Thursday 22 August 2013

இறைச்சாபமே இயற்கையின் சீற்றம்!

                                

فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ ۖ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ  وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا ۚ وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَٰكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ
உலகில் எதாவது ஒரு வகையில், எங்காவது ஒரு இடத்தில், பூகம்பம், சுனாமி, சூறாவளி, மண்சரிவு என்று ஏதேனும் ஒரு விபத்து நடந்து கொண்டுதானிருக்கிறது. இவைகளுக்கு உலகம் இயற்கை சீற்றம் என்று பெயர் வைத்திருக்கிறது. உலக மக்கள் தொகையில் 800 கோடிபேரில் 680 கோடிபேர் இவைகளை இயற்கை சீற்றம் என்று சொன்னாலும் 180 கோடி முஸ்லிம்களின் சிந்தனயும் இச்சிந்தனையிலிருந்து மாறுபட்டிருக்க வேண்டும். இது இயற்கை சீற்றமல்ல, இறைச் சாபம்.

உலகில் முதன்முதலாக இறைச் சாபத்தைப் பெற்றவர்கள் நபி நூஹ் அவர்களின் சமுதாயத்தவர்கள்.
950 வருடங்கள் சமுதாயப் பணி செய்து இறைவனைஅஞ்சுங்கள் என்று சொன்னதற்காக சொல்லொணா துயரங்களை சந்தித்தவர்கள் நூஹ் நபியவர்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, 
  1. وَقَالَ نُوحٌ رَّبِّ لا تَذَرْ عَلَى الأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا 
  2. إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّوا عِبَادَكَ وَلا يَلِدُوا إِلاَّ فَاجِرًا كَفَّارًا            
 இறைவா! இவர்களை விட்டு விடாதே! ஏனெனில் இவர்கள் உன் அடியார்களையும் வழிகெடுத்து விடுவார்கள். இவர்களின் பிச்சளங்களையும் விட்டு விடாதே! அவர்களும் பாவிகளாகி விடுவார்கள். என்று துஆ செய்வார்கள்.  இந்த துஆ அந்தசமுதாயத்தில் மிகப்பெரும் விளைவை ஏற்படுத்தியது, நாற்பது வருடங்களாக இந்த சமுதாயத்தில் ஆண் குழந்தைகளே பிறக்கவில்லை, பல வருடங்களாக மழையே இல்லை. 
இறைக் கட்டளை இப்படி இறங்கியது.
 { وَقِيلَ يَا أَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَا سَمَاءُ أَقْلِعِي وَغِيضَ المَاءُ وَقُضِيَ الأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الجُودِيِّ وَقِيلَ بُعْداً لِّلْقَوْمِ الظَّالِمِينَ) }- هود : 44     வானமே கொட்டு! பூமியே கக்கு!
 இந்த வார்த்தைகுள்ளிருந்து வெள்ளம் பிரவாகமெடுத்தது. மக்கள் வெள்ளம் ஓடியது; மறையவனின் வெள்ளம் துரத்தியது, சீக்கிரமே காரியம் முடிந்து விட்டது. "இப்னு அப்பாஸ் அவர்களின் கருத்துப்படி வானிலிருந்து பொழிந்த ஒரு சொட்டு நீர், ஒருபெரிய தோல்துருத்தியை கவிழ்த்து விட்டால் எவ்வளவு தண்ணீர் கொட்டுமோ அந்தளவு ஒருசொட்டு நீர் என்றார்கள்". மேலும் பூமியின் மட்டத்திலிருந்து என்பது மைல் உயரம் இருந்தது. இந்த பிரளயத்தில் செத்துப் போனவர்களின் எண்ணிக்கையை குறித்து வைக்கக்கூட ஆட்களில்லை. உத்ராஞ்சலில் பெய்த கனமழை அந்த மாநிலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது, என்றாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை. நூஹ் நபிகாலத்து வெள்ளத்தில் படைப்பினங்களின் ஒவ்வொரு ஜோடியை மட்டும் வைத்து விட்டு எல்லோரையும் மொத்தமாக இறைவன் அளித்து விட்டான்.
பிரளயகச் சோகம் ஒன்று: இந்த வெள்ளத்திலிருந்து தன் பச்சிளங் குழந்தையை பாதுகாக்க எண்ணி தாயொருத்தி தன் குழந்தையோடு மலை உச்சிக்கு ஏறினாள். அவளது காலைத் தொட்ட தண்ணீர், கழுத்தையும் தொட்டது: கையிலிருந்த குழந்தையையும் தொட்டது, கண்மூடி விழிப்பதற்குள் தாயிற்கும், சேயிற்கும் காரியமே முடிந்து விட்டது.
ஆம்! பிச்சளங்களையும் விட்டு விடாதே! என்ற நூஹ் நபியின் துஆவிற்கு இறைவன் கொடுத்த மரியாதை அது.
இவர்களின் குற்றம் என்ன?            أَنِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ وَأَطِيعُونِ 
இறைவனை வணங்குங்கள், அஞ்சுங்கள்,,வழிபடுங்கள் என்ற நூஹ் நபியின் போதனைக்கு மாறு செய்து இணைவைத்தார்கள்.    
2. மவ்த்தாகும்போது ஒவ்வொரு தகப்பனும் தன் பிள்ளைகளை அழைத்து நான் இருந்தாலும், இறந்தாலும் நூஹை எப்பொழுதும் பின்பற்றி விடாதீர்கள் என்று வஸிய்யத் செய்வார்களாம்.

