஹ்வின் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்து தாயிற்குப் பதில் தராமல் தொழுகையில் ஈடுபடுகிறார். மனமுடைந்த தாய், அல்லாஹ்விடம் இறைவா! என் மகனை விபச்சாரியின் (விஷயத்தில்) முகத்தில் விழாமல் மரணிக்கச் செய்யாதே என்று துஆ செய்தார்.  நாட்கள் ஓடியது. ஒருநாள் ஒரு விபச்சாரி, ஆட்டிடையன் ஒருவனோடு தவறாக நடந்து, அவன் மூலமாக ஒரு பிள்ளையையும் பெற்றெடுத்தாள். அந்த குழந்தை, ஜுரைஜூக்குத்தான் பிறந்தது என்று பொய் சொன்னாள். மக்களோ இதை உண்மையென நம்பி ஜுரைஜை கடுமையாக தாக்கினார்கள். பிறகு ஜுரைஜ் அவர்கள் இரண்டு ரகஅத் தொழுதுவிட்டு வந்து அந்த பிஞ்சு குழந்தையிடம் உன் தகப்பன் யாரென்று கேட்டார்? அந்த குழந்தை அல்லாஹ்வின் உதவி கொண்டு  என்னுடைய தந்தை இன்ன ஆட்டிடையன் என்றது.

நீதி: தன் நேசர்களை இறைவன் எப்படியும் பாதுகாப்பான் என்றாலும், தாயின் துஆ இறைநேசராக இருந்தாலும் விடாது துரத்தும் என்பதை உணர்த்துகிறது.
பெற்றோரைப் புன்முறுவலோடு பார்ப்பது, இறைக் கடமையாம் ஹஜ் செய்த நன்மை என்பது இறைத்தூதுவரின் வாக்கல்லவா?
பார்த்தாலே நன்மைதருபவையில் கஃபத்துல்லாஹ்,குர்ஆன் இவ்விரண்டோடு சேர்த்து பெற்றோரையும் இணைத்திருப்பது எவ்வளவு பெரிய சிறப்பை உணர்த்துகிறது!

உலகில் உள்ள தொடர்புகள் அனைத்தும் ஏதாவதொரு பிரதிபலனை எதிர்பார்த்தே இருக்கிறது. ஏன்! பெற்றெடுத்த பிள்ளைகள்கூட பிரதிபலனை எதிர்பார்த்துதானே நம்மை விரும்புகிறார்கள். ஆனால் நம்மைப் பெற்றெடுத்த நமது பெற்றோர்கள் நம்மிடம் எவ்வித பலனையும் எதிர்பார்ப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்மிடமிருந்து பலனை பெரும் முன்னேகூட அவர்கள் இறந்தும் போகலாம்.

பெற்றோரை மதிக்க வேண்டும் என்பதை எல்லா மதங்களும் போதிக்கின்றன. ஆனால் இஸ்லாம் மட்டும்தான் இதையும் வணக்கமாக்கியது.நபியவர்களும் கூட சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இதை சட்டமாக தவறியதில்லை.
பெற்றோரை தவிக்கவிட்டு விட்டு ஹிஜ்ரத்திற்குப் புறப்பட்ட சஹாபியை நபியவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பினார்கள்.                                                                                                                           :عن عبد الله بن عمرو رضي الله عنه قال  
جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم  فقال جئت أبايعك على الهجرة وتركت أبوي يبكيان فقال  ارجع إليهما فأضحكهما كما أبكيتهما    رواه أبو داود ــ كتاب الجهاد برقم 216  

நபியவர்களிடம் ஒரு சஹாபி கேட்டார்கள். பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமை என்ன? என்றபோது  அவ்விருவரும் உனக்கு சுவர்க்கம் அல்லது நரகம் என்றார்கள். 


وأخرج ابن ماجه أن رسول الله صلى الله عليه وسلم، سأله أحد الصحابة قائلاً: ما حق الوالدين؟ قال: هما جنتك ونارك. 
                      
ஹசன் பசரீ (ரஹ்) அவர்களின் தாய் மரணமான போது ஹசன் பஸரீ அவர்கள் கடுமையாக அழுதார்கள். மக்கள் கேட்டபோது حسن بصري  அவர்கள், அல்லாஹ் எனக்கு சுவனம் செல்ல இரண்டு வாசல்களை கொடுத்தான். அதி ஒருவாசல் மூடப் பட்டுவிட்டது. இன்னும் நான் சுவனம் செல்ல ஒரு வாசல்தானே இருக்கிறது. என்பதற்காக அழுகிறேன் என்றார்கள்.

