Thursday 5 December 2013

எல்லாம் அவன் செயல்.!

அல்லாஹ் சர்வ வல்லமையுள்ளவன்;
 இணை துணையில்லாதவன்;
எதையும் செய்ய முடிந்தவன்; 
வானம் படைத்தான், பூமி படைத்தான்; 
பிரபஞ்ச மாற்றங்களை ஏற்படுத்தினான்;
 மழை கொடுப்பான்; மழை தடுப்பான்;
மரங்களை விளைவிப்பான்; மலைகளை நட்டு வைப்பான்; 
 கடலைப் படைத்தான்; காற்றைப் படைத்தான்;
நெருப்பை படைத்தான்; நீரைப் படைத்தான்;
 இரும்பைப் படைத்தான்,
 இன்னும் கோடான கோடி வல்லமைக்குச் சொந்தக்காரன்.                                                                                         
மனிதனைப் படைத்தான்; மனிதன் உண்ண மாமிசங்களைப் படைத்தான்; எறும்பைப் படைத்தான்; யானையைப் படைத்தான்; 
வீட்டைப் கொடுத்தான்; வீட்டு விலங்கைப் படைத்தான்;
 நோயைப் படைத்தான்; கூடவே மரணத்தையும் அனுப்பினான்;
ஆரோக்கியம் தந்தான்; கூடவே அறிவையும் தந்தான்; 
மலடிக்கும் பிள்ளையைத் தந்தான்; பிள்ளை பெறுவாள் என்றவளை மலடியாக்கவும் செய்தான்;
 லாபமும் அவன் வசம், நஷ்டமும் அவசம். 
இன்னும் கோடான கோடி.
 البصير:  அவன் பார்ப்பான், அவனைப் போன்று யாராலும் பார்க்க முடியாது.
يرى ذبيب النملة السوداء، على الصخرة الصماء، في الليلة السوداء      
கடும் இருளில் வெளிச்சம் புகாத காட்டில் கரும்பாறையின் மீது ஊரும் கருப்பு எறும்பின் காலடிச் சுவடுகளையும் பார்க்கிறான்.

السميع: அவன் கேட்பான், அவனைப் போன்று யாராலும் கேட்க முடியாது.
له ما في السماوات وما في الارض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول  فانه يعلم السر و اخفى (طه٦،٧)
வானம், பூமி, அவற்றிலுள்ள அத்தனையும் அவனுக்கே சொந்தம், உரக்கப் பேசுவதையும், ரகசியப் பேச்சையும் அவனே அறிகிறான்.

ألم ترى أن الله يعلم مافي السماوات وما في الارض، ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلاهو سادسهم ولا أدنى...............إلخ ( 7المجاذلة)         
மூவர் பேசினால் அங்கே நான்காவது அல்லாஹ். ஐவர் பேசும்போது அங்கே ஆறாவது அல்லாஹ். குறைந்த கூட்டமானாலும், அதிகம் பேர் கூடினாலும் அங்கேயும் அல்லாஹ்

ألاول :  அவனுக்கு முன்னால் யாரும் இருந்ததில்லை.
الاخر : அவனுக்குப் பின்னும் யாரும் இருக்கப் போவதில்லை.
المبدع : sample இல்லாமலேயே உற்பத்தி செய்பவன்.
البديع :  படைப்பினங்களுக்கு அதன் தன்மைகளை ஏற்படுத்துபவன்.

المصور:   தோற்றம் தருபவன்.
எத்தனை வகையான உயிரினங்கள்! ஒவ்வொரு விலங்கினமும் வெவ்வேறு முகஅமைப்பகளைக் கொண்டது. மனிதனுக்குத் தான் எத்தனை முகங்கள்! உறுப்புகள் ஒரேமாதிரியானபோதும் மனித முகங்களில் எத்தனை வேறுபாடுகள்!

என் பிள்ளையும் என்போன்ற முகஅமைப்பைக் கொண்டதற்கு நானா காரணம்! என் பிள்ளைகளில் ஒன்று, என் மூதாதையர்களின் முக அமைப்பைக் கொண்டதற்கு யார்க் காரணம்? என் மனைவியா? என் சொந்த பந்தமா? இல்லை, என் மனைவியின் சொந்த பந்தமா? அல்லது, மருத்துவராஉருவம் கொடுத்தவன் யார்!? இந்த மண்பாண்டத்தை (மனிதனை) வடிவமைத்த குயவன் யார்?

 هو الذي يصوركم في الأرحام كيف يشاء               

الخالق:  படைப்புக்குச் சொந்தக்காரன்:
உலகிலேயே உயரமானவன், உலகிலேயே அதிக எடையுள்ளவன், உலகப் பணக்காரன், பெரும் புள்ளி, தொழிலதிபர், வல்லரசை ஆள்பவன், யாராக இருந்தாலும் சரிألم يك نطفة من مني يمني، ثم كان علقة فخلق فسوى              
நீ சொட்டும் விந்தால் படைக்கப்பட்டவன். உன்னைப் படைத்தவன் நான், என்று தன் வல்லமையை உயர்த்தியும், பெருமையடிக்கும் மனிதனை அல்லாஹ் தாழ்த்தியும் பேசுகிறான்.