ஹூத்நபி – ஆத் கூட்டம்:
சராசரியாக நூற்றியிருபது அடி உயரம், பாலைவன மணலில் ஒருபக்கம் நடந்தால் இன்னொரு பக்கம் விரிசல் விழும், மலையை மிதித்தால் விவசாய பூமிபோல குழைந்துவிடும், மலைகளை குடைந்து வீடுகளைக் கட்டிக் கொண்டவர்கள். இவ்வளவு ஆற்றலும் மிக்கவர்கள் தான் ஆத் கூட்டத்தவர்கள். இவர்களும் இறைத்தூதுவருக்கு மாறு செய்தார்கள். மூன்றுவருடமாக மழை இல்லாமல் அவதிப் பட்டார்கள். இறுதியில் எழுபது நபர்களைதெரிவு செய்து கஃபத்துல்லாஹ்விற்கு மழைவேண்டி துஆ செய்ய அனுப்பினார்கள். துஆ செய்துவிட்டு திரும்பும்போது மழை மேகங்கள் ஒன்றுகூடியது. சிறிது நேரத்தில் ஜில்லென்று காற்று வீசியது. மக்கள் எல்லோரும் ஒரு பள்ளத்தாக்கில் ஒன்று கூடினார்கள். அதுமட்டுமல்ல! எங்கள் துஆவின் சக்தியால் மழையை பெறப்போகிறோம் என்று பெருமையும் அடித்தார்கள்.
ஜில்லென்று வந்த தென்றல் காற்று பயங்கர சூறாவளியாய் படமெடுத்தது. பெருமையடித்த ஆத் கூட்டத்தார், பேய்க் காற்றிலிருந்து பாதுகாக்க, தங்கள் உடம்பில் பாதியை மலைக்குள் புகுத்திக் கொண்டு மீதியை இறுகப் பிடித்துக் கொண்டார்கள். எந்த பலனும் இல்லை. 
 كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ (4) فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ (5) وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (6) سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ (7) فَهَلْ تَرَى لَهُمْ مِنْ بَاقِيَةٍ  ஏழு இரவு எட்டுப் பகல் அடித்த காற்றால் லட்சக்கணக்கான ஆத்கூட்டத்தார்கள் தலையில்லாமல் முண்டமாக செத்து மடிந்தார்கள். இவர்களை பற்றி அல்லாஹ் குர்ஆனில்: 