தாயைப் பற்றிய செய்திகள் நிறைய பேசப் படுகிறது. பெரும்பாலும் தந்தைமார்கள் ஒதுக்கப் படுகிறார்கள். தந்தை என்பவர்  இந்த உலகில் மட்டுமல்ல, மறு உலகிலும் அவர்தான் நமக்கு அடையாளமும்,முகவரியும்.
عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ 
அது மட்டுமல்ல. கஃபாவில் சில இடங்களில் எப்படி துஆ  அங்கீகரிக்கப் படுமோ, துஆ ஏற்பதற்கான நேரம் என்று சில நேரம் இருக்கிறதோ அது மாதிரி தகப்பனின் துஆவும் மக்பூலான துஆவாகும். 
ஒருநாள் நபியவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். வந்தவர், நபியிடம் தன் தந்தை அடிக்கடி பணம் கேட்பதாக முறையிட்டார். நபியவர்கள் உன் தந்தையை அழைத்துவா! என்றார்கள். வந்த மனிதர், தன் தந்தையை அழைக்கச் சென்றார். அவர் வருவதற்குள்ளாக ஜிப்ரயீல் வந்து, நபியே! அந்த தகப்பன்னார், மனதில் சில வரிகளைப் பாடிக் கொண்டிருக்கிறார். அதையும் விசாரியுங்கள், என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். நபியவர்கள் விசாரித்து விட்டு நீயும், உனது பொருளும் உன் தகப்பனுக்குத் தான் சொந்தம்,என்றார்கள்,

عن جابرٍ - رضِي الله عنه - قال: جاء رجلٌ إلى النبي - صلَّى الله عليه وسلَّم - فقال: يا رسول الله، إنَّ أبي أخَذَ مالي، فقال النبي - صلَّى الله عليه وسلَّم - للرجل: ((اذهَبْ فأتِني بأبيك))، فنزل جبريل - عليه السلام - على النبي - صلَّى الله عليه وسلَّم - فقال: إنَّ الله - عزَّ وجلَّ - يُقرِئك السلام ويقول لك: إذا جاءَك الشيخ فسَلْه عن شيءٍ قالَه في نفسه ما سمعَتْه أذناه، فلمَّا جاء الشيخ قال له النبي - صلَّى الله عليه وسلَّم - ما بال ابنك يَشكوك، أتريد أخْذ ماله؟ قال: سَلْهُ يا رسول الله، هل أُنفِقه إلا على إحدى عمَّاته أو خالاته أو على نفسي! فقال النبي - صلَّى الله عليه وسلَّم -: ((إيهٍ! دَعْنا من هذا، أخبِرنا عن شيءٍ قُلتَه في نفسك ما سمعَتْه أذناك))، فقال الشيخ: والله يا رسول الله ما يَزال الله يزيدنا بك يقينًا! لقد قلتُ في نفسي شيئًا ما سمعَتْه أذناي فقال - صلَّى الله عليه وسلَّم -: ((قُلْ وأنا أسمع))، قال: قلت:
غَذَوْتُكَ مَوْلُودًا وَمُنْتُكَ يَافِعًا 
تُعَلُّ بِمَا أَجْنِي عَلَيْكَ وَتَنْهَلُ 
إِذَا لَيْلَةٌ ضَافَتْكَ بِالسُّقْمِ لَمْ أَبِتْ 
لِسُقْمِكَ إِلَّا سَاهِرًا أَتَمَلْمَلُ 
كَأَنِّي أَنَا الْمَطْرُوقُ دُونَكَ بِالَّذِي 
طُرِقْتَ بِهِ دُونِي فَعَيْنَايَ تَهْمُلُ 
تَخَافُ الرَّدَى نَفْسِي عَلَيْكَ وَإِنَّهَا 
لَتَعْلَمُ أَنَّ الْمَوْتَ وَقْتٌ مُؤَجَّلُ 
فَلَمَّا بَلَغْتَ السِّنَّ وَالْغَايَةَ الَّتِي 
إِلَيْهَا مَدَى مَا فِيكَ كُنْتُ أُؤَمِّلُ 
جَعَلْتَ جَزَائِي غِلْظَةً وَفَظَاظَةً 
كَأَنَّكَ أَنْتَ الْمُنْعِمُ الْمُتَفَضِّلُ 
فَلَيْتَكَ إِذْ لَمْ تَرْعَ حَقَّ أُبُوَّتِي 
فَعَلْتَ كَمَا الْجَارُ الْمُجَاوِرُ يَفْعَلُ 

قال: فحينئذٍ أخذ النبي - صلَّى الله عليه وسلَّم - بتلابيب ابنه وقال: ((أنت ومالُك لأبيك))
 எனவே  பெற்றோரை பொறுப்போடு பார்த்துக் கொள்வது பிள்ளைகளின்  தலையாய கடமையாகும்.
 











No comments:

Post a Comment