ஹதீஸ் குத்ஸீ:
 قال سبحانه وتعالى : (( يا ابن آدم جعلتك في بطن أمك .. وغشيت وجهك بغشاء .. لئلا تنفر من الرحم .. وجعلت وجهك إلى ظهر أمك لئلا تؤذيك رائحة الطعام .. وجعلت لك متكأ عن يمينك ومتكأ عن شمالك .. فأما الذي عن يمينك فالكبد .. وأما الذي عن شمالك فالطحال .. وعلمتك القيام والقعود في بطن أمك .. فهل يقدر على ذلك غيري ؟ فلما أن تمت مدَتك .. وأوحيت إلى الملك بالأرحام أن يخرجك ، فأخرجك على ريشة من جناحك .. لا لك سن تقطع ، ولا يد تبطش .. ولا قدم تسعى .. فأنبعث لك عرقين رقيقين في صدر أمك يجريان لبناً خالصاً .. حاراً في الشتاء . وبارداً في الصيف .. وألقيت محبتك في قلب أبويك .. فلا يشبعان حتى تشبع .. ولا يرقدان حتى ترقد

மனிதனே! தாயின் வயிற்றில் உனக்கொரு குடில் அமைத்தேன். இருளின் பயம் நீக்கினேன்,
உணவின் துர்வாடை உன்னை தாக்காதிருக்க உன் முகத்தை உனது தாயின் முதுகு பக்கம் திருப்பி விட்டேன். உனக்கு வலதும், இடதுமாய் சாய்வு கொடுத்தேன். வலதும் இடதுமாய் நீ சாயும்போது உன் தாயின் வலப்புறத்திலள்ள கல்லீரலும், இடப்புறத்திலுள்ள மண்ணீரலும் உன்னை தாங்கிப் பிடித்திருக்கும். காலம் ஓடியது, நீ உலகைப் பார்க்கப் போகிற அந்த நாளில், பிரசவ அறைக்குள் மனைவியை அனுப்பிவிட்டு, வாசலில் குறுக்கும் நெடுக்குமாய் உன் தகப்பன் நடக்க, மருத்துவர்களெல்லாம் தத்தமது முயற்சியில் இறங்க உன்னை வெளிக் கொண்டு வந்தது யார் தெரியுமா?!
குழந்தையை வெளியே கொண்டுவா! என்று வானவர் ஒருவருக்கு நான் கட்டளையிட்டபோது, தாயின் கருவுக்குள்ளிருந்த உன்னை தன் இறக்கையால் வெளியே தள்ளியபோது நீ பிரசவித்தாய்!
அதுமட்டுமல்ல, கடந்த ஒருமணி நேரத்திற்கு முன்வரை ரத்தம் ஓடிக் கொண்டிருந்த உன் தாயின் மார்பகத்தில் மெல்லிய இரண்டு நரம்புகளைக் கொடுத்து, அவ்விரண்டிலும் பாலை ஓடச் செய்தேன். அந்த அமுது கோடையில் குளிராகவும், குளிரில் சூடாகவும் இருக்கும்.
உன்மீது கொசு கடிக்காமல், கடிக்காமல் அன்பாய் பாதுகாத்து, தான் அயர்ந்து விடாமல் உன்னை துயில் கொள்ள வைத்தாலே அந்த அன்பையும் நானே உன் பெற்றோருக்குள் விதைத்தேன். படைப்புக்குப் பாத்தியமானவன் எவ்வளவு வல்லமை பெற்றவன்.
الرازق : உணவு தருபவன்.
ومامن ذابت في الارض إلا على الله رزقها                               

முழு உலகுக்கும் தினமும் விருந்து கொடுப்பவன். அதுவும் பFபே உணவு.

أن موسى عليه السلام عند نزول الوحي إليه تعلق قلبه بأحوال أهله، فأمره الله تعالى أن يضرب بعصاه على 

صخرة فانشقت وخرجت صخرة ثانية؛ ثم ضرب بعصاه عليها فانشقت وخرجت صخرة ثالثة، ثم ضربها 

بعصاه فانشقت فخرجت منها دودة كالذرة وفي فمها شيء يجري مجرى الغذاء لها، ورفع الحجاب عن سمع 

موسى عليه السلام فسمع الدودة تقول: سبحان من يراني، ويسمع كلامي، ويعرف مكاني، ويذكرني ولا 

ينساني.

மூஸா நபி, ஒருநாள். வஹீ இறங்கிக் கொண்டிருந்த போது குடும்பச் சிந்தனையில் இருந்தார்கள். அப்போது அல்லாஹ், மூஸாவே! உன் அஸாவால் பக்கத்திலிருக்கும் கல்லில் அடியுங்கள் என்றான். மூஸா நபி அடித்தார்கள். கல் பிளந்தபோது உள்ளே இன்னொரு கல் இருந்தது. அதையும் அடித்தார்கள். அதற்குள்ளும் ஒரு கல் இருந்தது. அதையும் அடித்தபோது அதற்குள்ளும் ஒரு கல்லிருந்தது. அதிலும் அடித்தார்கள், அதற்குள் ஒரு புழு இருந்தது, புழு எதையோ சாப்பிட்டுக் கொண்டு
 سبحان من يراني، ويسمع كلامي، ويعرف مكاني، ويذكرني ولا ينساني இந்த வாசகத்தை மொழிந்து கொண்டிருந்தது. இந்தப் புழுவிற்கு உணவு தந்த இறைவன், மூஸாவை மறந்து விடுவானா?!

பேரருள் கொண்ட பெரும் கருணையாளன், அல்லாஹ்வின் ஆற்றலை நாம் விளங்க வேண்டாமா? உலகில் நடைபெறும் எல்லாம் அவன் செயல் என்று.
     

                                   


                                                                   




No comments:

Post a Comment