  1. فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ
எங்களைவிட சக்திவாய்ந்தவர்கள் யார்? என்று பெருமையடித்தவர்களை கண்ணுக்கு தெரியாத காற்றைக் கொண்டு அழித்தான்.
இவர்களின் குற்றம் என்ன?
கட்டிடங்கள் கட்டுவதிலும், பெருமையடிப்பதிலும் காலத்தைக் கழித்தவர்கள். பெருமை இறைவனின் ஆடையல்லவா? தன் ஆடையை இழுத்தவர்களை அல்லாஹ் சுருட்டிப் பிடித்தான். எங்களை வெல்ல யாரிருக்கிறார்?! என்றவர்கள், சொல்லாமல்கொள்ளாமல் செத்துப் போனார்கள்.
ஸாலிஹ் நபி:
மதீனாவிலிருந்து அறநூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மத்யன் எனும் நகரம். இங்குள்ளவர்களுக்கு நபியாக அனுப்பப்பட்டவர்கள் தான் ஸாலிஹ் அவர்கள். இந்த மக்களுக்கு இறைத்தூதுவத்தை எடுத்துச் சொன்னார்கள்.
அந்த மக்களோ நபிக்கு மாறு செய்தது ஒருபுறம் இருந்தாலும் உடனே இந்தப் பாறை பிளக்க வேண்டும், அதற்குள் இருந்து ஒரு ஒட்டகம் வரவேண்டும், ஒட்டகம் வந்த உடனே ஒரு குட்டியும் போடவேண்டும் என்றார்கள். ஸாலிஹ் நபி, தனது ரப்பிடம் கேட்டு தன் சமூகத்திற்கு அதைப் போன்றே ஒட்டகத்தை வரவளைத்தும் காட்டினார்கள்.
பிறகு ஸாலிஹ் நபியவர்கள், தன் சமூகத்தாரிடம் கூறினார்கள். மக்களே! இந்த ஒட்டகம் அருளாய் உங்களிடம் வந்திருக்கிறது.                                                وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ
 எனவே ஒட்டகத்திற்கு எந்த தீங்கும் செய்து விடாதீர்கள். நீங்கள் இதுவரை எந்த கிணற்றில் தண்ணீர் பருகி வந்தீர்களோ அந்த கிணற்றில், ஒருநாள் நீங்களும், மறுநாள் இந்த ஒட்டகமும் தண்ணீர் குடிக்க வகை செய்யுங்கள், எந்த நாளில் ஒட்டகம் தண்ணீர் அருந்துமோ அந்த நாளில் உங்களின் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் இந்த ஒட்டகம் வரும். தங்களுக்குத் தேவையான அளவு அது உங்களுக்கு பால் கொடுக்கும் என்றார்கள். காலங்கள் உருண்டோடின. தாயும் சேயுமாய் ஒட்டகமும் குட்டியும் ஊரை வலம் வந்து கொண்டிருந்தன. ஒருநாள் அனீசா என்ற அழகியொருத்தி குதார் என்ற ரவுடியை அழைத்து என்னை உனக்குத் தருகிறேன், நீ ஒட்டகத்தை கொலை செய் என்றாள். பெண்ணுக்காக பெற்ற குழந்தையை கொலைசெய்கிற கூட்டம், ஒட்டகத்திற்காக தயங்கவா போகிறார்கள். குதாரோடு சேர்த்து மொத்தம் ஒன்பது நபர்கள் ஒவ்வொருவீடாக சென்று ஆலோசனை செய்தார்கள். எல்லோரும் ஒட்டகத்தை கொள்வதில் ஒருமித்தக் கருத்தோடு இருந்தார்கள்.
ஒருநாள் புதன்கிழமை, ஒட்டகம் தன் குட்டியோடு வந்துகொண்டிருக்கும் பொழுது ஒருவன் ஒட்டகத்தின் கால் நரம்பைத் தரித்தான். இன்னொருவன் கழுத்தை அறுத்தான். கத்திக் கொண்டே ஒட்டகம், தன் குட்டியை எச்சரித்தது! குழந்தாய்! ஓடிவிடு. இங்கே சதிகாரர்கள் இருக்கிறார்கள். தாயின் எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு, ஓடிப்போய் தான் வந்த பாறைகுள்ளேயே குட்டி நுழைந்து கொண்டது.  தாய் ஒட்டகமோ கத்திக் கொண்டே கீழே சாய்ந்து உயிரை விட்டது.
வியாழன் காலை. தூங்கி எழுந்த மக்களின் முகமெல்லாம் மஞ்சள் நிறத்தில் இருந்து,
வெள்ளி காலை. தூங்கி எழுந்த மக்களின் முகமெல்லாம் சிவப்பு நிறத்தில் இருந்தது.
சனி காலை. தூங்கி எழுந்த மக்களின் முகமெல்லாம் கருப்பு நிறத்தில் இருந்தது. அன்று சூர்யோதத்தோடு பெரும் சப்தம் ஒன்றும் கேட்டது. அந்த சப்தத்தைக் கேட்ட எல்லோரும் காதில் ரத்தம் வடிய ஒட்டகம் போன்று கத்திக் கொண்டே செத்துப் போனார்கள்.
இவர்களின் குற்றம் என்ன?
இறைக் கட்டளையை மீறினார்கள். வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்ட போதும் எதேச்சையாக நடந்து கொண்டார்கள். ஒரேயடியாக அழிந்து போனார்கள்.
படிப்பினை: நூஹ் நபியின் சமுதாயம் போல் நம்மிலும் பலர் இணைவைப்பில் ஈடுபடுகிறோம், ஆனாலும் அவர்களைப் போன்று இன்னும் நாம் அளிக்கப்படவில்லை.
ஹூத் நபியின் சமுதாயம் போல் நம்மிலும் பலர் பெருமையடிக்கிறோம், அவர்களைப் போன்றே வீடு கட்டுவதில் நேரத்தை வீணடிக்கிறோம்,ஆனாலும் அவர்களைப் போன்று இன்னும் நாம் அளிக்கப்படவில்லை.
ஸாலிஹ் நபியின் சமுதாயம் போல் நம்மிலும் இறைக்கட்டளையை மீறுபவர்கள் உண்டு. ஆனாலும் அவர்களைப் போன்று இன்னும் நாம் அளிக்கப்படவில்லை.

اللَّهُمَّ لا تَقْتُلْنَا بِغَضَبِكَ ، وَلا تُهْلِكْنَا بِعَذَابِكَ ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ 







   



No comments:

Post a Comment